Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

 ``ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவீங்களா?’’

``குடிமக்களால் நான்... குடிமக்களுக்காக நான்!’’

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ்

 ``அடுத்ததாக எட்டு நாட்கள் மட்டும் வேட்பாளராக இருந்த ராமசாமி அவர்கள் பேசுவார் என்பதை...’’

- சிவகுமார் நடராஜன்

ஜோக்ஸ்

``மே 19-ம் தேதி அன்று...’’

``காலையில கட்சியைக் கலைச்சுட்டு, சாயங்காலமா காசிக்குப் போறோம் தலைவரே!’’

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ்

``தலைவர் கோபமா இருக்காரே ஏன்?’’

``விஜயகாந்த்தான் இல்லைனு ஆகிப்போச்சு, இப்ப நமீதாவையும் விட்டுட்டாரே அதான்..!’’

- அம்பைதேவா

ஜோக்ஸ்

``தலைவர், இப்படி நம்பவெச்சு கழுத்தறுப்பார்னு நினைக்கவே இல்லை!''

``அப்படி என்ன பண்ணினார்?''

``என்னை வேட்பாளரா அறிவிக்கும்போது `கொஞ்ச நாள்ல மாத்திடுவேன்' சொன்னவர், கடைசி வரைக்கும் மாத்தவே இல்லை!''

- க.சரவணகுமார்

ஜோக்ஸ்

``என்னிடம் பேய் கதையை எதிர்பார்த்து வந்திருக்கும் ட்ரெண்டி வாக்காளப் பெருமக்களே..!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``எங்கள் தலைவர் பேசத் தொடங்கியதும் கலைந்து செல்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், பணமும் பிரியாணிப் பொட்டலமும் வாங்கிக்கொண்டு மனசாட்சி இல்லாமல் போகிறீர்களே...  இது நியாயமா?''

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்

``தலைவரோட கொள்கை ரொம்ப சிம்பிள்!''

``என்னது?''

``வாங்கு... வாங்க விடு!''

- அஜித்

ஜோக்ஸ்

``கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமா போய்க்கிட்டிருக்கு.’’

``தலைவரே, ரொம்ப லேட் பண்ணிட்டீங்க. அந்தப் பக்கம் வாக்குப்பதிவு ரொம்ப அமைதியா நடந்துக்கிட்டிருக்கு!’’

- க.சரவணகுமார்

ஜோக்ஸ்

``ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?”

“சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, அரசியலுக்கு வருவாரா யுவர் ஹானர்?”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ்

 “ `இவ்வளவு பணத்தை எடுத்துட்டுப் போறீங்களே... ஆவணம் இருக்கா?'னு தலைவர்கிட்ட கேட்டிருக்காங்க!”

“அப்புறம்..?”

“தொகுதி வாக்காளர் பட்டியலைக் காட்டியிருக்காரு!”

  - வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ்

``தலைவருக்குப் பேராசையா... எப்படிச் செல்றே?''

`` `தேர்தல்ல ஜெயிக்காமப் போனாலும் தவவாழ்க்கை கிடைச்சா போதும்'கிறாரே!''

- அம்பைதேவா

ஜோக்ஸ்

``நோட்டாவுக்கு ஓட்டு போடணும்கிறியே ஏன்?’’

``எல்லா கட்சியிலயும் கை நீட்டி பணம் வாங்கிட்டேனே, அதான் மனசாட்சி உறுத்துது!’’

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்

`` `ஸ்டாண்ட் அப் காமெடி'னா என்னய்யா?''

``மீட்டிங்ல நீங்க பண்றதுதான் தலைவரே!''

- அம்பைதேவா

ஜோக்ஸ்

``அவருக்கு பேராசை ஜாஸ்தி!''

``தவ வாழ்க்கைக்கு ஆசைப்படுறாரா?''

- அம்பைதேவா

ஜோக்ஸ்

``உனக்கு எத்தனை முறை தான் தண்டனை தருவது, திருந்தவே மாட்டியா?''

``படிப்படியா திருந்துவேன் எசமான்!''

- கிணத்துக்கடவு ரவி