Published:Updated:

"ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

"ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

‘கபாலி’ ரெடிஎம்.குணா

"ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

‘கபாலி’ ரெடிஎம்.குணா

Published:Updated:
"ரஜினி இன்னும் மாறவே இல்லை!”
   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

‘பைரவி'யிலேயே தொடங்கிவிட்டது ரஜினிகாந்துக்கும் தயாரிப்பாளர்  தாணுவுக்குமான நட்பு. ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்' பட்டம் தந்த அன்பு. ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற தாணுவின் 35 ஆண்டு காலக் கனவு, `கபாலி'யில் நிறைவேறியுள்ளது.

``இது, இப்போ, இப்படி நடக்கும்னு இருந்திருக்கு. ரஜினி சாரின் படம் தயாரிக்கும் வாய்ப்பு பலமுறை என் கைக்கு வந்து, கடைசி நேரத்தில் நழுவிப்போயிருக்கு. ‘அண்ணாமலை' பட வாய்ப்பு வந்தபோது, என் சூழ்நிலையால் எடுக்க முடியாமல்போனது. ‘முத்து' படமும் அப்படித்தான் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போச்சு. ‘பாட்ஷா' ஆரம்பித்தபோது ரஜினி சார் என்னை அழைத்து `தாணு, நீங்கதான் தயாரிப்பாளர்'னு நம்பிக்கையோடு சொன்னார். அப்போ அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் வற்புறுத்தலால் படம் தயாரிக்கும் வாய்ப்பு பறிபோனது. இத்தனை வாய்ப்புகளை நான் தவறவிட்டபோதும், இப்போது ‘கபாலி'-யைத் தயாரிக்கும் வாய்ப்பை ரஜினி சார் எனக்குக் கொடுத்து என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்.''

``ரஜினி படம் என்றாலே ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என பிரமாண்டக் கூட்டணி ஒன்று உருவாகும். ஆனால், இந்த முறை ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், முரளி, கபிலன் என இளைஞர்களின் கூட்டணி இணைந்திருக்கிறதே?''

``ரஜினி சார் என்கிற மாபெரும் சக்தி ‘கபாலி'யில் இருக்கும்போது, அதைவிட வேறு என்ன வேண்டும்? வழக்கமாக நான் கதாநாயகர்களைச் சந்திக்கும்போது, ‘நீங்க கால்ஷீட்டை மட்டும் கொடுங்க. ஏற்கெனவே சூப்பர் சக்சஸ் கொடுத்த உங்க படத்தைவிட புதிய டெக்னீஷியன்களை வைத்து ஜெயித்துக் காட்டுகிறேன்' எனச் சொல்வேன். அதுபோல நடந்தும் இருக்கிறது. ‘தெறி'கூட இளைஞர்களின் படைப்புதான். அது விஜய்யின் 58 படங்களின் வசூலை வென்று இப்போதும் கெத்தாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘கபாலி' கலெக்‌ஷன், இதற்கு முன்னர் இருந்த ரஜினி சாரின் அத்தனை பட ரெக்கார்டுகளையும் உடைக்கும்.''

   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

``ரஜினிக்காக சீனியர் இயக்குநர்கள் பலர் கதை சொன்னபோதும், இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய ரஞ்சித்தை எப்படித் தேர்வுசெய்தீர்கள்?''

``ரஞ்சித் கெட்டிக்காரர். பிரமாதமான கிரியேட்டர். அவர் சொன்ன கதை ரஜினி சாருக்கு அவ்ளோ பொருத்தமா இருந்தது. ரஜினி சார் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை விஷயங்களும் அந்தக் கதையில் இருந்தன. திரைக்கதையின் திருப்பங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் செம ஷார்ப். ரஞ்சித், எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் செல்லக்குழந்தை. தான் இயக்கும் படத்தின் வெற்றி இலக்கை மட்டுமே யோசிக்கும் ரஞ்சித், இனிவரும் காலங்களில் தனது படங்கள் மூலம் அடுத்த தலைமுறையை ஆளுவார்.''

`` ‘கோச்சடையான்', ‘லிங்கா' என ரஜினி படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற வில்லையே?''

