பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

''மன்னா... உம்மைப் புகழ்ந்து நான்கு பக்கங்களில் கவிதை வடித்துள்ளேன்.''

''ஹூம்... நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துவிட்டது என்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்!''

- க.கலைவாணன்

ஜோக்ஸ்

''தலைவர் புது வீடு கட்டினாரே, என்னாச்சு?''

''கிரகப் பிரவேசம் நடக்கறதுக்கு முந்தியே ரெய்டு நடந்துடுச்சு!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

''நீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனைன்னு உனக்குத் தெரியுமா?!''

''மன்னிக்கனும் எசமான்! நான் லா காலேஜ்ல சேர்த்து படிக்கலீங்களே?!''

- எஸ்.கோபாலன்

ஜோக்ஸ்

''ஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்த பிறகாவது, எங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம் என்று நாக் கூசாமல் பொய்ப் பிரசாரம் செய்து வரும் எதிர்க் கட்சியினர் திருந்துவார்களா?''

-தென்றல் நாசர்

ஜோக்ஸ்

''எங்க தலைவர் கோர்ட் வாசலை மிதிக்கிறது இதுதான் முதல் முறை!''

''அதுக்காக 'எங்கே நமீதா, குஷ்பு, மீனா, கலா மாஸ்டர் எல்லாம் காணோம்?’னு ஜட்ஜ் ஐயாகிட்ட கேட்கறது ரொம்ப ஓவர்!''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

''கட்சி மாறி கார் வாங்கினீங்க இல்லே... மறுபடியும் ஏன் வேற கட்சிக்கு மாறிட்டீங்க?''

''என்ன பண்றது? காருக்குப் பெட்ரோலும் வாங்கணுமே?!''

- விகடபாரதி

ஜோக்ஸ்

 ''எதிர் வீட்டு ரகுவை மறந்துடு!''

''அட, அவனை எப்பவோ மறந்துட்டேன்பா... இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்!''

- ராம்.ஆதிநாராயணன்

ஜோக்ஸ்

''வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால சாதிச்சுட்டேன்!''

''எப்படி?''

''எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியலால உடைக்கணும்னு நினைச்சேன். முடியலே. தீபாவளிக்கு என் மனைவி செய்த சீடையை அன்போடு கொடுத்தேன். காரியம் முடிஞ்சிருச்சு!''’

- பெ.பொன்.ராஜபாண்டி

ஜோக்ஸ்

''என்னது... குருவி வெடி இல்லையா?''

''ஆமாங்க... அங்கங்கே செல்போன் டவர்கள் வந்ததுக்கப்புறம் குருவி வெடிக்கு டிமாண்டாயிடுச்சு!''

- ஜக்கி

ஓவியம்:பிள்ளை

ஜோக்ஸ்

''வீட்டு வாசல்ல 'தெருநாய் ஜாக்கிரதை’னு போர்டு வச்சிருக்கீங்களே... ஏன்?''

''சாயந்திரமானா தெருவுல இருக்கிற நாய்கள்ல ஒண்ணைப் புடிச்சு வீட்டு காம்பவுண்டுக்குள்ளே விட்டுடுவேன்!''

- அம்பை தேவா
 

ஜோக்ஸ்

''கட்சி மாறி வந்தவருக்கு தலைவர் காரை குடுத்துட்டு என்ன கேட்கறார்?

''கட்சியில எத்தனை வருஷம் இருப்பீங்கன்னு வாரண்டி கேட்கறார்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

''நிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள் புலவரே!''

''எதற்கு மன்னா?''

''இல்லையென்றால், உமக்குத் தருவதற்குப் பொற்காசுகள் இல்லை, கஜானா காலி என்று சொல்லிவிடுவார்!''

- சீர்காழி வி.வெங்கட்

ஜோக்ஸ்

''தலைவர் விட்ட அறிக்கையைப் பார்த்து எல்லோரும் அசந்து போயிட்டாங்களாமே!''

''ஆமா! நரகாசூரனைக் கொன்றவர்களை விசாரிக்க சி.பி.ஐ. வரவேண்டும்னு சொல்லியிருக்கார்!''

- பெ.பொன்.ராஜபாண்டி

ஜோக்ஸ்

''தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்!''

''என்னன்னு..? வருமானத்துக்கு மேல சொத்து சேத்துட்டார்னா?''

''இல்லை. ஊழலுக்கு மேலேயும் சொத்து சேர்த்துட்டாராம்!''

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு