Published:Updated:

நல்ல படம்னா எந்த கவர்மென்டிலும் ஓடும் !

ம.கா.செந்தில்குமார்

நல்ல படம்னா எந்த கவர்மென்டிலும் ஓடும் !

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

'''வம்சம்’ படத்துக்காக காடு, கரை, குளம்னு இறங்கி நடிக்கும்போது, லேசா ஒரு முள் குத்தினாக்கூட, கேமரா ரோலிங்ல இருக்குங்கிறதை மறந்து, 'சார்... முள்ளு குத்திருச்சு’னு ஏதோ உலகத்துக்குச் செய்தி சொல்ற மாதிரி கத்திடுவேன். இப்ப சண்டைக் காட்சிகளின்போது அடிபட்டு ரத்தமே கொட்டினாலும் சத்தம் போடாம வலியைப் பொறுத்துக்கிட்டு நடிக்கிறேன். அந்த அளவுக்கு 'மௌன குரு’ என் கான்ஃபிடென்ஸ் லெவலை அதிகமாக்கி இருக்கு. வாழ்க்கை தினமும் ஏதோ கத்துக்கொடுக்குது சார்!'' - 'நிதி’கள் வரிசையில் இளைய நிதியான அருள்நிதி முகத்தில் முன்னைக் காட்டிலும் அதி உற்சாகம்... சினிமா கற்றுக்கொள்ளும் அதீத ஆர்வம்!  

'' 'வம்சம்’ நல்ல அறிமுகம் கொடுத்தது. ஆனா, 'உதயன்’ அதைத் தக்கவைக்கலையே?''

'' 'மௌன குரு’ அதைச் சரிசெய்யும்! க்ரைம் த்ரில்லர். அடிதடி, ஆர்பாட்டம் எதுவும் இல்லாத அமைதியான கேரக்டர். சாதாரண ரப்பர் செருப்பு, சைக்கிள்னு ரொம்பச் சராசரி ஆளு. இயல்பா வீட்ல நான் கலகலப்பா இருப்பேன். ஆனா, 'மௌன குரு’ படத்துக்காக வீட்லகூட 'உம்’னு உக்காந்துட்டு இருந்தேன். 'பாவம் புள்ள’னு எங்க வீட்லயே என்னைப்  பரிதாபமாப் பாக்கு றாங்க.

நல்ல படம்னா எந்த கவர்மென்டிலும் ஓடும் !

அடுத்து 'எஸ்.எம்.எஸ்.’, 'பாஸ் (எ) பாஸ்கரன்’ மாதிரி செம காமெடியா படம் பண்ணணும். 'வம்சம்’ தெலுங்கு ரீ-மேக் ஐடியாவும் இருக்கு. பாண்டிராஜ் சார்கிட்ட பேசணும். நானும் கொஞ்சம் பிஸியாத்தான் இருக்கேனோ?!''  

''சந்தோஷமான விஷயம்தானே... அண்ணன் உதயநிதியும் ஹீரோ ஆகிட்டார். சினிமாவில் நீங்க தான் அவருக்கு சீனியர். அவருக்கு எதுவும் டிப்ஸ் கொடுப்பீங்களா?''  

''ஐயையோ... சின்னப் பையனா அவர் கையால சிப்ஸ் வாங்கிச் சாப்பிட்டவன் சார் நான். டிப்ஸா? ஏன் சார் நீங்க வேற! எனக்கு மூணாவது படத்தில் வந்த அனுபவமும் பக்குவமும் அவருக்கு முதல் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே வந்திருக்கு. டான்ஸ், காமெடினு இப்போ எங்க குடும்பத்தில் பட்டையைக் கிளப்புறது அண்ணாதான்!''  

''சரி... அப்போ காதலுக்கு டிப்ஸ் கொடுப்பாரா... அதில் அவர்தானே சீனியர்?''

நல்ல படம்னா எந்த கவர்மென்டிலும் ஓடும் !

''கேட்டுட்டாப் போச்சு! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? வீட்ல யாருக்கும் தெரியாம அண்ணி கிருத்திகாவோடலவ்ல அவர் இருந்தப்ப, நான் அவங்க காதலுக்கு உதவி இருக்கேன். அப்போ ஸ்கூல் படிச் சுட்டு இருந்தேன். லீவு விட்டாச்சுன்னா, உதய் அண்ணன்கூடத்தான் சுத்திட்டு இருப்பேன். அப்ப ஒரு தடவை என்னை எங்கேயோ ஊர் சுத்திக் காட்டுறேன்னு சொல்லி வெளியே அழைச்சுட்டுப் போனார். ஆனா, எங்கேயும் போகாம, ஒரு அக்காவை மீட் பண்ணி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். பிறகு கார்ல வரும்போது, 'டேய்! அந்த அக்காவை பார்த்துப் பேசினதை வீட்ல யார்கிட்டயும் சொல்லக் கூடாது. உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். 'ஓ.கே’-னு அதை நானும் மறந்துட்டேன். அப்புறம் அவர் கல்யாண நிச்சயதார்த்தத்துல பார்த்தா... அந்த அக்காதான் என் அண்ணி.  அப்படி, அண்ணன் அப்பவே காதல்ல கில்லி. இப்போ ஹீரோ வேற... கேட்கவா வேணும்?

ஆனா, அண்ணன்களா உதய்யும் துரை யும் அமைஞ்சது என் அதிர்ஷ்டம்.பாண்டி ராஜ் சாரை என் பக்கம் திருப்பிவிட்டு, என் மீது சினிமா வெளிச்சம் பாய்ச்சியவர் உதய் அண்ணா. அவர் ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு. சின்ன அண்ணன் துரை (அழகிரி மகன்) என்னைவிட 10 மாசம் தான் மூத்தவன். என் நண்பன்.

'எப்படா ஸ்கூல் லீவு விடுவாங்க’னு அவன் வர்ற மதுரை டிரெயினுக்குப் பல நாட்கள் காத்திருப் பேன். 'உன் ப்ளஸ் என்னன்னு தெரிஞ்சு... அதை  ப்ளஸ் பண்ணு. மைனஸ் என்னன்னு கண்டுபிடிச்சு... அதை மைனஸ் பண்ணு’னு சொல்வான். தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல் வாங்க. அண்ணன் உடையானும் அப்படித் தான் பாஸ்!''

நல்ல படம்னா எந்த கவர்மென்டிலும் ஓடும் !

''ஆங்... அதுதான் அடுத்த கேள்வி. இப்ப தி.மு.க. எதிர்க் கட்சிகூட இல்லை. முன்னே மாதிரி உங்களால் சினிமாவை இயல்பா எதிர்கொள்ள அன்ணன்கள் உதவுறாங்களா?''

''சினிமா வேற... அரசியல் வேற! உதய் அண்ணன் நேரடியாத் தயாரித்த படங் களைவிட, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'கோ’, 'மைனா’, 'பாஸ் (எ) பாஸ்கரன்’, 'மதராசபட்டினம்’னு அவர் வாங்கி வெளியிட்ட படங்கள் பெரிய ஹிட். இந்த வெற்றிகள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பலம்னு எல்லாருக்கும் தெரியும். இப்போதைய முதல்வரும் சினிமாவில் இருந்து வந்தவர்தான். ஒரு சினிமா தயாராகி தியேட்டர் செல்வது வரை உள்ள வலி அவருக்கும் தெரியும். அப்புறம், அரசியல் பேசுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை.

ஒரே ஒரு விஷயம்தாங்க. நல்ல படமா இருந்தா, அது எந்த கவர்மென்ட்டா இருந் தாலும் ஓடும். சுமாரான படமா இருந்தா... எந்த கவர்மென்ட்டா இருந்தாலும் ஓடாது. இங்கே இதுதான் கோல்டன் ரூல்!''