Published:Updated:

காமமும் காதலும் சேர்ந்த வலி...

நா.கதிர்வேலன்

காமமும் காதலும் சேர்ந்த வலி...

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##
'பா
லா ஹீரோ’ என்ற இரண்டே வார்த்தைகளால் பரபரப்பாகிவிட்ட அதர்வா... இப்போது எல்ரெட் குமாரின் கஸ்டடியில்!

 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'கோ’ படங்களின் தயாரிப்பாளர் குமார், இப்போது 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் இயக்குநர். ஆப்பிள் போனில் அதர்வா  - அமலா பால் ரொமான்ஸ் காட்டிவிட்டு என் ரியாக்ஷன் பார்த்துத் திருப்தி ஆகிறார்.  

''போட்டோஸ் செம டேஸ்ட்டா இருக்கு...''

''தேங்க்ஸ் சார். படத்தையும் அதே ரசனையோடு உருவாக்கிட்டு இருக்கோம். தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, அமெரிக்கானு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போற கதை. பதற அடிக்கிற குப்பத்து வாழ்க்கைல இருந்து மிதக்கவைக்கிற அமெரிக்க வாழ்க்கை வரைக்கும் ஒரு இளைஞன் கடந்து போற உணர்ச்சிகளின் பதிவு இது.

அதர்வா-அமலா ஸ்டில்ஸை நல்லாப் பார்த்தீங்கன்னா, ஹீரோயின் முகத்தில் ஒரு வலி இருக்கிறது தெரியும். காமத்தைவிட ஒரு அக்கறை புரியும். எல்லாக் காதலனுமே அடி மனசுல அவனோட அம்மாவின் சாயலைத்தான் தன் காதலியிடம் தேடுவான். அப்படி ரெண்டாவது அம்மா மாதிரி அதர்வாவின் வாழ்க்கையில் வர்றாங்க அமலா.

காமமும் காதலும் சேர்ந்த வலி...

தமிழ் சினிமாவின் 75 வருஷ வரலாற்றில் எத்தனையோ காதல் பாடல்கள் வந்திருக்கு. ஆனா, காதலை புரொபோஸ் பண்ணும்போது ஒரு காதலன் காதலிக்கு என்னல்லாம் பரிசு தரலாம்னு லிஸ்ட் போடுற ஒரு பாட்டு இது வரைக்கும் வரலைனு நினைக்கிறேன். அப்படி ஒரு பாட்டை காதல் ஸ்பெஷல் தாமரை எழுதி இருக்காங்க. 'தாஜ்மகாலைத் தரலாம், ஷாஜகானாய் மாறலாம், உனக்குப் பிறகு நான் வாழ வேண்டாமே’னு ஒவ்வொரு வரியும் காதல் பாடும்.

காமமும் காதலும் சேர்ந்த வலி...

இப்படி ஒவ்வொரு நிமிஷமும் அவளோட அவன் அனுபவிச்சு வாழ்ற வாழ்க்கையைத் திடும்னு கலைச்சுப் போடுது ஒரு விஷயம்... அதுதான் ட்விஸ்ட். இந்தப் படத்தைப் பற்றி நீங்க ஏதாவது கணிப்புகளோட வந்தீங்கன்னா, நிச்சயமா அதை அடிச்சு உடைச்சுப் போட்டு நிறைய ஆச்சர்யங்கள் தரும்!''

''அமலா ஓரளவு சீஸன் ஆயிட்டாங்க. அதர்வா என்ன சொல்றார்?''

''இந்தப் படத்தினால், பொண்ணுங்க மனசுல பச்சக்குனு இடம் பிடிச்சுடுவார். அடுத்து பாலா படம். நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வருவார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ கதையை முதல்ல நான் வேற ஒரு ஹீரோவுக்குத்தான் சொன்னேன். கதையைக் கேட்டு முதல்ல ஓ.கே. சொன்னவர், ஒரு வாரம் கழிச்சு 'யோசிச்சேன் சார்... இவ்வளவு வேலைகளை நான் பண்ண முடியுமானு தெரியலை. உங்க படத்துக்காக மட்டுமே டெடிகேட்டடா இருந்தால்தான் சரியா வரும். ஸாரி... என்னால முடியாது சார்’னு சொல்லிட்டார். ஏன்னா, இந்தப் படத்துக்கு அவ்வளவு உழைப்பு தேவைப் பட்டுச்சு. ஹீரோ ஒரு வருஷமாவது என் கூடவே இருக்கணும். அதர்வா கதை கேட்டார். சிக்ஸ் பேக், அக்ரோபிக்ஸ்னு தடதடனு அத்தனையும் வொர்க்-அவுட் பண்ணிட்டு வந்து நின்னார். 'ஹேங் ஓவர்-டு’ ஹாலிவுட் படத்துல நடிச்ச ஜாவேத் எல்பெரினிதான் வில்லன். க்ளைமாக்ஸ் ஃபைட்ல  அதர்வாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ற அளவுக்கு ரியல் வெறியாட்டம்.

காமமும் காதலும் சேர்ந்த வலி...

அமலா மார்க்கெட்டுக்கு இந்தப் படம் அடுத்த லெவல். ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அவ்வளவு இயல்பா இருக்கு. ஸ்பாட்ல வெச்சுப் பார்த்தீங்கன்னா, சம்திங் சம்திங்னு எழுதி இருப்பீங்க.  

அப்புறம் இசைக்கு ஜி.வி.பிரகாஷ், கேமராவுக்கு சக்தினு எனர்ஜியும் இளமையும் நிரம்பிய டீம் அமைஞ்சது மேஜிக். மாயாஜாலங்கள் சாத்தியம்னு நம்புறேன்!''

''கௌதம் மேனன், கே.வி.ஆனந்த்னு இளம் தலைமுறை இயக்குநர்களோட நெருங்கிப் பழகியவர் நீங்க. இயக்குநர் அந்தஸ்தின் பொறுப்பு பயமுறுத்தலையா?''

''ஏகப்பட்ட பயம் இருந்தது. அதை உடைச்சது கௌதம்தான். இப்படி ஒரு கதைனு அவர்கிட்ட சொன்னதும், 'நீங்களே டைரக்ட் பண்ணுங்க. அதுதான் சரி’னு சொன்னார். ஆனா, நான் இன்னொருத்தரை டைரக்டராப் போட்டுப் படத்தை ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த டைரக்டரே வந்து, 'இல்லை சார், இது நீங்க

காமமும் காதலும் சேர்ந்த வலி...

பண்ணினால்தான் சரியா வரும்’னு சொன்னார். ரெண்டு பேரும் பரஸ்பரம் பேசிப் புரிஞ்சுக்கிட்டோம். நான் டைரக்டர்ஆனேன். இப்போ கௌதம் சொன்னதுதான் சரினு ஃபீல் பண்றேன். நிச்சயமா இந்தக் கதையில் நான் உணர்ந்த விஷயங்களை இன்னொருத்தர் பண்ண முடியும்னு தோணலை. நீங்க நம்புவீங்களானு தெரியலை... ஆனா நிஜம். இந்த காம்பினேஷனை வெச்சுட்டு 20 கோடி பட்ஜெட் செலவு பண்றேன். ஒரே நம்பிக்கை... கதைதான். எனக்கு எப்பவும் கதைதான் ஹீரோ. 'வி.டி.வி.’-யோ 'கோ’-வோ... புதுமுகம் நடிச்சிருந்தாக்கூட அவ்வளவு செலவு பண்ணி இருப்பேன்!

இப்போ கௌதமோட 'நீதானே என் பொன் வசந்தம்’ ஆரம்பிச்சாச்சு. கார்த்தி-ஜெஸ்ஸி எல்லாம் காணாமப்போற அளவுக்கு இது பிரமாதமான லவ் சப்ஜெக்ட். அடுத்து வெற்றிமாறன் கூட ஒரு படம். ஒரு தயாரிப்பாளரா, இயக்குநரா ஜனங்களைச் சந்தோஷப்படுத்துற நல்ல சினிமாக்களைக் கொடுத் துட்டே இருக்கணும். எனக்கு முப்பொழுதும் அந்தக் கற்பனைகள்தான்!''