Published:Updated:

'உளவாளி’ விக்ரம்!

   'உளவாளி’ விக்ரம்!
பிரீமியம் ஸ்டோரி
'உளவாளி’ விக்ரம்!

ம.கா.செந்தில்குமார்

'உளவாளி’ விக்ரம்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
   'உளவாளி’ விக்ரம்!
பிரீமியம் ஸ்டோரி
'உளவாளி’ விக்ரம்!
   'உளவாளி’ விக்ரம்!

‘‘த்ரில்லர் ப்ளஸ் கமர்ஷியல் கலந்த ஆக்‌ஷன் படம். அதில் ஒரு சின்ன சயின்ஸ் ஃபிக்‌ஷனையும் கலந்திருக்கோம். விக்ரமுக்கு இதில் இரு முகங்கள். ஒரு முகனை முடிச்சுட்டோம். இப்போ இரண்டாவது முகனுக்கான படப்பிடிப்பு போய்க்கிட்டிருக்கு’’ - உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். `அரிமா நம்பி'யில் கவனிக்கவைத்தவர் இப்போது ‘இருமுகன்’ இயக்குகிறார்.

 ‘`இது விக்ரமுக்கான கதை. ஒன்லைன் ரெடியானதும் போய்ச் சொன்னேன். ‘ஐடியாவே சூப்பரா இருக்கு. இதை டெவலப் பண்ணி ஸ்கிரிப்ட்டா சொல்ல எவ்வளவு நாள் ஆகும்?’னு கேட்டார். ரெண்டு மாசத்துல ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சு கொடுத்தேன். ஸ்கிரிப்ட்டில் அவர் கேரக்டருக்குனு ஸ்பெஷல் டச்சும் அதிகப்படியான சவால்களும் இருந்தா மட்டுமே அவர் படத்துக்கு ஓ.கே சொல்வார். இதில் அந்த ரெண்டுமே இருந்ததால், கதையைக் கேட்டு முடிச்சதுமே கால்ஷீட் கொடுத்துட்டார்.’’

‘‘ ‘இருமுகன்’ என்ன கதை?’’

‘‘ `இருமுகன்’ படத்தில் ஒரு முகன் பேரு அகிலன். வெளிநாடுகளில் உளவுபார்க்கும் ரா ஏஜென்ட். ஒரு பிரச்னையைத் தீர்க்கிறதுக்காக இங்கே இருந்து மலேசியா போறார். அது என்ன மாதிரி பிரச்னைங்கிறதும் அதை எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் திரைக்கதை. ஆக்‌ஷன், ரொமான்ஸ்னு அவ்வளவு அழகா பண்ணியிருக்கார் விக்ரம் சார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   'உளவாளி’ விக்ரம்!

ஒட்ட வெட்டிய தலைமுடி ப்ளஸ் தாடி இதுதான் அகிலன் கேரக்டரின் கெட்டப். கொஞ்சம் கூடுதலா தலைமுடி வளர்ந்தாக்கூட தப்பாத் தெரியும். அதனால மூணு நாட்களுக்கு ஒருமுறை ட்ரிம் பண்ணவேண்டியிருக்கும். இந்த ஹேர்ஸ்டைல் பண்ணினவர் மும்பையில் உள்ள ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட். ‘அவர் மூணு நாளைக்கு ஒருமுறை இங்கே வந்து ட்ரிம் செஞ்சுட்டுப் போறது சிரமம். இங்கேயே யாரையாவது பிடிச்சுப் பண்ணிக்கலாம்’னு சொன்னா காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டார். ஒவ்வொரு முறையும் விக்ரம் சார் இங்கே இருந்து கிளம்பி மும்பைக்குப் போய், முடியை ட்ரிம் செஞ்சுட்டு நேரடியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இறங்குவார். இது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம்.

ஒரு பாடல் காட்சிக்கு பழங்குடியினர்போல கழுத்து தொடங்கி கைவிரல் நுனி வரைக்கும் பாடி பெயின்ட்டிங் வரையலாம்னு முடிவெடுத்தோம். பெஸ்ட் டாட்டூ ஸ்பெஷலிஸ்ட்டை அழைச்சோம். 8 மணிக்கு ஷூட்டிங். அதிகாலை 4 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து பாடி பெயின்ட்டிங்கை முடிச்சுட்டு ஷூட்டிங்குக்குத் தயாராகிட்டார். அது படத்துல 10 செகண்ட் வர்ற காட்சிதான். ஆனா, ஃபைனல் குவாலிட்டியைப் பார்க்கும்போது இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. விக்ரம் சார் உழைக்கிறதுக்கு எப்பவுமே தயார். இப்படி ஒரு நடிகர் கிடைச்சிருக்கிறது, எங்களுக்கு மிகப் பெரிய பலம்.’’

   'உளவாளி’ விக்ரம்!

‘‘முதல் முறையாக விக்ரம்-நயன்தாரா காம்பினேஷன். என்ன ஸ்பெஷல்?’’

