ஆந்திரா மசாலாவை இம்போர்ட் செய்து, பாலிவுட் தயாரித்த `குருமா'தான் சல்மான் கானின் `தபாங்’. `எப்படிடா இந்த டேஸ்ட்டை மிஸ் செய்தோம்?’ என அதன் ரீமேக் உரிமையை வாங்கி, `கப்பர் சிங்’ ஆக்கி, 10 வருட ஃப்ளாப் ரெக்கார்டை உடைத்தார் பவன் கல்யாண். அதன் பிறகு அவரது கிராஃப் எகிற, இப்போது `கப்பர் சிங் சீஸன் - 2'.

ரெளடிகளை ரகளைசெய்யும் ஹைதராபாத்் போலீஸ், கப்பர் சிங் (பவன் கல்யாண்). நண்பர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, பவனை ரத்தன்பூருக்கு பதவி உயர்வோடு பார்சல்செய்கிறார் உயர் அதிகாரி தனிக்கெல்லா. ரத்தன்பூரை, இரண்டு ராஜ குடும்பங்கள் ஆண்டுவருகின்றன. ஒன்று இளவரசி அர்ஷி (காஜல் அகர்வால்) குடும்பம், இன்னொன்று பைரவ் சிங் (ஷரத் கெல்கர்) குடும்பம். ஷரத் கெல்கருக்கு, ஊர் மக்களை அடிமைப்படுத்தி, விவசாய நிலங்களைக் கைப்பற்றும் டெம்ப்ளேட் தெலுங்கு வில்லன் வேலை. எதிர்த்து கேள்வி கேட்கும் ஆட்களைக் கொன்று குவிக்க, அதைத் தடுப்பதற்காக வருபவர்தான் பவன் கல்யாண். `யெஸ்’ சொல்பவனை எதிர்த்து நின்று `நோ’ சொன்னால் என்ன ஆகும்? அந்தக் களேபரம்தான் படம்.

தனக்கு ஏற்ற சைஸில் ஒரு பக்கா ஸ்கிரிப்டை தானே தைத்திருக்கிறார் பவன். ஆம், படத்துக்கு கதை, திரைக்கதை பவனேதான்.

``எந்த ஊர்லயாவது சிங்கம், கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கா... அப்புறம் எப்படிடா சர்தார் ஆசீர்வாதம் வாங்குவான்?'' என வில்லனிடம் மாஸ் காட்டுவது, காஜலுடன் காதல், கான்ஸ்டபிள் டீமுடன் காமெடி என பவனின் சம்மர் ட்ரீட், பக்கா மாஸ். ஹீரோ- வில்லன் ஈகோ, வெடிக்கும் துப்பாக்கி, தெறிக்கும் தோட்டா என ஆக்ஷன் மசாலா ரசிகர்களுக்கு அன்லிமிடெட் கொண்டாட்டம்தான். ஐபோன் ஸ்டைல் மாஸ் படத்துக்கு, தேவிஸ்ரீபிரசாத் பின்னணி இசைதான் 4ஜி நெட். குறிப்பாக, அந்த இன்டர்வல் ஃபைட் சீன் தெறீஈஈஈஈ.

ஆனால், காக்கிச் சட்டையில் பட்டனை கழற்றுவது, பேன்ட்டுக்குப் பதில் கைலி கட்டுவது, கெளபாய் ஸ்டைல் டபுள் பேரல் துப்பாக்கி வைத்திருப்பதுதான் மாஸ் என எழுதப் பட்டிருக்கும் கதையை, இயக்குநர் கே.எஸ்.ரவீந்திரா கொஞ்சம் பட்டி டிங்க்கரிங் பார்த்திருக்கலாம். பவன் படத்தில் பன்ச் வசனங்களுக்கு இவ்வளவு பஞ்சமா? பவன், ரசிகர்களை ஏமாற்றவில்லைதான். ஆனால், பவன் வெறும் நடிகராகவே இருந்திருக்கலாம். கதை, திரைக்கதை எழுத இன்னும் பயிற்சி வேண்டும் சர்தார். முதல் பாகத்தில் இருந்த துள்ளல் + ஹ்யூமர் + ஆக்ஷன் என்ற கச்சிதம் இதில் மிஸ்ஸிங்.
நிறையக் குறைகள் இருந்தாலும், படம் ரசிகர்களைக் குஷிப்படுத்தும். காரணம், பவனிசம்!

