
``எங்க தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது!’’

``நிஜமாவா?’’
``ஆமாம். அவரோட கல்யாண பத்திரிகையிலகூட அவர் பேரைப் போட்டுக்கலைனா பாருங்களேன்!’’
- வி.சாரதி டேச்சு
``சார், ஒரு வண்டி நிறையப் பணம் கொண்டுபோறாங்க. கேட்டா

`வாக்கு வங்கி’க்குக் கொண்டுபோறதா சொல்றாங்க!’’
‘‘ஓ.கே. `வங்கி’க்குன்னா விட்டுருங்க!’’
- கி.ரவிக்குமார்
``தலைவர் டோட்டலி கன்ஃப்யூஸ்டு.’’

``எப்படிச் சொல்றே?’’
`` `மேற்கிந்தியத் தீவு அணி, வங்கதேச அணிகூட கூட்டணி வெச்சுக்கலாமா?’னு கேக்கிறாரே!’’
- எஸ். முகம்மது யூசுப்
‘‘எதிர்க்கட்சித் தலைவர் என்னைப் பார்த்து அரை லூஸுனு சொல்றார்யா!’’

‘‘விடுங்க தலைவரே, அவங்களுக்கு எதுவும் முழுசாவே தெரியாது!’’
- எஸ்.முகம்மது யூசுப்

‘‘நம்ம தலைவரோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு!’’
‘‘ஏன்?’’

‘‘தலைவரை ஷேர் ஆட்டோவுலகூட ஏத்த மாட்டேங்கிறாங்களே!’’
- வி.சாரதி டேச்சு
‘‘ஜட்ஜ் ஏன் கோபப்பட்டாரு?’’

‘‘ `நல்ல தீர்ப்பு சொல்றீங்களே... நீங்க ஏன் ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கக் கூடாது?’னு கேட்டேன்!’’
- எஸ்கா

ஓவியங்கள்: சுரேஷ்
“அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி வாழ்க்கை எப்படிப் போச்சு தலைவரே?”

“முற்பகல் செயின் பிற்பகல் மோதிரம்னு ஜாலியாப் போச்சு!”
- சி.சாமிநாதன்
“பைக் திருடிக்கிட்டு இருந்த நீ, இப்ப கார் திருடனா மாறிட்டியே, ஏன்?’’

“ `ஹெல்மெட்டில் இருந்து ஸீட் பெல்ட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளுங்கள்’னு வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்துதான் எஜமான்!’’
- ஏந்தல் இளங்கோ
“தலைவரே கூட்டணி எப்படி?’’

“மிக்ஸர் சூப்பர்யா!”
- எஸ்.கோபாலன்
“ `தலைவர் ஜெயிச்சா ஊழல் செய்றது உறுதி’னு எப்படிச் சொல்றே?”

“ `வெல்லுவோம்... அள்ளுவோம்’ங்கிறாரே!”
- எஸ்.ராமன்
‘‘விஜயகாந்த் `இல்லை'னு சொன்னதும் தலைவர் என்னமோ கேட்டாரே, என்னவாம்?’’

‘‘ `விஷால், கார்த்திகூட பேசலாமா?’ங்கிறார்!’’
- அம்பைதேவா
‘‘மீண்டும் ரெளடி தொழில் செய்யும் அளவுக்கு தலைவரின் உடலில் தெம்பு இல்லை என்பதால், தயவுசெய்து அவரை எம்.எல்.ஏ-வாக வெற்றிபெறச் செய்யுமாறு...’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்
‘‘தலைவருக்கு மிகவும் பிடித்த `மிக்ஸர்’ பொட்டலத்தை எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமாக வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை...’’

- கே.லக்ஷ்மணன்
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...''

‘‘கண்டிப்பா வர மாட்டோம் தலைவரே, பயப்படாமப் பேசுங்க!’’
- ச.ம. இனியன்