Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

``தேர்தல்ல தோல்வி அடைஞ்ச ஃபீலிங் கொஞ்சம்கூட தலைவருக்கு இல்லை!”

“எப்படிச் சொல்றே?”

“ ‘இமேஜினோ ரொமான்ஸ் ஃபீலியான்னா என்ன?'னு கேட்கிறாரே.”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``எங்கள் தலைவர், முன்னர் ஆசிரமம் வைத்து தவ வாழ்வு வாழ்ந்தவர்தான் என்பதை, தற்போது தவ வாழ்வு வாழ்பவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``மக்களால் நான்... மக்களுக்காக நான்!''

``சார், இது கோர்ட். `நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை'னு சொல்லணும்.''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

“தேர்தல் முடிவுகள்ல இருந்து என்னய்யா தெரியுது?”

“மக்கள், எதிர்க்கட்சிக்காரங்களுக்குச் சொன்னதைச் செஞ்சிட்டு, நம்ம கட்சிக்கு மட்டும் சொல்லாததைச் செஞ்சிருக்காங்க தலைவரே!”

-கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ்

“மீட்டிங்குக்கு வர்ற தலைவரோட கண்களை ஏன் கட்டியிருக்காங்க?”

 “வர்ற வழியில ஒயின் ஷாப்பைப் பார்த்தா காரை நிறுத்தச் சொல்லி இறங்கிடுவாரே!”

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

 ``காலத்தின் அருமை கருதி, தலைவர் அவர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு இரண்டே இரண்டு ஸ்டெப் மட்டும் போடும்படி கேட்டுக்கொள்கிறோம்!’’

- சொக்கம்பட்டி தேவதாசன்

ஜோக்ஸ்

``அதான் ஊத்திக்கிச்சே இன்னும் எதுக்குய்யா டி.வி பார்க்கிறீங்க?''

``மியூஸிக் சேனல்ல `சோதனை மேல் சோதனை...' பாட்டு டெடிக்கேட் பண்ணிருக்கோம் பாருங்க தலைவரே!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

``ஓட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம் மக்களே? நான் சம்பாதித்தப் பணத்தை உங்களுக்குத் தருவது தவறா?’’

- எவ்ரெஸ்ட் பூபதி

ஜோக்ஸ்

``நம்ம கட்சியோட பலம்?’’

``தொண்டர்கள்!’’

``பலவீனம்?’’

``உங்க பேச்சுதான் தலைவரே!’’

- ஆர். மணிவண்ணன்

ஜோக்ஸ்

 ``தேர்தல்ல தோற்றும் தலைவர் செம்ம ஹேப்பியா இருக்காரே?’’

``டெபாசிட் தக்கவைச்சதுல ஹாட்ரிக் அடிச்சுட்டாராம்!’’

- குடந்தை ஆர்.ஷம்மு

ஜோக்ஸ்

``எங்கள் தலைவரை உண்மையிலேயே ‘தவ வாழ்க்கை’ வாழ அனுப்பிவிட்டீர்களே... இது நியாயமா மக்களே?”

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ்

``அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?’’

``கட்சியோட உறுப்பினரா இருந்தா அடிமை; அமைச்சர் லெவலுக்குப் போயிட்டா கொத்தடிமை!’’

- சீர்காழி வி.ரேவதி

ஜோக்ஸ்

“நானும்தான்யா ‘தவ'வாழ்க்கை வாழறேன்!”

 “ஆனா, நீங்க ‘தவ'றான வாழ்க்கை வாழறதா எல்லாரும் பேசிக்கிறாங்க தலைவரே!''

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ்

``தேர்தல் ரிசல்ட் எப்படிய்யா இருக்கு?’’

``அஞ்சு வருஷத்துக்கு நீங்க மிக்ஸர் சாப்பிடலாம் தலைவரே!’’

- அஜித்

ஜோக்ஸ்

``என்னை மக்களின் எம்.எல்.ஏ-வாக மாற்றியதற்கு நன்றி.’’

``தேர்தல்ல தோற்றதைக்கூட தலைவர் எவ்வளவு பெருமையா சொல்றார் பாரு!’’

- அஜித்

ஜோக்ஸ்

 `` `ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’னு கேட்டா, ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு அழறே?’’

``என் பொண்டாட்டிகூட எனக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்தது இல்லை யுவர் ஹானர்.’’

- கே.ஆனந்தன்