``உனக்கு 30 வயசு வரும்போது, குடும்பம், வேலை, தொழில்னு வாழ்க்கை ஒரே திசையில் பயணிக்கும். அதுவே 25 வயசுல, உனக்கு முன்னால இருக்கும் உலகத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கும். அதை நீ பயன் படுத்தலைனா, நீ உன்னோட வயசை வேஸ்ட் பண்ணிட்டேனு அர்த்தம்'' இது ஜேக்கப் அவரது மகன் ஜெர்ரிக்குச் சொல்லும் சின்ன அட்வைஸ். ஆனால், இந்த அட்வைஸ்தான் அவர்களுடைய குடும்பத்தின் தலைவிதியை மாற்றுகிறது.

`தட்டத்தின் மறயத்து', `திரா' படங்களுக்குப் பிறகு வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்' படம், ஜேக்கப் அழகாகப் பார்த்து அமைத்துக் கொண்ட சொர்க்க ராஜ்ஜியத்தின் கதையைச் சொல்கிறது.

துபாய்க்கு வந்து செட்டில் ஆன கேரளத்து பிசினஸ்மேன் ஜேக்கப் சர்காரியா (ரென்ஜி பணிக்கர்). மனைவி ஷெர்லி (லட்சுமி ராமகிருஷ்ணன்), மகன்கள் ஜெர்ரி (நிவின் பாலி), எபின் (ஸ்ரீநாத்), க்ரிஷ் (ஸ்டாசென்), மகள் அம்மு (ஐமா) என அவர்கள் வாழ்க்கை மிக அழகானது. முழுத் தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக் கிறது ஜேக்கப்பின் குடும்பம். திடீரென ஒருநாள் ஜேக்கப் தன் நண்பர்களிடம் இருந்து முதலீடாக வாங்கிக் கொடுக்கும் பணத்தை ஒருவன் ஏமாற்றிவிட, ஜேக்கப்பின் குடும்பமே நிலைகுலைந்துபோகிறது. ஒரே நாளில் நண்பர்கள் எல்லோரும் கடன் காரர்களாக மாறி `என்னோட பணம் திரும்ப வரலைன்னா, உன் மொத்தக் குடும்பத்தையும் ஜெயில்ல தள்ளிடுவேன்' என்கிறார்கள். இந்தப் பிரச்னையில் இருந்து தன் சொர்க்கத்தை மீட்டெடுக்கும் கதைதான் மீதிப் படம்.

நிஜ சம்பவம். அந்த உணர்வுகளை அப்படியே செல்லுலாய்டில் கொண்டுவந்ததில் கைதேர்ந்த இயக்குநராகியிருக்கிறார் வினித் ஸ்ரீனிவாசன்.

திடீரென நிகழும் ஒரு சம்பவத்தால் படத்தில் அதுவரை இருந்த குதூகலம் மாறி சீரியஸ் ஆனதும் கொஞ்சம் மெகா சீரியல் ஸ்மெல். ஆனால், தொடர்ந்து வரும் காட்சிகளால் மறக்க முடியாத ஓர்அனுபவத்தைத் தருகிறது படம்.

படத்தில் நிவின், லட்சுமி ராமகிருஷ்ணன், குடும்ப நண்பராக வரும் சாய்குமார், கார் டிரைவராக வரும் டி.ஜி.ரவி என அத்தனை பேரின் நடிப்பும், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் இயல்பாக இருக்கின்றன. அதுதான் கேரளா ஸ்டைல்.

``எனக்குனு எந்த லட்சியமும் இல்லப்பா, எனக்கு உங்களை மாதிரி வரணும்.''

``என்ன மாதிரி நான் இருக்கேன்ல, அப்புறம் எதுக்குடா நீ?, என்னோட மக்கள் தனித் தன்மையோடு இருக்கணும்னுதான் எனக்கு விருப்பம். என்னோட குளோனிங்கா இல்லை'' என நிவினிடம் ரென்ஜி சொல்லும் காட்சியும் க்ளைமாக்ஸில் நிவினும் ரென்ஜியும் பேசிக் கொள்ளத் தயங்கி, பின்னர், நிவின் தோளில் ரென்ஜி கைபோடும் காட்சியும் அழகு.

மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால், `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்', நிச்சயம் உங்களை சிரிக்கவைக்கும்; மகிழவைக்கும், வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையையும் கொடுக்கும்.