பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”

   “தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”

பா.ஜான்ஸன்

   “தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”

மேகா ஆகாஷ் - நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் 100% தமிழ் பொண்ணு. பாலாஜி தரணீதரனின் `ஒரு பக்க கதை'தான் முதல் படம். இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்குள் தனுஷுடன் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் பொண்ணு பிஸி.

``சென்னை லேடி ஆண்டாள்ல ஸ்கூலிங், டபுள்யூசிசி-ல விஸ்காம். என்னோட அப்பா, விளம்பரப்பட நிறுவனத்தில் வேலை செய்றார். அம்மா, விளம்பரப்பட இயக்குநர். நானும் அம்மா இயக்கிய விளம்பரப் படத்துல நடிச்சிருக்கேன். இப்போ கௌதம் மேனன் சார் படத்தில் நடிச் சிட்டிருக்கேன்.  ராசி சூப்பரா வொர்க் அவுட் ஆகுது'' என மினுக்கென சிரிக்கிறார் மேகா ஆகாஷ்.

`` கௌதம் மேனன், தனுஷ்னு பெரிய காம்பினேஷன்... எப்படி இருக்கு?''

``எடிட்டர் ஆண்டனி சார் எங்க அம்மாவோட ஃப்ரெண்ட். அவர்தான் ஒருமுறை கௌதம் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்திவெச்சார். அவருடைய `விண்ணைத் தாண்டி வருவாயா' படமும், அதில் வரும் ஜெஸ்ஸி கேரக்டரும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவரை நேர்ல சந்திச்சப்போ கூட, அதைச் சொன்னேன். கொஞ்ச நாள் கழிச்சு மேக்-அப் டெஸ்ட்டுக்காக கௌதம் சார் கூப்பிட்டார். ஆனா, எந்தப் படத்துக்குனு சொல்லலை. அதுக்குப் பிறகும் ஒரு மாசம் வரை ஒண்ணுமே சொல்லலை.  திடீர்னு மறுபடியும் ஒரு டெஸ்ட்டுக்காகக் கூப்பிட்டார். அது முடிஞ்ச அன்னைக்கு சாயந்திரமே கூப்பிட்டு `கங்கிராட்ஸ்... நீங்க செலக்ட் ஆகிட்டீங்க'னு சொன்னார். அப்போதான் எனக்கு நான் தனுஷுக்கு ஜோடியா நடிக்கப்போறேன்னு தெரியும். செம சந்தோஷம். பின்னால திரும்பிப் பார்த்தா, என்னோட அம்மா என்னைவிட பயங்கற ஷாக்ல இருந்தாங்க. அந்த நாள் எனக்கு ஒரு கனவு நிஜமானது மாதிரி இருந்தது.''

   “தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”

``கௌதம் மேனன் படத்தின் ஹீரோயின்கள் எப்பவுமே செம ஸ்டைலிஷா இருப்பாங்க. இதுல என்ன ஸ்பெஷல்?''

``ஆமாம். இதுல நான் வேற லுக்ல இருப்பேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்காகவே நான் பாடிலாங்குவேஜ் கிளாஸுக்குப் போனேன். கெளதம் மேனன் சார் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி, அவர் ஆபீஸுக்கு கூப்பிட்டு உதவி இயக்குநர்கள், அசிஸ்டென்ட்ஸ்னு மொத்த டீமுக்கும் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார்.  ஷூட்டிங்குக்கு முன்பாகவே அவங்களோட பேசி, பழகினதால், ஷூட்டிங் ஸ்பாட்ல ஈஸியா இருந்துச்சு. செம ஜாலியான டீம். தினமும் காலேஜுக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு.''

``தனுஷ் வேற லெவல் ஆக்டர். அவரோட எப்படி ஈடுகொடுத்து நடிச்சீங்க?''

``நான் சொல்லப்போற பதிலை நிறையப் பேர் சொல்லியிருப்பாங்க. ஆனா, உண்மை இதுதான். தனுஷ் செம சிம்பிள். பாலிவுட், இப்போ ஹாலிவுட்னு பெரிய பெரிய இடத்துக்குப் போனாலும் சிம்பிளா இருக்கார். அவர் நடிக்கும்போது நான் ஸ்பாட்லதான் இருப்பேன். அவர் நடிக்கிறதைப் பார்த்தே ஆக்டிங் டிப்ஸ் எடுத்துப்பேன். அதேபோல சில சீன்ஸ் நடிக்கக் கஷ்டமா இருக்கும்போது நேரா அவர்கிட்டயே போய், இதை எப்படி நடிக்கலாம்னு கேட்டு நடிப்பேன். தனுஷ் சூப்பர் கேரக்டர். ஸ்பாட்ல எனக்கு டீச்சர்.''

``நடிப்பு தவிர வேற என்ன செய்யணும்னு ஆசை?''

``எனக்கு எழுதணும்னு ஆசை. எழுதுறதுனா புக் எழுதறது, கவிதை எழுதறதுனு இல்லை. விளம்பரங் களுக்கு கிரியேட்டிவ் ரைட்டிங் பண்ணுவாங்கல்ல... அந்த மாதிரி எழுதணும்.''

``க்யூட்டா இருக்கீங்க... லவ் புரொப்போசல்ஸ் அதிகம் வந்திருக்குமே?''

``நான் ஸ்கூல்ல படிக்கும்போது கொஞ்சம் குண்டா இருப்பேன். அதனால அப்போ புரொபோசல்ஸ் ரொம்ப குறைவு. அதிகமா பொண்ணுங்ககிட்டகூட பேச மாட்டேன். பசங்க என்கிட்ட வர்றதுக்கேகூட பயப்படுவாங்க. இதுல எங்க புரொப்போசல்ஸ்?'

   “தனுஷ்தான் எனக்கு டீச்சர்!”

``அப்ப உங்களுக்கு பாய் ஃப்ரெண்டே இல்லையா?''

``கிரிக்கெட் தல தோனிதான் என்னோட பாய் ஃப்ரெண்ட்.  அவரை நேர்ல பார்க்கணும்கிறது ரொம்ப ஆசை. ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா திடீர்னு அந்த வாய்ப்பு அமைஞ்சது. அவரை தூரமா நின்னு பார்க்க மாட்டோமானு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, அங்கே அவர் எனக்கு கேக் எல்லாம் ஊட்டிவிட்டு, ரொம்ப நேரம் பேசி, செல்ஃபி எல்லாம் எடுத்து... வாவ் தோனிதான் எப்பவுமே என் ஹீரோ!''