`‘ `காக்க காக்க' படத்துக்கு முன்னர் சூர்யா எத்தனையோ படங்கள் நடித்திருந்தார். அவற்றில் எத்தனை படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன? ஆனால் ‘காக்க காக்க' வரவேற்பையும் பெற்றது, வசூலையும் அள்ளியது. ‘தலைவா', ‘புலி' படத்துக்குப் பிறகு வெளிவந்த ‘தெறி', எந்த அளவுக்கு சக்சஸ் என்பதை கண்கூடாகப் பார்த்தீர்கள். ‘கோச்சடையான்', ரஜினி சார் நேரடியாக நடித்த படம் அல்ல; ஒரு அனிமேஷன் திரைப்படம். ‘லிங்கா', சரியான முறையில் விநியோகிக்கத் தெரியாத நபர்களின் கைகளில் சிக்கிய திரைப்படம். இப்போது 66 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய ‘கபாலி' டீஸர், இணைய வரலாற்றிலேயே, வெளி யிட்ட 24 மணி நேரத்துக்குள் மிக அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. ‘கபாலி' திரைப்படம், ரிலீஸான பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் உறுதியாகப் போற்றப்படும், புகழப்படும்.''

   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

`` ‘கபாலி'யில் ரஜினி?''

``முதல் படத்தில் பணியாற்றும் ஒரு நடிகர் எப்படி பணிவோடும் சிரத்தையோடும் பவ்யமாகப் பணியாற்றுவாரோ, அதே பணிவோடும் எளிமையோடும் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கத்தொடங்கிய காலங்களில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டால், அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவார். நாள் முழுக்க அதுதான் அவருடைய இடம். இதோ இப்போது ‘கபாலி' ஷூட்டிங்கில் காலையில் மேக்கப் போட்டு கேரவேனைவிட்டு இறங்குபவர், எவ்வளவு வெயில் அடித்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். சகநடிகர்களோடு சிரித்துப் பேசி அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். காலம் மாறிவிட்டது; ஆனால் ரஜினி சார் மாறவில்லை. தயாரிப்பாளருக்கு, தன்னால் சிறிதளவுகூட பொருளாதார இழப்பு நேரக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக இருப்பார்.

   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

மலேசியாவின் மல்லாக்கா பகுதியில் ‘கபாலி' ஷூட்டிங். நானும் அவருடன் சென்றிருந்தேன். காலையில் நாங்கள் சென்றபோது நல்ல வெயில் அடித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ரஜினி சாரைப் பார்த்ததும் உற்சாகம் பீறிடக் கை அசைத்தனர். அதன்பிறகு திடீரென அங்கே மழை பெய்ய ஆரம்பித்தது. ஷூட்டிங் முடிந்து திரும்பினோம். அப்போதும் அங்கு உள்ள மக்கள், மழையில் நனைந்தபடி ரஜினி சாருக்காகக் காத்திருந்தனர்.  ரஜினி சார் அதை எதிர்பார்க்கவே இல்லை. அந்த மக்களுடைய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டார். தன் ரசிகர்கள், சகமனிதர்கள் மேல் அவர் கொண்டிருக்கிற அந்த அன்பு மிகப் பெரியது. அந்த ரசிகர்களுக்கு ரஜினி சார் தரும் கொண்டாட்டப் பரிசாக `கபாலி' இருக்கும்.''

   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

`கபாலி'யில் நெருப்பை நெருங்கும் வில்லன் வின்ஸ்டன் சாவோ. ரஜினிக்கு மட்டும் அல்ல, ஜூலை மாதம் ரிலீஸாகும் ஜாக்கிசானின் `ஸ்கிப்ட்ரேஸ்' படத்திலும் வில்லன் இவர்தான். ``நான் தைவான் நாட்டுக்காரன். `The Wedding Banquet' என்ற சீனப் படத்தில் அறிமுகமாகி, அப்படியே தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா, யூரோப் என பல நாடு, பல மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறேன். திடீரென ஒருநாள் இந்தியாவில் இருந்து அழைப்பு. ‘தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும்’ எனக் கேட்டதும் எனக்கு ஆச்சர்யம். பிறகு, புராஜெக்ட் பற்றி விசாரித்தால் மலைப்பாக இருந்தது. உடனடியாக ஓ.கே சொன்னேன்.

   "ரஜினி இன்னும் மாறவே இல்லை!”

25 ஆண்டுகளாக நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டேன். சிலர் நல்ல இயக்குநர்கள், சிலர் மோசமான இயக்குநர்கள் எனப் பிரித்துவிடலாம். ஆனால், ரஞ்சித் மிகச் சிறந்த இயக்குநர்!’’ என்றவரிடம் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்டால், ``ரஜினிகாந்துக்கு 60 வயதுக்கு மேலாகிவிட்டது என்பதே ஷூட்டிங் ஆரம்பித்து ரொம்ப நாள் கழித்துத்தான் எனக்குத் தெரியும். வயது தெரியாத அளவுக்கு அவர் அவ்வளவு உற்சாகமாக இருந்தார். அவருடைய நடிப்பும், ஸ்டைலும், வேகமும்தான் ரசிகர்களுக்கு அவரைப் பிடிக்கக் காரணம் என நினைக்கிறேன்'' என்கிறார் உற்சாகமாக!