Published:Updated:

“அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”
News
“அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

கார்க்கிபவா, பா.ஜான்ஸன், படங்கள்: கே.ராஜசேகரன்

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

``கொஞ்சம் பெரிய கேப்தான். ஆனால், இது நானே விரும்பி எடுத்துக்கிட்டது. நிறைய வருஷம் வேலை செஞ்சிருக்கோம்னு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பிரேக். இனி வரப்போற நாட்கள் அப்படி இருக்காது. நிறைய புராஜெக்ட்ஸ் வரிசையா இருக்கு'' - நிதானமாகப் பேசுகிறார் யுவன் ஷங்கர் ராஜா.

வெங்கட் பிரபுவுடன் `சென்னை-28 பார்ட் 2', `கற்றது தமிழ்’ ராமுடன் `தரமணி', செல்வராகவனுடன் ஒரு படம், கெளதம் மேனனுடன் ஒரு படம்... என யுவன் ஷங்கர் ராஜாவின் கம் பேக் செய்திகள்தான் டாக் ஆஃப் தி கோலிவுட்.

``கெளதம் மேனன் - தனுஷின் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு நீங்கள்தான் இசையா?''

``இப்போதைக்கு எதுவும் சொல்லக் கூடாதுனு என் வாயைக் கட்டிப்போட்டிருக்காங்க. சில விஷயங்கள் கன்ஃபர்ம் ஆகலை; சில விஷயங்கள் கன்ஃபர்ம் ஆகியிருக்கு. கொஞ்ச நாள்ல உங்களுக்கே எல்லாம் தெரிய வரும். நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.''

``மோஸ்ட் வான்டட் செல்வா + யுவன் காம்போ... அந்த ஆச்சர்யங்களில் ஒன்றாக இருக்குமா?''

``கூடிய விரைவில் கூட்டணி சேரும். நானும் அதை ரொம்ப எதிர்பார்த்துக் காத்திட்டிருக்கேன். ஸ்டே ட்யூன்டு!''

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”
   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

`` `கற்றது தமிழ்', `தங்கமீன்கள்' படங்களுக்குப் பிறகு, மீண்டும் ராம் உடன் `தரமணி'. என்ன எதிர்பார்க்கலாம்?

`` `தரமணி', நிச்சயம் வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும். ஏன்னா, இதில் இசை சம்பந்தமான விஷயங்கள்ல நிறையவே ஃபார்வேர்டு திங்கிங்ல போயிருக்கேன். டீஸர்லயே பார்த்திருப்பீங்க. அதேபோல படம் முழுக்க இசையும் பாடல்களும் வேற மாதிரியான உணர்வைக் கொடுக்கும்.''

``முதல்முறையா ஒரு ஹாலிவுட் புராஜெக்ட் (Woolfell) பண்றீங்க...வேலைகள் எப்படிப் போயிட்டிருக்கு?''

``இன்னும் ஆரம்பிக்கலை. ஜூலை மாதம் தொடங்கிடும்னு நினைக்கிறேன். முழுமையான அனிமேஷன் படம். இன்டர்நேஷனல் மியூஸிஷியன்ஸை உள்ளே கொண்டுவர்ற திட்டமும் இருக்கு. அனிமேஷன் படங்களுக்கு மியூஸிக் ஸ்கோர் முதல்ல எழுதிட்டு, அப்புறமா அனிமேஷன் பண்ணுவாங்க. ஸ்டோரி போர்டு பார்த்தே கம்போஸ் பண்ணணும். ஒரு கதையை இசை மூலமா சொல்லக்கூடிய பொறுப்பு இருக்கும். எனக்கு `அலாவுதீன்', `ஃபைண்டிங் நீமோ' மாதிரி நிறைய அனிமேஷன் படங்களும் அதனுடைய இசையும் பிடிக்கும். இந்தப் படமும் நிச்சயம் நல்லா வரும். ஆர்வமா காத்திருக்கேன்.''

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

``இசை நிகழ்ச்சிகள் நிறையப் பண்ண ஆரம்பிச்சீங்க... அப்படியே நின்னுடுச்சே?''

``போன வருஷம் பண்ணினேன். இந்த வருஷம் நிறையப் படங்கள்ல கமிட் ஆனதால, அதைக் கொஞ்சம் தள்ளிப் போட வேண்டியதாகிடுச்சு. கம்போஸிங், ரிக்கார்டிங், பேக்ரவுண்ட் ஸ்கோர்னு நேரம் போயிட்டிருக்கு. `யுவன் ரெக்கார்ட்ஸ்'னு என்னோட லேபிள் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கான வேலைகளும் போயிட்டிருக்கு. கூடிய சீக்கிரம் உலகம் முழுக்கவே இருக்கும் புதுப்புதுத் திறமையாளர்களை அறிமுகப்படுத்தப்போறேன்.''

``நீங்க இசையமைப்பாளர் ஆகி 20 வருஷங்கள் முடிஞ்சிடுச்சு. ஆனாலும் செல்வராகவன், வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், ராம்னு சிலருடைய படங்கள்ல மட்டும் தனியா தெரியுது. அவங்க ஏன் ஸ்பெஷல்?''

``நான் ஒரு சட்டை மாதிரி. என்னை, காலரைத் தூக்கிட்டும் போட்டுக்கலாம்; ஒரு பட்டனை அவிழ்த்துவிட்டும் போட்டுக்கலாம். அப்படித்தான் ஒரு கம்போஸரா இயக்குநரோடு சேரும்போது இசையே மாறும். அப்பா இசையை கவனிச்சா, அவர் பாரதிராஜா அங்கிளோடு சேரும்போது ஒரு மாதிரி இருக்கும், மணிரத்னம் சாரோடு பண்ணும்போது வேற மாதிரி இருக்கும், பாலு மகேந்திரா சாரோடு பண்ணும்போது வேற மாதிரி இருக்கும். ஒரு கம்போஸர் அப்படித்தான் இருக்கணும். இது அப்பாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள்ல ஒண்ணு.''

``புது இசையமைப்பாளர்கள்ல யார் இசையை கவனிக்கிறீங்க?''

``நிறைய கேட்கிறேன். சந்தோஷ் நாராயணன் ரொம்ப நல்லா பண்ணிட்டிருக்கார். அனிருத் கலக்குறார்.

ஜி.வி.பிரகாஷ்... இப்போ அவர் பிஸியான ஹீரோவும் ஆகிட்டார். இமான் மியூஸிக்ல அப்பாவுடைய பாதிப்பை அதிகம் உணர்றேன். இப்போ வர்ற எல்லாரும் நல்லா பண்ணிட்டிருக்காங்க. எல்லோருக்கும் என் வாழ்த்துகள்''.

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

``இசையமைப்பாளர், ஹீரோ ஆகும் சீஸன்ல நீங்க ஏன் வரல?''

``அது மாதிரி திட்டம் எல்லாம் இருந்தது. என் அம்மாவுக்கு நான் ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, எனக்கு இருந்த கமிட் மென்ட்ஸ் வெச்சு பார்த்தப்போ, ஒரு படத்துக்கு என்னால அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாதுனு தோணுச்சு. அதனால அந்தப் பக்கம் போகவே இல்லை.''

``குட்டிப் பாப்பா `ஸியா' எப்படி இருக்காங்க... ஸியாக்கு என்ன அர்த்தம்?''

``அப்பா ஸ்தானத்துக்குப் போறதுங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணம். எல்லாருக்குமே வாழ்க்கையில இப்படி ஓர் அழகான காலம் இருக்கும். அதுக்குள்ள நுழையும்போதுதான் அந்த சுகம் புரியுது. என்னைப் பொறுத்தவரை ஒரு குழந்தைமேல அப்பாவைவிட அம்மாவுக்குத்தான் அதிக உரிமை இருக்கு. அதனாலதான் குழந்தைக்குப் பேரைக்கூட என் மனைவியைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன். `ஸியா'னா `ஒளி'னு அர்த்தம். ரொம்ப அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு.''

   “அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு!”

``இஸ்லாம், உங்களுக்கு தனிப்பட்ட முறையில என்ன மாற்றங்கள் கொண்டு வந்திருக்கு?''

``நிறைய விஷயங்கள்ல. அது ஒரு தனிமனிதனுடைய அனுபவமா இருக்கிறதால, அதை என்னால பகிர்ந்துக்க முடியலை. நான் உணர்ந்த விஷயத்தை உங்களையும் உணர வைக்க முடியாது இல்லையா! என் அனுபவத்தில் இஸ்லாம் எனக்கு நிறைய மாற்றங்களைத் தந்திருக்கு.''

``எதிர்காலத் திட்டங்கள்..?''

``இப்போதைக்கு `யுவன் ரெக் கார்ட்ஸ்', நிறையப் படங்களும் இருக்கு. இது இன்னும் சில வருடங் களுக்குப் போகும். அப்புறமா, மியூஸிக் ஸ்கூல் ஒப்பன் பண்ண லாம்னு ஐடியா இருக்கு. ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைக்கலாம்.''