மலையாள சினிமாவின் நம்பிக்கை இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன். பாடகர், நடிகர், இயக்குநர், கதாசிரியர் என ஏகப்பட்ட ரோல்கள். நிவின் பாலியைக் கண்டுபிடித்து திரையுலகத்துக்குக் கொடுத்த கொலம்பஸ் இவரேதான்.

``என் படங்கள்ல நகைச்சுவை கொஞ்சம் தூக்கலா இருக்கும். ஆனால் `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்' சீரியஸான உணர்வுகளைப் பற்றிய படம். அந்தப் படம் வெளியாகும் வரை பயந்துட்டே இருந்தேன். ஆனா, இப்போ எல்லாருக்கும் படம் பிடிச்சிருச்சு'' - உற்சாகமாகப் பேசுகிறார்.

`` `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', `தட்டத்தின் மறயத்து', `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்கள். எப்படி இருக்கு?’’

`` `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' எனக்கு இயக்குநராகவும், நிவின் பாலிக்கு நடிகராகவும் முதல் படம். முழுக்கவே இளைஞர்கள் டீம். ஏழு நண்பர்கள் பற்றிய கதை. எழுதின ஸ்கிரிப்டைப் பக்காவா ஷூட் பண்ணோம். படம் நல்லா போச்சு. அடுத்து `தட்டத்தின் மறயத்து' காதல் கதை. அந்த மெல்லிய ரொமான்ஸ் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. உண்மையில் நடந்த ஒரு கதைதான் `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்'. என் நண்பர் குடும்பம் துபாய்ல சந்திச்ச, அனுபவிச்ச விஷயங்களைத்தான் படமா எடுத்தேன். நிஜ விஷயங்களைப் படமா எடுக்கும்போது எல்லோரும் தங்களை அதோடு தொடர்பு படுத்திக்கிறாங்க... படத்துக்கும் வெற்றி கிடைக்குது.''

`` `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்' படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருந்ததாச் சொன்னாங்களே?''

``ஆமாம்... இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் ஆர்வமா `நான் தயார்’னு உற்சாகப் படுத்தினார். அவர் போர்ஷன் எல்லாம் துபாய்ல நடக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதை ஷூட் பண்ணும்போது சென்னையில் பெரும் மழை வெள்ளம். எங்களுக்கும் ஷூட்டிங்கைத் தள்ளிவைக்க முடியாத சூழல். அதனால் ஒரு புது நடிகரைவெச்சு எடுத்துட்டோம். ஆனா, கௌதம் சார் நடிச்சிருந்தா படத்துக்கு வேற ஒரு டோன் கிடைச்சிருக்கும்.''

``திடீர்னு மலையாளத் திரைத் துறையில் புதுசா, விதவிதமான கான்செப்ட்களோடு படங்கள் வந்திட்டு இருக்கே. இந்த மாற்றம் எப்படி நடந்தது?''

``2010-ம் ஆண்டில் இருந்து மலையாளத்தில் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது எழுத்தாளர்கள்னு நிறையத் திறமைசாலிகள் வந்தாங்க. வழக்கமா வர்ற மசாலா படங்களை ரிப்பீட் பண்ணாம, வேற வேற கதைகள், களங்கள்னு முயற்சிபண்ண ஆரம்பிச்சாங்க. இவை எல்லாம் சேர்ந்து மலையாள சினிமாவுக்கு புது கலர் வந்திருக்கு. தமிழ், தெலுங்கு, இந்தினு எல்லா சினிமா ரசிகர்களும் மலையாள சினிமாவைக் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. புதிய ரசிகர்கள் கிடைத்திருப்பதால், நாங்களும் உற்சாகத்தோடு வேலைசெய்றோம்.''

``நீங்க அறிமுகப்படுத்திய நிவின் பாலிக்கு இப்போ தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. எப்படி அவரை சினிமாவுக்குள் கொண்டுவந்தீங்க?''

`` `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' பட ஆடிஷன் வெச்சிருந்தப்ப, அதில் கலந்துக்கவந்தார் நிவின் பாலி. `பிரேமம்'ல தாடி எல்லாம் வெச்சு, பிளாக் கலர் சட்டை போட்டு ஒரு கெட்டப் இருக்குமே, அதுபோலவே வந்தார். அவரைப் பார்த்ததுமே எங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, ஜாலியா நடிக்க சரியா வருவாரானு ஒரு சந்தேகம் இருந்தது. அவரோடு பழக ஆரம்பிச்சப் பிறகுதான் செம ரகளையான நிவின் பாலியைப் பார்த்தேன். அதுதான் என் ரெண்டாவது படம் `தட்டத்தின் மறயத்து'வில் அவரை நடிக்கவைக்கக் காரணம். முதல் ரெண்டு படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலை எல்லாம் சென்னையிலதான் நடந்தது. நாங்க கடைக்குப் போய் டீ சாப்பிட்டுட்டு சுத்திட்டிருப்போம். அப்போ அவரை யாருக்கும் தெரியாது. `ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தை சென்னை, கும்பகோணத்துல ஷூட் பண்ணோம். அப்போ நிவின் பாலியை அடையாளம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, `பிரேமம்' படத்துக்குப் பிறகு கேரளாவில் அவர் வெளியே வந்தா எப்படி கூட்டம் சேருமோ, அதே அளவுக்கு சென்னையிலும் கூட்டம் கூடுது. அந்த அளவு நிவின் பிரபலமான ஆளாகியிருக்கார். நிவினை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு.''

``ப்ரித்விராஜ், ஃபகத் பாசில், துல்கர் சல்மான்னு நிறைய ஹீரோஸ் இருக்காங்களே... அவங்களோட படம் பண்ணணும்னு தோணலையா?''

``இவங்க எல்லாருமே எனக்கு அவ்ளோ க்ளோஸ். துல்கர் சின்ன வயசுல இருந்தே என் நண்பன். ஒவ்வொரு படமும் பார்த்துட்டு துல்கர்கிட்ட பேசுவேன். ஃபகத்தும் நானும் ரெண்டு படங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம். ப்ரித்விராஜ் சாருக்கு நான் பெரிய ஃபேன். நாங்க எல்லாருமே ரொம்ப நெருக்கமான ஆட்கள்தான். சீக்கிரம் படம் பண்ணிடுவோம்.''

``நீங்க பாடுற எல்லா பாடல்களுமே ஹிட் அடிக்குதே?’’

``பாட்டு கேட்க ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே பாடவும் பிடிக்கும். தமிழ்ல `மாரி' படத்தில் வரும் `ஒருவித ஆசை வருகிறதா', `அங்காடித் தெரு' படத்தில் `அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', `பிரிவோம் சந்திப்போம்'ல `இருவிழியோ சிறகடிக்கும்'னு மனசுக்குப் பிடிச்ச பாடல்கள் நிறையப் பாடிட்டேன். இப்போகூட `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்'ல ரெண்டு பாட்டு பாடியிருக்கேன். என் குரல் எல்லோருக்குமே பிடிச்சிருக்கிறதுல எனக்குக் ரொம்பவே கர்வம்.''

``குறைந்த பட்ஜெட், குறைந்த நேரம்... ஆனால் தரமான படங்கள். எப்படிச் சாத்தியம்?''

`` மலையாளப் படங்களுக்கான மார்க்கெட் சின்னது. என்ன பண்ணாலும் நமக்கு இவ்வளவுதான் வருமானம் வரும்னு வியாபாரக் கணக்கு இருக்கு. கிடைக்கிற சூழலில், இருக்கும் விஷயங்களை வெச்சே, என்ன சிறப்பா பண்ண முடியும்னு யோசிக்கிறதுதான் எங்க பலம். சரியா திட்டமிட்டு வொர்க் பண்றோம். வெற்றி கிடைக்குது. மக்கள்கிட்ட போய்ச் சேரப்போறது அந்தக் கதாபாத்திரங்களும் அவங்க கடத்துற உணர்வுகளும்தான். அதை அவங்களுக்குப் புரிய வெச்சிட்டாலே போதும், சின்னச்சின்னச் சமரசங்கள் இருந்தாலும் பிரச்னை இல்லை.''

``உங்கள் `தட்டத்தின் மறயத்து' படம் தமிழில் ரீமேக் ஆகுது. தமிழ்ப் படம் எதுவும் ரீமேக் பண்ணும் எண்ணம் இருக்கா?’’

``முதல்ல `தட்டத்தின் மறயத்து' படத்தின் தமிழ் வெர்ஷன் `மீண்டும் ஒரு காதல் கதை' வெற்றிபெறணும். எனக்கு எப்போதும் ரீமேக் பண்ற எண்ணம் இல்லை. ஒரு படம் நாம ரீமேக் பண்ண நினைக்கிறோம்னா, அது ரொம்ப நல்லா எடுக்கப்பட்ட படமா இருக்கும். அதை நாம எடுத்துக் கெடுத்துரக் கூடாது.''

``குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?''

``நான் படிச்சது, ஆரம்பத்துல வேலைசெஞ்சது எல்லாமே சென்னையிலதான். என் மனைவி பேர் திவ்யா. காலேஜ்லதான் சந்திச்சோம். கிட்டத்தட்ட கௌதம் மேனன் சார் படம் மாதிரிதான் எங்க காதல் வாழ்க்கை. இதோ கல்யாணம் ஆகி நாலு வருஷங்கள் ஆகிருச்சு. ரொம்ப நல்ல தோழியா, நல்ல மனைவியா, என் கதைகள்ல சின்னச்சின்னத் திருத்தங்கள் சொல்லிக்கிட்டு என் வாழ்க்கையில நிறைய ரோல்ஸ் பண்றாங்க. திவ்யா... என் பெரிய பலம்.''