Published:Updated:

பாலிவுட் பப்ளீஸ்!

பாலிவுட் பப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பாலிவுட் பப்ளீஸ்!

பா.ஜான்ஸன்

பாலிவுட் பப்ளீஸ்!

பா.ஜான்ஸன்

Published:Updated:
பாலிவுட் பப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பாலிவுட் பப்ளீஸ்!

தீபிகா, பிரியங்கா என சீனியர்கள் அனைவரும் ஹாலிவுட் ஃப்ளைட் பிடித்துவிட, பப்ளி ஹீரோயின்ஸ் என்ட்ரியால் பளபளக்கிறது பாலிவுட்.

ஷாரூக் கான், அமீர் கான், ரன்பீர் கபூர் என டாப் ஹீரோக்களின் அடுத்த படங்களில் நடிப்பது எல்லாமே இளசுகள்... புதுசுகள்!

ஃபாத்திமா சனா ஷாய்க்

பாலிவுட் பப்ளீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனாவின் சினிமா தொடக்கமே உலக நாயகனுடன்தான். `அவ்வை சண்முகி'யின் இந்தி ரீமேக்
`சாச்சி 420' படத்தில், கமலின் மகளாக நடித்ததே ஒரு குழந்தை... அதே பாப்பாதான். `டங்கல்' படத்தில் அமீர் கானின் மகளாக அதுவும் மல்யுத்த வீராங்கனை கீதா போகத்தாக நடிக்கிறார் சனா. நடிப்பு தவிர நடனம், போட்டோகிராஃபியிலும் சனா கில்லி.

கியாரா அத்வானி

பாலிவுட் பப்ளீஸ்!

கியாரா, பக்கா மும்பை பொண்ணு. அப்பா பிசினஸ்மேன், அம்மா டீச்சர். கியாரா குடும்பத்தில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரே ஆள் இவரது அத்தை ஜூஹி சாவ்லா மட்டுமே. அத்தையின் வழிகாட்டுதலில் சினிமாவுக்கு டிக் அடித்த கியாரா, அனுபம் கெர் நடத்தும் ஆக்ட்டிங் ஸ்கூல் மாணவி. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பயோபிக்கான `எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் சாக்‌ஷியாக நடிக்கிறார் கியாரா. தோனியைப் போலவே கியாராவுக்கும் பைக் காதல் அதிகம்!

அதா ஷர்மா

பாலிவுட் பப்ளீஸ்!

பாதி தமிழ்நாடு... பாதி கேரளா என காரசாரமான காக்டெய்ல் அதா ஷர்மா. அப்பா மதுரைக்காரர், அம்மா பாலக்காடு. ஆனால், அதா வளர்ந்தது, படித்தது மும்பை. 10-ம் வகுப்பு படிக்கும்போதே நடிப்பு ஆர்வம் வெடித்துக் கிளம்ப, படிப்பை நிறுத்திவிட்டு நடிக்கப்போகிறேன் எனக் கிளம்பிவிட்டார் அதா. 2008-ம் ஆண்டில் விக்ரம் பட் இயக்கத்தில் `1920' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம். தெலுங்கில் அதா நடித்த `ஷனம்' தெறி ஹிட் அடிக்க, இப்போது பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட். அனுராக் பாசு இயக்கும் `ஜக்கா ஜசூஸ்' படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்கிறார் அதா.

சயிஷா சாய்கல்

பாலிவுட் பப்ளீஸ்!

பாலிவுட் நடிகர் சுமீத் சாய்கல் - நடிகை ஷஹீனா பானுவின் மகள்தான் சயிஷா சாய்கல். இந்தி `தேவதாஸ்' பட ஹீரோ திலீப்குமாரின் பேத்தி. நாகார்ஜுனாவின் மகன் அகிலுடன் தெலுங்கில் அறிமுகம் ஆனவர், இப்போது அஜய் தேவ்கான் இயக்கி நடிக்கும் `ஷிவே' மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

ஆயிஷா கபூர்

பாலிவுட் பப்ளீஸ்!

`பாஜிராவ் மஸ்தானி' புகழ் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய `பிளாக்' படத்தில் ராணி முகர்ஜியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவர், இந்த ஆயிஷா. அப்போதே நடிப்பில் சிக்ஸர் அடித்த ஆயிஷாவுக்குப் பல விருதுகள் கிடைத்தன. இப்போது 21 வயதில் ஃபுல்டைம் நடிகையாகிவிட்ட ஆயிஷா, சேகர் கபூரின் அடுத்த படமான `பானி'-யில் நடிக்கிறார். `தோனி’ படத்தில் நடிக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோ, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என ஆயிஷாவுக்கு இது வேற லெவல் என்ட்ரி.

மஹிரா கான்

பாலிவுட் பப்ளீஸ்!

16 வயதிலேயே வி.ஜே-வாக தன் மீடியா கரியரைத் தொடங்கிய மஹிராவின் சொந்த ஊர், கராச்சி. பாகிஸ்தான் எம் டி.வி சேனலில் `மோஸ்ட் வான்டட்’, ஆக் டி.வி-யின் `வீக் எண்ட் வித் மஹிரா' நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியவருக்கு, ஷோயப் மன்சூர் இயக்கிய `போல்' என்ற உருதுப் படம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரொமோஷன் கொடுத்தது. தொடர்ந்து `பின் ரோய்', `மன்டோ', `ஹோ மன் ஜான்' என உருதுப் படங்களில் கலக்கியவருக்கு இப்போது அடித்திருக்கிறது ஜாக்பாட். ஷாரூக் கானின் `ராயீஸ்' படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுக்கிறார் மஹிரா. பிரிட்டிஷ் பத்திரிகையான `ஈஸ்டர்ன் ஐ', ஆசியாவின் 50 செக்ஸியான பெண்கள் பட்டியலில் மஹிராவுக்கு 10-வது இடம் கொடுத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism