பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அஜித் சொன்னதை மறக்க முடியாது!”

    “அஜித் சொன்னதை மறக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அஜித் சொன்னதை மறக்க முடியாது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

`எங்கே போனார் லட்சுமி மேனன்... கொஞ்சம் நாட்களாக ஆளைக் காணோமே. பாலிவுட் போய்டீங்களா?' - வாட்ஸ்அப் மெசேஜ் தட்டிவிட்டேன். `ஹய்யோ ப்ரோ... நான் காரைக்குடியில் `றெக்க' பட ஷூட்டிங்லதான்ப்பா இருந்தேன். இதோ சென்னைக்கு வந்துட்டேன்' - உடனே வருகிறது உற்சாகப் பதில்.
 
``இப்பலாம் ஸ்கிரீன்ல உங்களை அடிக்கடி பார்க்க முடியலையே?''

``ம்ம்ம்... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு தோணுச்சு. எல்லா கதைகள்லயும் என் கேரக்டர் ஒரே மாதிரி இருந்தது. ஆரம்பத்துல அந்த கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தாலும் இப்போ எனக்கே போர் அடிக்குது. சரியில்லைனு தோணும் கதைகளில் ஏன் நடிக்கணும்? அதான் காத்திருந்து நல்ல படமா செலெக்ட் பண்ணி நடிக்கிறேன்.’’

    “அஜித் சொன்னதை மறக்க முடியாது!”

``செலெக்ட் பண்ணிட்டீங்களா?’’

``60 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் தேர்ந்தெடுத்தது முத்துக்கள்போல சில படங்கள்தான். நல்ல படம் பண்ண எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் காத்திருக்கலாம். இப்போ `றெக்க' படத்தில் மட்டும்தான் நடிக்கிறேன். இதுல மொத்தமும் வித்தியாசமா தெரிவேன். விஜய் சேதுபதி நடிப்புல பின்னியிருக்கார். செம ஜாலி கேரக்டர். படத் தலைப்புக்குத் தகுந்த மாதிரியே பறந்து பறந்து வேறு வேறு இடங்கள்ல ஷூட் பண்றாங்க.’’

``எந்த மாதிரி கதைக்காக வெயிட் பண்றீங்க?''

`` `இர்ரிவர்சபிள்', `கான் கேர்ள்', `மலினா'னு நிறையப் படங்கள் என் லிஸ்ட்ல இருக்கு. இதுல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் செமையா இருக்கும். பெர்ஃபாமன்ஸ் பண்ண நிறைய வாய்ப்புகள் இருக்கும். அந்த மாதிரி கதைகள், கேரக்டர்கள் இங்கே சாத்தியமே இல்லை.''

``ஏன்..?’’

``நம்ம ஊர் சினிமாவில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம். இதை நான் குறையா சொல்லலை. ஆடியன்ஸுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் எடுப்பாங்க. அதனாலதான் நான் சொன்ன மாதிரியான கதைகள் வர்றது கஷ்டம்னு சொன்னேன். ஆனா, இன்னும் பத்து வருஷம் கழிச்சு இங்கேயும் அப்படிப்பட்ட படங்கள் வரலாம்.’’
   
`` `வேதாளம்' படத்துல அஜித்துக்கு தங்கையா நடிச்சீங்க... இப்போ அவரோடு பேசுறது உண்டா?’’

``இல்லை. கடைசி நாள் ஷூட்டிங் முடியும்போது கைகுலுக்கி `Have Fun. But be careful'னு சொன்னார். இன்னமும் அந்த வார்த்தைகள் மட்டும் ஞாபகத்துல இருக்கு. அதை எப்பவுமே மறக்க முடியாது. அதுதான் நான் அவரோடு கடைசியாப் பேசினது. அஜித், ரொம்ப நல்ல மனிதர்.’’

``சரி... நீங்க நடிக்கிற படம் சரியாப்போகலைனு நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும்போது எப்படி எடுத்துப்பீங்க?’’

``ஒண்ணு சொல்லவா... என் படம் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் நான் கேரளாவில்தான் இருப்பேன்.  சில நேரம் நான் நடிச்ச படத்தோட ரிலீஸ் தேதியைக்கூட மறந்துடுவேன். அப்படித்தான், `வேதாளம்' ரீலீஸ் தேதியை மறந்தேன். அன்னைக்கு என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்கூட வெளியே ட்ரிப் போகலாம்னு பக்காவா ப்ளான் போட்டுக் கிளம்பிட்டிருந்தேன். `வேதாளம்' புரொடக்‌ஷன் டீம்ல இருந்து போன் பண்ணப்பதான், படம் ரிலீஸ் தேதி ஞாபகம் வந்தது. ஆனால், என்னைப் பற்றி நெகட்டிவ் விமர்சனம் வரும்போது, அது சரியா இருந்தால்... ஏத்துப்பேன்.’’

    “அஜித் சொன்னதை மறக்க முடியாது!”

``காலேஜ் படிச்சுட்டிருந்தீங்களே..?’’

சலிப்பாக... ``அது ஒரு பெரிய கதை. `ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போனா, சினிமாவுல காட்டுற மாதிரி கெத்தா ஜாலியா இருக்கும். செமையா என்ஜாய் பண்ணலாம்’னு நினைச்சேன். அங்கே போனாத்தான் தெரியுது ஸ்கூலைவிட காலேஜ் வெரி ஸ்ட்ரிக்ட். அதுவும் எங்க இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் செம மொக்கை. மூணு மாசம்தான் காலேஜ் போனேன். அதுலயும் பாதி நாள் க்ளாஸுக்குப் போகலை. ஏகப்பட்ட அசைன்மென்ட்ஸ் வேறு. அடப் போங்கப்பானு காலேஜுக்கு டாட்டா பை பை சொல்லிட்டேன்.''

``அப்போ படிக்கலையா?’’

``வாழ்க்கைக்கு கண்டிப்பா படிப்பு அவசியம். இப்போ கரஸ்பாண்டன்ஸ்ல அதே கோர்ஸைப் படிக்கிறேன். இங்கிலீஷ்  பாடமாச்சேனு முதல்ல ரெண்டு மூணு இங்கிலீஷ் நாவல்களை எடுத்துப் புரட்டினேன். ம்கூம்... சுத்தமா ஒண்ணும் புரியலை. நாவல் புரியற அளவுக்கு நமக்கு மெச்சூரிட்டி வரலைனு அதை எல்லாம் ஓரம்கட்டி வெச்சுட்டேன். நேரம் கிடைக்கும்போது உலக சினிமாக்கள் பார்க்கிறேன். அதுவும் ஒரு படிப்புதானே!’’