Published:Updated:

பாட்டு கேட்டால் காசு! - Doopaadoo.com

பாட்டு கேட்டால் காசு!  - Doopaadoo.com
பிரீமியம் ஸ்டோரி
பாட்டு கேட்டால் காசு! - Doopaadoo.com

கார்க்கிபவா, படம்: மீ.நிவேதன்

பாட்டு கேட்டால் காசு! - Doopaadoo.com

கார்க்கிபவா, படம்: மீ.நிவேதன்

Published:Updated:
பாட்டு கேட்டால் காசு!  - Doopaadoo.com
பிரீமியம் ஸ்டோரி
பாட்டு கேட்டால் காசு! - Doopaadoo.com
பாட்டு கேட்டால் காசு!  - Doopaadoo.com

``இங்கே இன்டர்நெட் பிசினஸ் என்றாலே, `இங்கிலீஷ்ல வெற்றிபெற்ற ஓர் இணையதளத்தை அப்படியே நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி மாத்துறது’னு ஒரு பேச்சு இருக்கு. ஆனா, `டூபாடூ' அப்படி அல்ல. இது முழுக்க முழுக்க எங்களோட பிரெய்ன் சைல்டு’' - தம்ஸ்அப் காட்டி ஆரம்பிக்கிறார் மதன் கார்க்கி. கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் பாடலாசிரியர், அதற்கு சற்று ஓய்வுதந்துவிட்டு முழுமூச்சுடன் புதிய புராஜெக்டில் களம் இறங்கியிருக்கிறார். அது என்ன டூபாடூ?

“மேற்கத்திய நாடுகள் மாதிரி இல்லை இந்தியா. இங்கே எல்லா இடங்களிலும் பைரஸி அதிகம். இசையில் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட சினிமா மட்டுமே முக்கியமான தளமா இருக்கு. யூடியூப் மாதிரி சில விஷயங்கள் வந்திருந்தாலும், அதில் பிரபலம் கிடைக்குது. ஆனா, வருமானம் இல்லை. இவ்வளவு கோடிப் பேர் ரசிக்கிற சினிமாவுலகூட ஆடியோ கம்பெனிகள், `காசு வர்றது இல்லை’னு சொல்றாங்க. நம்ம சூப்பர் ஸ்டார்ஸ் நடிக்கிற, முன்னணி இசையமைப் பாளர்கள் இசையமைத்த படங்களையே ஐட்யூன்ஸ்ல 1,000 பேர்தான் டவுண்லோடு பண்றாங்க. தேவை இருக்கு. ஆனா, அந்த வருமானம் முறையா படைப்பாளிகளுக்குப் போய்ச் சேர்றது இல்லை. அது ஏன்னு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் `டூபாடூ' ” என்கிறார் மதன் கார்க்கி.

இவருடன் கவுந்தேயா மற்றும் சரவணன் ஆகியோரும் இந்த புராஜெக்ட்டில் இணைந்திருக்கின்றனர்.

`டூபாடூ' என்பது, பாடல்களைக் கேட்டு மகிழ உதவும் ஓர் இணையதளம். இதற்கு யார் வேண்டுமானாலும் தங்கள் பாடல்களை அனுப்பலாம். டூபாடூவில் இருக்கும் விமர்சகர்கள் அந்தப் பாடலைக் கேட்டு `சரி'யென்றால், அந்தப் பாடல் ரசிகர்கள் பார்வைக்கு வரும். கிடைக்கும் ஒவ்வொரு ஹிட்ஸுக்கும் பணம் உண்டு. அந்தப் பாடல் சம்பாதிக்கும் பணத்தில், 50 சதவிகிதம் டூபாடூவுக்கும், 40 சதவிகிதம் அந்தப் பாடலை உருவாக்கியவருக்கும், 10 சதவிகிதம் அதைக் கேட்பவருக்கும் செல்லும். ஆம், பாடலைக் கேட்கும் ரசிகர்களுக்கும் பணம் தருகிறது டூபாடூ.

பாட்டு கேட்டால் காசு!  - Doopaadoo.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பைரஸியை ஒழிப்பது ஈசியான வேலை இல்லைன்னு எங்களுக்குத் தெரியும். இப்ப இருக்கிற இணையச்சூழல்ல எல்லாமே இலவசமாத்தான் கிடைக்குது. உலகத்துல அதிகம் பேர், ஒரு நாள்ல அதிக நேரம் பயன்படுத்துற ஃபேஸ்புக்கே ஃப்ரீதான். மாறியிருக்கிற வியாபாரச் சூழல்ல, விளம்பரதாரர்கள் மூலமா பணம் பண்ணலாம். அதைத்தான் பைரஸி தளங்களும் செய்யுது. அதை நாம பண்ணா, நிச்சயம் ரசிகர்கள் ஆதரவு இருக்கும்னு நம்பினோம். அதேசமயம் விளம்பரதாரர்கள் எங்ககிட்ட வர்றதுக்குக் காரணமே ரசிகர்கள்தான். அதனால அவங்களுக்கும் அதுல ஒரு சின்னப் பகுதியைக் கொடுக்கலாமேனு யோசிச்சப்ப, இந்த மாடல் கிடைச்சது” என்கிறார் மதன் கார்க்கி.

ஏப்ரல் 20-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, ஸ்ருதிஹாசன் எனப் பிரபலங்களின் முன்னிலையில் `டூபாடூ'வை ஆரம்பித்துவைத்திருக்கிறார்கள். தினமும் ஒரு பாடல் என, தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது டூபாடூ. முதல் பாடலைத் தந்திருப்பவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். முதல் மூன்று நாட்களிலேயே 300-க்கும் மேற்பட்ட பாடல்களை அனுப்பி யிருக்கிறார்கள் முகம்தெரியாத திறமைசாலிகள். எல்லாவற்றையும் கேட்டு, முதல் கட்டமாக 80 பாடல்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.

சில பாடல்களில் குரல் மாற்றலாம், வரிகளை மாற்றலாம் என இசை விமர்சகர்கள் ஆலோசனைகளும் தந்திருக்கிறார்கள்.

``டூபாடு, பாடல்கள் கேட்பதற்கான இடம் மட்டும் அல்ல; ஃபேஸ்புக்போல, இசைக்கான ஒரு சோஷியல் மீடியாவும்கூட. இசைக் கலைஞர்கள், தங்களது திறமைகள் பற்றிய தகவல்களை இங்கே பதிவுசெய்துகொள்ளலாம். இசையமைப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான திறமைகளைத் தேர்வுசெய்ய நாங்கள் உதவுகிறோம். உதாரணமாக, ஒருவருக்கு 20 வயதில் ஒரு பெண் குரல் தேவை. தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்றால், அந்தத் தகுதியில் இருக்கும் எல்லா பயனர்களையும் டூபாடூ-வே தேர்வுசெய்து கொடுக்கும். அவர்கள் பாடிய பாடல்களின் மாதிரிகளையும் டூபாடூவில் பார்த்துக்கொள்ளலாம். இருவருக்கும் சரி என்றால், அவர்கள் இருவருக்கும் இடையே ஒப்பந்தம்போடுவது வரை டூபாடூ உதவும். அமெரிக்காவில் இருக்கும் இசையமைப்பாளர், சென்னையில் இருப்பவரைப் பாடவைத்து, அதன் மிக்ஸிங்கை ஹாங்காங்கில் செய்யலாம். இதை ஒருங்கிணைக்கும் வேலையை டூபாடூவில் செய்யலாம். ஓர் இசை ரியாலிட்டி ஷோவையே எங்களால் இணையத்தில் நடத்திக்காட்ட முடியும்” என்கிறார் உற்சாகமாக.

பாட்டு கேட்டால் காசு!  - Doopaadoo.com

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் கடைசிப் பாடல் டூபாடூவில் இருக்கிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இசையமைக்கும் முதல் பாடலை டூபாடூவுக்குத் தருவதாகக் கூறியிருக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்து அனிருத் வரை பலரும் தங்களது பங்களிப்பைத் தரப்போகிறார்கள். இவர்களுக்கு நடுவே நீங்களும் உங்கள் பாடலை அரங்கேற்றலாம். அதன் மூலம் பிரபலம் ஆகலாம்; சம்பாதிக்கவும் செய்யலாம். ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு திறக்காத அலிபாபா குகைக் கதவு, எல்லோருக்கும் திறக்கக் காத்திருக்கிறது.

`டோபாமைன்' என்பது, இசை கேட்கும்போது உடலில் சுரந்து நம்மை உற்சாகப்படுத்தும் ஒரு சுரப்பி. அதில் இருந்து உருவானதுதான் டூபாடூ.

ஆல் த பெஸ்ட் டூபாடூ.