பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

``தலைவரே அமைச்சர் பதவி லிஸ்ட்ல உங்க பேர் இல்லையாம்.''

``விடுய்யா அடுத்த மாச லிஸ்ட்ல வந்துடப்போகுது இதுக்குப் போய் வருத்தப்பட்டுக்கிட்டு!''

-  வி.சகிதா முருகன்

ஜோக்ஸ்

``அந்த வக்கீல் என்ன சொல்லிட்டுப்போறார்?''

`` `வழக்குகளால் நான்... வழக்குகளுக்காக நான்’னு சொல்றார்!''

- கே.லக் ஷ்மணன்

ஜோக்ஸ்

``என் பொண்டாட்டி எல்லா கட்சி தேர்தல் அறிக்கைகளையும் படிச்சிருப்பாபோல!''

``எப்படிச் சொல்ற?''

`` `காபில ஏன் எப்பவுமே சர்க்கரை அதிகமா போடுற?’னு கேட்டேன். அதுக்கு `படிப்படியா குறைச்சுக்குறேன்’னு சொல்றா!''

- மேகி

ஜோக்ஸ்

``இந்த மாபெரும் கூட்டத்துக்கு வருகை தந்து, எட்டாவது வரிசையின் ரெண்டாவது சேரில் அமர்ந்திருக்கும் என் அன்புச் சகோதரர் அவர்களே...''

-கே.லக் ஷ்மணன்

ஜோக்ஸ்

``ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு லேட் ஆகுது?”

“வீட்ல இருக்கிற நேரத்துல இரண்டு மணி நேரத்தைக் குறைச்சிட்டேன்!”

- மேகி

ஜோக்ஸ்

``பொண்ணு வீட்ல ஓ.கே சொல்லிட்டாங்களா... உனக்கு எப்படித் தெரியும்?’’

``அவங்க ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப்ல என்னைச் சேர்த்துட்டாங்களே!’’

- மேகி

ஜோக்ஸ்

``அந்தத் தலைவர் தீர்க்கதரிசிங்க!''

``எப்படிச் சொல்றீங்க?''

``கடைசி நேரத்துல டக்குனு வேட்புமனுவை வாபஸ் வாங்கிட்டாருல்ல..?''

- சீர்காழி விரேவதி

ஜோக்ஸ்

``தலைவர் ட்ரெண்டியா பேசுவார்னு எப்படிச் சொல்றே?''

``மேடையில குட்டிக்கதைகளுக்கு பதிலா 10 செகண்ட் கதை சொல்றாரே!''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

``நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா..?''

``எனக்குத் தரும் தண்டனையை படிப்படியாகக் குறைக்க நீங்களும் முயற்சி பண்ணுங்க எஜமான்!''

- ஜி.சுந்தரராஜன்

ஜோக்ஸ்

``நான் ஸ்விஸ் பேங்குல அக்கவுன்ட் வெச்சிருந்ததை சி.பி.ஐ-காரங்க கண்டுபிடிச்சுட்டாங்கய்யா!''

``உங்களை யார் ஸ்விஸ் பேங்க் முன்னால நின்னு செல்ஃபி எடுக்கச் சொன்னது தலைவரே!''

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்

`` `கூட்டணி கதவு திறந்தே இருக்கு'னு எதுக்கு தலைவரே அறிவிக்கிறீங்க?''

''எலெக்‌ஷன்தான் முடிஞ்சிடுச்சே... கூட்டணி பிடிக்காதவங்க வெளியேறட்டும்னுதான்!''

-  கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

``நீ ஏதாவது கேட்க விரும்புகிறாயா?'’’

``அந்த 570 கோடி என்னதான் ஆச்சு எசமான்?’’

- சீர்காழி வி ரேவதி

ஜோக்ஸ்

``வெற்றி வந்தால் `ஆட’ மாட்டோம். தோல்வி வந்தால் `வாட’ மாட்டோம்!''

``தலைவரே, இப்படி மண்ணு மாதிரி இருக்குறதாலதான் நமக்கு யாரும் ஓட்டு `போட' மாட்டேங்குறாங்க!''

- க.சரவணகுமார்