பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”
News
”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

கார்க்கிபவா

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

கோலிவுட், பாலிவுட், டோலிவுட்... என ஆல் ஏரியாக்களையும் அதிரவைக்கும் மோஸ்ட் வான்ட்டட் பிரபலம் பிரபுதேவா. இயக்குநராக பிஸியாக இருந்தவர், இப்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் ‘தேவி' படம் மூலம் மீண்டும் நாயகர்!

``விஜய் இயக்கத்தை, ஓர் இயக்குநரா எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``பிரமாதமான டைரக்டர். எல்லா விஷயங்களையும் பொறுமையா, அழகா ஹேண்டில் பண்றார். `விஜய், நான் டைரக்ட் பண்றப்ப எல்லாம் இவ்ளோ கூலா இருக்க மாட்டேன். நீங்க எப்படி இப்படி ஹேண்டில் பண்றீங்க?'னு அவர்கிட்டயே கேட்டிருக்கேன். தமிழ், தெலுங்கு, இந்தினு ஒரே நேரத்துல மூணு மொழிகள்ல எடுக்கிறோம். மூணுக்கும் தனித்தனி இசையமைப்பாளர் வேணும்னு கேட்டு வாங்கியிருக்கார். இரவு பகலா வேலை செஞ்சுட்டிருக்கார். `தேவி' மிக முக்கியமான புராஜெக்ட்டா எங்க எல்லோருக்குமே அமையும்.”

``பாலிவுட்லயே நீண்ட காலம் இருந்துட்டீங்களே?”

``எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியலை. நான் சினிமாவுக்கு வந்து 27 வருஷம் ஆகிருச்சு. இப்ப எல்லா ஏரியாவும் எனக்கு கம்ஃபர்ட் ஸோன்தான். முன்னாடி எல்லாம் எனக்கு ஹோம் சிக் உண்டு. முதல் பத்து வருஷம் நம்ம ஊரைவிட்டு வெளியே போனாலே, எப்படா திரும்புவோம்னு இருக்கும். இப்ப அதெல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தினு எனக்கு எல்லாமே ஒண்ணுதான். எல்லா இடங்கள்லயும் நம்ம ஆட்கள் இருக்காங்க!”

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

``நீங்க ரொம்ப அமைதியான ஆளு. ஆனால், நீங்கள் இயக்கும் கதைகள் அனைத்தும் அதிரடியாக இருக்கின்றனவே?”

``பெர்சனலா எந்தக் காரணமும் இல்லை. நான் எடுக்கும் படங்கள் ஜனரஞ்சகமா இருக்கணும்னு ஆசைப்படுவேன். நான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன். அதனால, படம் ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன். அப்படி இருக்கணும்னா, காமெடி, காதல்னு எல்லாம் இருந்தாலும் ஆக்‌ஷன் அதிகமாகிடுது. மக்களுக்குப் பிடிக்கணும். அது ஒண்ணுதான் குறிக்கோள்.”

``மக்கள் விருப்பம் என்பதைத் தாண்டி, உங்களின் ட்ரீம் புராஜெக்ட் ஏதேனும் இருக்கிறதா?”

``எனக்கு நம்ம ராமாயணத்தை `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' மாதிரி பெரிய பட்ஜெட்ல எடுக்கணும்னு ஆசை. ஹாரர் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல ஒரு பெரிய புராஜெக்ட் பண்ணணும்னு ஆசை.”

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

``பிரபுதேவா ஸ்டுடியோஸ்னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கீங்களே?”

``இதுல நான் மட்டும் இல்லை. ‘ஐசரி’ கணேஷும் கூட இருக்கார். அவர்தான் முதலீடு. நான் கிரியேட்டிவ் சைடு. `தேவி’, இயக்குநர் லஷ்மன் இயக்கத்துல ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் `போகன்’, அறிமுக இயக்குநர் விக்டர் இயக்கத்துல ஒரு படம்னு மூணு புராஜெக்ட் போயிட்டி ருக்கு.”

`` `தெறி’ பார்த்தீங்களா... `போக்கிரி’ போலீஸுக்கும் `தெறி’ போலீஸுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக் கிறீங்க?’’

``பார்த்தேன்... செம ஜாலியான படம். பாட்டு, ஸ்டன்ட், எமோஷன்னு கலக்கியிருக்கிறார் விஜய். அவருக்கு இனிமேல் என்ன இம்ப்ரூவ்மென்ட்? அவர் அப்பவே இம்ப்ரூவ்டு வெர்ஷன்தான்.’’

``சினிமாவைத் தாண்டி பிடித்த விஷயங்கள்?”

``விளையாட்டும் நண்பர்களும். எங்க ஸ்கூல் நண்பர்கள் ரீயூனியன் அடிக்கடி நடக்கும். அவர்கள்தான் இப்பவும் எப்பவும் எனக்கு நண்பர்கள்.”

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

``27 வருடங்கள்... பெரிய வெற்றிகள்/தோல்விகள். இவை எல்லாம் தாண்டிய பிறகு, ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் என எதைச்  சொல்வீர்கள்?”

``அம்மா-அப்பாதான். அவங்களைத் தாண்டி வேற எதுவும் பெருசு இல்லை.”

   ”நான் எம்.ஜி.ஆர் ரசிகன்!”

``இந்தியா முழுக்க எல்லா மொழிகளிலும் வெற்றி கொடுத்தவர். `இந்த விஷயம்தான் இந்தியாவை இணைக்கிறது' என எதை நினைக்கிறீர்கள்?”

``எமோஷன்ஸ். நம்ம ஊருனு இல்லை, எல்லா ஊர்கள்லயும் அம்மா, அப்பா, குடும்பம், நண்பர்கள்னு எமோஷன்ஸ் சரியா இருந்தா போதும். கனெக்ட் ஆகிடும். இந்தியானு இல்லை, உலகம் முழுக்கவே இதுதான் உண்மை. ஏதோ ஒரு நாட்டுல உயிர் இழப்புனு டி.வி-யில பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமா இருக்கே... அழுகை வருதே. மனுஷனுக்கு மனுஷன் அந்த கனெக்‌ஷனைக் கொடுக்கிறது எமோஷன்ஸ்தான்!”