‘‘நயன்தாராவுக்கு மிக முக்கியமான ரோல். `மீரா’ என்கிற கேரக்டர்ல நடிக்கிறார். விக்ரம் சார் போலவேதான் இவரும் பக்கா புரொஃபஷனல். ஒரு சமயத்துல ஒரு படம் மட்டுமே பண்ணும் ஹீரோகிட்ட, ‘கெட்டப் சேஞ்ச் பண்ணணும்’னு கேட்கிறதுல நியாயம் இருக்கு. ஆனா, ஒரே நேரத்துல நான்கைந்து படம் பண்ணும் நயன்தாராவிடம் அப்படிக் கேட்கிறது நியாயம் இல்லை. அப்படியும் ஒருநாள், ‘இந்தக் கேரக்டருக்கு வித்தியாசமான ஸ்டைலிங், ஹேர் கலரிங் இருந்தா நல்லா இருக்கும். பண்ண முடியுமா?’னு கேட்டேன். அவர் ஒண்ணும் சொல்லலை. நான் விக்ரம் சாருடன் மலேசியாவுல ஷூட்டிங்கை ஆரம்பிச்சுட்டேன். நயன்தாரா போர்ஷன் ஆரம்பிக்கிறப்போ எனக்கு அதிர்ச்சி. நான் எதிர்பார்த்தபடியே ஹேர்ஸ்டைலை மாத்திக்கிட்டு வந்திருந்தார். தலையில் வலது, இடது பக்கங்களில் பிங்க் கலரிங் பண்ணியிருந்தார். அதுவும் தற்காலிகமா பண்ணும் கலரிங் கிடையாது. பெர்மனென்ட் ஹேர் கலரிங். ‘இது கேரக்டருக்கு சூப்பர். ஆனா, மத்த படங்கள் எப்படிப் பண்ணுவீங்க?’னு கேட்டேன். ‘ஏதாவது விக் வெச்சுக்கூட மேனேஜ் பண்ணிக்கிறேன்’ என்றார். எனக்கு நயன்தாரா மேல் இருந்த மரியாதை பல மடங்கு எகிறிடுச்சு.’’

   'உளவாளி’ விக்ரம்!

‘‘படத்துல நித்யா மேனனும் இருக்காங்களே?’’

‘‘நித்யா மேனன் செம கேரக்டர். ஒரு இயக்குநராவே யோசிப்பார். வழக்கமான வசனமா இருந்தா, சண்டைபோடுவார்.  படப்பிடிப்புக்கு மூணு நாட்களுக்கு முன்னாடியே சீன் பேப்பர் அனுப்பலைனா, அவருக்குக் கோபம் வந்துடும். கதையை ஆழமா உள்வாங்கி, இயல்பாக நடிக்கக்கூடியவர். நயனும் நித்யா மேனனும் கதையில வெவ்வேறு டைம்லைனில் வருவாங்க. உண்மையில நித்யா மேனன், விக்ரம் சாரின் தீவிர ரசிகை. அவரோட நடிக்கணும்கிறது நித்யா மேனனுக்கு நீண்ட நாள் ஆசையாம். ‘ஆயுஷி’ங்கிற இந்த கேரக்டர் மூலம் அவரோட ஆசை நிறைவேறியிருக்கு.’’

   'உளவாளி’ விக்ரம்!

‘‘ஹாரிஸ் மியூஸிக், ஆர்.டி.ராஜசேகர் கேமரா... என்ன பண்ணியிருக்காங்க?’’

‘‘ `நல்ல கதை என்ற எண்ணம் இசையமைப் பாளருக்கு வந்தால் அழகான இசை அமையும்’னு சொல்வாங்க. இந்தக் கதையை உள்வாங்கி, முழு இன்வால்வ்மென்ட்டோடு ஹாரிஸ் சார் இசையமைச்சிருக்கார். பாடல்கள் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும். முருகதாஸ் சார் உடன் வேலைபார்க்கிறப்போ ஆர்.டி சார் அறிமுகம். ‘அரிமா நம்பி’க்கு த்ரில்லர் பரபரப்பையும் அழகையும் ஒருசேரத் தந்ததில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கு. ‘இருமுகன்’ போன்ற பெரிய புராஜெக்ட்டில் ஆர்.டி சார் மாதிரி சீனியர் டெக்னீஷியன் கூட இருக்கிறது பெரிய பலம். அவர் டைரக்டரின் கேமராமேன். `கதைக்குள்ள என்ன பெஸ்ட் காட்ட முடியும்?’னு பார்ப்பாரே தவிர, கதைக்குச் சம்பந்தம் இல்லாத சிங்கிள் ஷாட்கூட எடுக்க மாட்டார். என் நெருங்கிய நட்பு வட்டத்துல சிலர் டீஸர் பார்த்துட்டு, ‘விக்ரம், நயன், நித்யா மூணு பேருமே அழகா இருக்காங்க. செமையா லுக் டிசைன் பண்ணியிருக்கீங்க’னு பாராட்டினாங்க. அந்தப் பாராட்டு ஆர்டி சாருக்கே சொந்தம்.  பல சிக்கல்களைக் கடந்தும் `இருமுகன்’ இன்று பிரமாண்ட படமாக வரக் காரணமான தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸுக்கு நன்றி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism