`பெங்காலி சினிமா’ என்றதும், என்ன மாதிரியான சித்திரம் மனதுக்குள் வருகிறது?

ஸ்லோமோஷனில் நகரும் கேமரா, சிவப்பு பார்டரில் வெள்ளை நிறச் சேலை கட்டிய பெண்ணின் சோக முகம், சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், மிருணாள்சென், `பதேர் பாஞ்சாலி’, தேசியவிருது, `இந்தியாவிலேயே மலையாளத்துக்குப் பிறகு ரசனையான படங்கள் எடுக்கிற இண்டஸ்ட்ரி' என்ற குரல். ஆனால், யதார்த்தம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவுக்குக் கொஞ்சமும் குறைவே இல்லாத மாஸ் மசாலா படங்கள்தான் இப்போது பெங்காலி சினிமாவில் செம ஹிட். கலர் கலராக உடை அணிந்து வெளிநாட்டு மண்ணில் ஆடும் ஹீரோ-ஹீரோயின்ஸ், ஒரே பன்ச்சில் நூறு பேரைத் தூக்கி அடிக்கும் மெடிக்கல் மிராக்கிள் ஹீரோயிசம், கன்னாபின்னா கவர்ச்சி நடனங்கள், நீண்ட தலைமுடி, கொலைவெறி வில்லன்கள்... எல்லாமே பெங்காலி சினிமாக்களில் உண்டு. ஆனால் நமக்கு வந்து சேர்பவை, எப்போதாவது திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே போகும் தூக்கமாத்திரை படங்கள் மட்டும்தான். களத்தில் இறங்கி பெங்காலியின் மசாலா படங்களைத் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தோம்.

`அட, இதை எல்லாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருக்கேய்யா...' எனக் கூர்ந்து கவனித்தால், எல்லாமே தமிழில் வெளியாகி சக்கைபோடுபோட்ட தமிழ்ப் படங்கள். கடந்த சில ஆண்டுகளாக பெங்காலி மொழியில் ஹிட்டாகும் படங்களில் முக்கால்வாசி, தமிழில் இருந்தும் தெலுங்கில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவையே.

` `காதல் கோட்டை' காலத்தில் இருந்தே தொடங்கிவிட்ட ட்ரெண்ட் இது’ என்கிறார்கள். அது `அவ்வப்போது ரீமேக்' என்ற நிலையில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக `வாரம்தோறும் ஒரு ரீமேக்' என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் மட்டும் அல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்இந்திய படங்களை அப்படியே கொத்திக்கொண்டுபோய் ஹிட்டடிக்கிறார்கள் பெங்காலிகள். இந்த அட்டகாசம் தாங்காமல், கன்னட சினிமா உலகைப்போலவே, `நிறுத்துங் கப்பா உங்க ரீமேக்குகளை!' என்ற எதிர்ப்புக் குரல்கள் பெங்காலி சினிமா ரசிகர்கள் மத்தியில் கேட்க ஆரம்பித்து விட்டன. இணையத்தில் `பெங்காலி இயக்குநர்களே... காப்பி அடிப்பதை நிறுத்துங்க' என முகநூல் பக்கம் தொடங்கி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனாலும், தயாரிப்பாளர்கள் நிறுத்துவதாக இல்லை. காரணம், தென்இந்தியப் படங்களை ரீமேக் செய்யும்போது கோடிகளில் குவியும் வசூல்.

’ஸ்ரீவெங்கடேஷ் ஃபிலிம்ஸ்'தான், இன்றைய தேதியில் மேற்கு வங்கத்தின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். இவர்களின் தயாரிப்புகள் எல்லாமே முழுக்க முழுக்க ரீமேக்குகள்தான். மேற்கு வங்க அறிவுஜீவி இயக்குநர்கள் பலரும் கரித்துக்கொட்டுவது ஸ்ரீவெங்கடேஷ் ஃபிலிம்ஸைத்தான். ஆனால், அவர்கள் அதைப் பற்றி கவலையேபடாமல் இன்னும் 10 ரீமேக் படங்களில் பிஸி.
பெங்காலியின் முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும்கூட ரீமேக் படங்கள் பண்ணுவதில்தான் ஆர்வம்காட்டுகிறார்கள். ராஜ்சக்ரபோர்த்தி, பெங்காலி சினிமாவின் ரீமேக் ராஜாவாகப் போற்றப்படுகிறார். அவர் இயக்கிய 15 படங்களில் 13 ரீமேக். அதில் `சென்னை-28’, `பொல்லாதவன்’, `காதல்’, `சிங்கம்’, `எங்கேயும் எப்போதும்’ எனப் பல படங்கள் அடக்கம். இவர் தற்போது இயக்கிவரும் `மாஃபியா' என்ற படம்கூட `மங்காத்தா'வின் ரீமேக் என்கிறார்கள். படம் வெளியானால்தான் தெரியும்.

`பெங்காலி சினிமாவின் முன்னணி நடிகர்கள்' என்ற தலைப்பில் பட்டியலிட்டால், அதில் மூன்று பேருக்குத்தான் முக்கியமான இடம். ஜீத், தேவ், சோஹம் சக்ரபோர்த்தி என்ற இந்த மூவருக்கும் ரீமேக் படங்கள்தான் இன்று வரை கைகொடுக்கின்றன. இதில் முன்னணியில் இருப்பவர் ஜீத். இவர் நடித்த 30+ படங்களில் 23 ரீமேக். அந்த 23-ல், 20 மெகா ஹிட். மகேஷ் பாபு, சூர்யா, விஜய் படங்கள் என்றால், கண்ணை மூடிக்கொண்டு ரீமேக்க ஒத்துழைப்பார். இவருடைய முதல் படமே `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் ரீமேக்தான்.

சில பெங்காலி ரீமேக்குகளும், தமிழ் ஒரிஜினல்களும் - ஒரு சாம்பிள் லிஸ்ட்!

`இந்த ட்ரெண்டுக்குக் காரணம், 80-களில் வெளியான ரொம்பவே அறிவுஜீவித்தனமான படங்கள்தான்’ என்கிறார்கள்.

``அந்தக் காலகட்டத்தில், பெங்காலி சினிமாத் துறை வளர முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தது; வசூல் இருக்காது; திரையரங்குகள் காலியாகக் கிடக்கும். அப்போது எல்லாம் மேற்கு வங்கம் முழுக்கவே வெறும் 200 தியேட்டர்கள்தான் இருந்தன. இப்போது இந்த மசாலா பட வருகைக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 800-ஐ தொட்டிருக்கிறது. எங்களுடைய படங்கள், 10 கோடி ரூபாய்க்குமேல் வசூலிக்க ஆரம்பித் திருக்கின்றன. இது ஒரு வகையில் நல்லதுதான்'' என இதன் பாசிட்டிவ் பக்கத்தைச் சொல்கிறார் நடிகர் மிதுன்சக்கரவர்த்தி.

`பரவாயில்லையே... துவண்டுபோன பெங்காலி திரைத் துறையை, நம்ம தமிழ்ப் படங்கள் தூக்கி நிறுத்தியிருக்கே சூப்பர்!' எனப் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டாம்.

பெங்காலிகளின் இந்த ரீமேக் விளையாட்டு, எந்த அளவுக்கு எல்லை மீறி போய்க்கொண்டிருக் கிறது தெரியுமா? ஒரிஜினல் படக் குழுவினருக்கே தெரியாமல் படங்களைத் திருடி ரீமேக்செய்வது என்கிற லெவலுக்கு உச்சம்பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மெகா ஹிட் படம் `அத்தடு'. மகேஷ் பாபு நடித்த இந்தப் படத்தை, தயாரிப்பாளர்களிடம்கூடப் பேசாமல் `வான்டட்' என்ற பெயரில் பெங்காலியில் ரீமேக்கியிருந்தார்கள். அதைப் பற்றி ஒரு நிருபர் திரிவிக்ரமிடம் கேட்கப்போய், அப்போதுதான் அந்த இயக்குநருக்கே விஷயம் தெரியவந்திருக்கிறது.

2008-ம் ஆண்டில் வெளியான கன்னடத் திரைப்படமான `முசாஞ்சே மாட்டு'-வை எந்தவித காப்பிரைட் உரிமைகளும் இல்லாமல் ஆட்டையைப் போட்டு `அச்னே ப்ரேம்' என்ற பெயரில் அச்சு அசலாகச் சுட்டு படம் எடுத்திருந்தார்கள். படத்தை மட்டும்தான் சுட்டிருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். ஒரிஜினல் படத்தில் இருந்து நான்கு பாடல்களையும் சேர்த்து களவாண்டு இருக்கிறார்கள்.
அனுமதியே இல்லாமல் தாறுமாறாக ரீமேக்செய்து சமீபத்தில் கையும் களவுமாகச் சிக்கியவர் இயக்குநர் ரவி கின்னகி. தெலுங்கு, தமிழ், கன்னடம் என இவர் காப்பியடிக்காத ஏரியாவே இல்லை. 2004-ம் ஆண்டில் அவர் இயக்கிய `பந்தன்' என்ற படம் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற `உன்னைத்தேடி'யின் ரீமேக். அதுதான் இவருடைய ரீமேக் சரித்திரத்தைத் தொடங்கிவைத்த முதல் படம். இன்று வரை அந்த ட்ரெண்ட்டைக் கைவிடாமல் தொடர்ந்து ரீமேக்குகள் மட்டுமே பண்ணிக்கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய படங்களில் பாதிக்கும் மேல், முறையாக ரீமேக் அனுமதிபெறாமல் திருடப்பட்டப் படங்களே.

இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற `நமஸ்தே லண்டன்' என்ற படத்தை 2009-ம் ஆண்டில் ரீமேக் உரிமை எல்லாம் வாங்காமல், ஷாட் பை ஷாட் சுட்டுப்போட்டு `பரன் ஜய் ஜலியே ரே' என்ற பெயரில் பெங்காலியில் திரைப்படமாக்கி வெளியிட்டார். படம் தாறுமாறு ஹிட். 15 கோடி ரூபாய்க்குமேல் வசூல் (பெங்காலி சினிமாவுக்கு அதுவே பெரிய தொகை). இந்த நேரத்தில் இந்தியில் படம் எடுத்தவருக்கு விஷயம் தெரிந்து கோர்ட்டில் வழக்கு தொடர, கடைசியில் ஒன்றரைக் கோடி ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது. இப்போது எல்லாம் ரவி கின்னகி திருந்தி நல்லவராக மாறி, காசு கொடுத்து ரீமேக் உரிமை வாங்கித்தான் படம் எடுக்கிறார்.

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பெங்காலி காப்பியடி மன்னர்களைச் சமாளிக்க முடியாமல், இப்போது இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர்கள் எக்ஸ்ரே மெஷின்போல ஒவ்வொரு திரைப் படத்தையும் ஸ்கேன் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். கோலிவுட் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையென்றால், நம் படங்களும் திருடப்படலாம்... திருடப்பட்டிருக்கலாம்!