Published:Updated:

ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

பா.ஜான்ஸன்

ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

பா.ஜான்ஸன்

Published:Updated:
ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

`ஹவுஸ் வொய்ஃப்' என்பது நமக்கு பழகிய சொல். ஆனால், ஹவுஸ் ஹஸ்பெண்ட்? அதுதான் இந்தப் படம். ஹவுஸ் ஹஸ்பெண்ட் + வொர்க்கிங் வொய்ஃப் என்ற சீரியஸ் கான்செப்ட்டில் வந்திருக்கும் செம ஜாலி சினிமா, `கி அன்டு கா'.
 
கியாவுக்கு (கரீனா கபூர்) சில கனவுகள் உண்டு... தான் பார்க்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் வேலையில் இருந்து பதவி உயர்வுபெற்று, வைஸ் பிரசிடென்ட், சி.இ.ஓ என உயர வேண்டும். கபீருக்கும் (அர்ஜுன் கபூர்) சில கனவுகள் உண்டு... தன் அம்மாவைப்போல ஒரு ஆர்டிஸ்ட் ஆக வேண்டும். அவனது அம்மா ஒரு ஹவுஸ் வொய்ஃப். வீட்டைத் தொடர்ந்து இயங்கவைக்கும் ஒரு ஆர்டிஸ்ட். கரீனாவும் அர்ஜுனும் ஒரு விமானப் பயணத்தில் சந்தித்துக்கொள்ள சின்ன நட்பு உருவாகிறது. பேசிப் பழகி, பின் அது காதலாக மாறுகிறது.

அர்ஜுனின் ஹவுஸ் ஹஸ்பெண்ட் கான்செப்ட் கரீனாவின் கனவுகளுக்கு வழிவிட, அர்ஜுன் கழுத்தில் தாலி கட்டுகிறார் கரீனா. பெட் காபி தொடங்கி இரவு டயர்டாக வரும் மனைவியின் காலணிகளைக் கழற்றி விடுவது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் செய்துமுடிக்கும் பொறுப்பான கணவன்... இந்தச் சுதந்திரத்தால் தனது அலுவலக வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்துமுடிக்கும் மனைவி... என கதை மிக அழகாகச் சென்றுகொண்டிருக்க, இருவருக்கும் இடையில் வருகிறது ஒரு ஈகோ சண்டை. அது என்ன... இருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது இயக்குநர் பால்கியின் ஸ்பெஷல் டச்.

ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

`ஓ, அப்போ நீ கியாவோட சம்பளத்துல சாப்பிடப் போறியா?'

`இதுவே பொண்ணா இருந்தா, அவளும் அதைத்தானே செய்வா? ஆம்பளைக்கு ஒரு நியாயம்... பொம்பளைக்கு ஒரு நியாயமா?'

`இங்க லவ் பிரச்னை இல்லை. `நான் சம்பாதிக்கிறேன்... நீ வீட்ல இருக்கே’ங்கிற ஈகோதான் பிரச்னை.'

`என்னால உழைக்க முடியும். ஆனா, தேவை இல்லாத விஷயத்துக்காக உழைக்கப் பிடிக்கலை.'

`வீட்டு வேலை செய்யப்போறேன்னு சொன்னதும் என் ஆண்மை மேல சந்தேகப் படாதீங்க. நான் ஒண்ணும் கே இல்லை. எனக்குப் பொண்ணுங்களைப் பிடிக்கும்; விஸ்கி பிடிக்கும். ஆனா, வேலை, லட்சியம் தர்ற ஸ்ட்ரெஸ் இவைதான் பிடிக்காது' எனப் படம் முழுக்க பால்கியின் வசனங்கள் அனைத்தும் பளிச், பளிச். கொஞ்சம் மிஸ்ஸானாலும், `பாரம்பர்யக் குடும்ப முறையைக் கேலிசெய்கிறார்' என கொடிபிடித்துக் கிளம்பிவிடும் அபாயம் இருந்தும், அதை மெல்லியக் கோட்டில் கடந்துசெல்கிறார் பால்கி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹவுஸ் ஹஸ்பெண்ட் தெரியுமா?

படத்தில் கரீனா - அர்ஜுன் கபூர் நடிப்பு + கெமிஸ்ட்ரி ரெண்டும் பக்கா. `வீட்டுவேலைகள் செய்யும் கணவனாகப்போகிறேன்' எனச் சொன்னதும் கோபப்படும் `பில்டர்' அப்பாவிடம், `நீங்க பெரிய பெரிய கட்டடங்களை உருவாக்குறீங்க. நான் வீட்டை உருவாக்குறேன்' எனக் கூறுவதும், கரீனாவின் அம்மாவிடம் `உங்களுக்கு ஓ.கே-னா சொல்லுங்க. நாம ரெண்டு பேரும் ஓடிப்போயிடலாம்' என வம்பு இழுப்பதும்... பையன் நடிப்பில் எக்ஸலன்ட் கை.

அர்ஜுனைவிட வயதில் சீனியராகக் கெத்துக் காட்டும் கரீனாவும் செம பெர்ஃ பாமென்ஸ் கொடுக்கிறார். லேட் நைட் வீட்டுக்கு  வந்து அர்ஜுனுடன் ரொமான்ஸுவது, திடீரெனப் புகழடையும் அர்ஜுனைப் பார்த்து பொறாமைப்படுவது என விதவித எக்ஸ்பிரஷன்ஸ். இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் கேமரா என நாம் நெருக்கமாக ரசிக்க மேலும் பல அம்சங்கள் படத்தில் உண்டு.

`கணவன்தான் வேலைக்குச் செல்ல வேண்டுமா... அவன் வீட்டைக் கவனித்துக் கொண்டு, மனைவி வேலைக்கு சென்றால் என்ன?’ என மனதில் தோன்றிய ஒரு வரிக்கு உருவம் கொடுத்து, அட்டகாசத் திரைக் கதையாக்கி, எல்லோரையும் யோசிக்கவைத்த விதத்தில் இதுதான் உண்மையான இந்திய சினிமா!