Published:Updated:

"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

பா.ஜான்ஸன்

"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

“இன்ஜினீயரிங் படிப்பை பாதியில விட்டுட்டு, ஏழெட்டு வருஷம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். ஆனா, பெருசா வளர முடியலை. அப்போ  நிறைய  இன்டர்நேஷனல் படங்கள்  பார்க்க ஆரம் பிச்சேன்.  சினிமா  ஆர்வம்  அதிகமாச்சு. நிறையக் குறும்படங்கள் எடுத்தேன். சில படங்களில் நடிக்கவும் செஞ்சேன். ஆனா, எனக்கு ஆர்வம் எல்லாம் டைரக்‌ஷன் பக்கம்னு புரிஞ்சு கிட்டேன். யோகராஜ் சார் என் கதைகளை இயக்கும்போது, அதில் அசோசியேட்டா வேலை செஞ்சேன். பிறகு முதல் படம் ‘லைஃப்பு இஷ்டனே’ இயக்கினேன். அடுத்ததுதான், ‘லூசியா’. இப்போ `யூ-டர்ன்' ரிலீஸுக்குத் தயாரா இருக்கு” - உறுதியாக, நம்பிக்கையாகப் பேச ஆரம்பிக்கிறார் கன்னட பட இயக்குநர் பவன் குமார். `லூசியா' மூலம் கனவில் ‘யூ-டர்ன்’ அடித்தவர், தன் அடுத்தப் படத்துக்கு ‘யூ-டர்ன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார். இந்த முறை இவரது கதைக்களம், த்ரில்லர்.

`` `லூசியா'வுக்குப் பிறகு கன்னட சினிமாவில் நல்ல மாற்றங்கள்... மகிழ்ச்சிதானே?’’

``நிச்சயமா... ஆனா, `லூசியா'வாலதான் அந்த மாற்றம்னு முழு கிரெடிட்டையும் நான் எடுத்துக்க முடியாது. தைரியமா ஒரு புது முயற்சியில் இறங்க நம்பிக்கையைக் கொடுத்திருக்காங்க. லோ பட்ஜெட் சினிமாக்களுக்கு ஒரு மதிப்பு வந்திருக்கு. சில முயற்சிகள் தோற்கத்தான் செய்யுது. ஆனா, அது எல்லா இண்டஸ்ட்ரியிலும் நடக்கிறதுதானே? முக்கியமா, ஸ்டார் படங்கள் மட்டுமே ஓடின நிலை மாறி இப்போ புது இயக்குநர்களின் படங்களையும் மக்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.''

"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

`` `யூ-டர்ன்’ என்ன மாதிரியான சப்ஜெக்ட்?’’

``இது ஒரு மிஸ்டரி த்ரில்லர். பெங்களூருல இருக்கும் டபுள் ரோடு மேம்பாலம்தான் படத்தின் முக்கியப் பாத்திரம். அங்கு நடக்கும் ஒரு மர்மமான சம்பவம், அதைப் பற்றி தகவல் சேகரிக்கவரும் ஒரு ஜர்னலிஸ்ட்னு வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும்.''

``தயாரிப்பாளராகிட்டீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

``என் முதல் படத்தில் இருந்தே நான் அறிவிக்கப் படாத தயாரிப்பாளர்தான். ஏன்னா, ஒவ்வொரு செலவிலும் ரொம்பக் கவனமா இருப்பேன். `லூசியா'வில் பலருடைய பணத்துக்குப் பதில் சொல்லும் இடத்திலும் இருந்தேன். அது பெரிய சவால். நிச்சயம் ஒரு தயாரிப்பாளருக்கான பிரஷர் இருக்கத்தான் செய்யுது. ஆனா, அது எனக்குப் பிடிச்சிருக்கு.''

``க்ரவுடு ஃபண்டிங்... ப்ளஸ் - மைனஸ் என்ன?’’

``ப்ளஸ் என்னன்னா, நீங்க செய்ய நினைக்கும் சினிமாவுக்கான பணத்தை நிச்சயமா உங்களால சேகரிக்க முடியும். மார்க்கெட் ரிஸ்க் கம்மிதான். மைனஸ்னு பார்த்தா, எந்தச் சிக்கலும் வந்துடாம பார்த்துக்கணும். நம்பகத்தன்மை இல்லாம போகும் வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.''

``புது முயற்சிகள், பேரலல் சினிமா, நியூவேவ் சினிமானு புதுசுப் புதுசா வர்றாங்க. ஆனா, ஆடியன்ஸ் இந்த மாற்றத்துக்குத் தயாராகிட்டாங்கனு நினைக்கிறீங்களா?’’

``எல்லா துறைகளிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்துக்கு இடையில நிறைய மாற்றங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆடியன்ஸுக்கு திடீர்னு மாற்றத்தின் உச்சத்தைக் காட்டப்போறது இல்லை. போன தலைமுறையில் இருந்த ஒரு ஸ்டீரியோ டைப்பை மாத்துறோம். மாற்று சினிமா முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கும்போது, இங்க ஒவ்வோர் இயக்குநருக்கும் தேவையான ஆடியன்ஸும் உருவாகிட்டுத்தான் இருக்காங்க. இயக்குநருக்கு இருக்கிற சவால் அதைச் சரியாகக் கொண்டு போய் சேர்க்கிறதுதான்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"யூ-டர்ன் அடிக்க வர்றேன்!”

`` ‘லூசியா’ படத்தின் தமிழ் ரீமேக், ‘எனக்குள் ஒருவன்’ பார்த்தீங்களா?’’

``ஆமா, பார்த்தேன். படத்தின் சில போர்ஷன்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒரிஜினலுக்கு சமமா வரணும்னு நிறைய உழைச்சிருந்தாங்க. ஆனா, அவங்க சில விஷயங்கள் சரியா பண்ணலை. அப்படிப் பண்ணாதது எல்லாம்தான் படத்தோட ஆன்மாவா இருந்தது. அதனாலதான் அது எல்லாரையும் ஈர்க்கலைனு தோணுது. ஆனா, படத்தோட தரம், சித்தார்த்தின் நடிப்பு எல்லாம் பாராட்டப்படவேண்டியவை.''
 
``தமிழ்ப் படங்கள் பார்ப்பது உண்டா?’’

``பார்த்திருக்கேன். மணிரத்னம் தொடங்கி கார்த்திக் சுப்புராஜ் வரை நிறைய நல்ல படைப்புகள் கொடுக்கிறாங்க. எனக்கு விஜய் சேதுபதியின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு.''