
ஓவியங்கள்: கண்ணா

``கட்சியில சேர்றதுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறது ஓல்டு ஃபேஷன் ஆகிடுச்சு தலைவரே, இன்னும் ட்ரெண்டியா ஏதாச்சும் பண்ணணும்!''
``மீம்ஸ் போடச் சொல்வோம்!''
- விகடபாரதி

``தோல்வியை எதிரிக்குக் கொடுத்தே பழக்கப்பட்டவன் நான் என்பதை...”
“தலைவரே... பதவி ஏற்பு விழா முடிஞ்சு, சட்டசபைக் கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு!”
- வி.சகிதாமுருகன்.

“தலைவரை ஏன் ‘அரசியல் ராஜதந்திரி’னு சொல்றாங்க?”
“அரசியல்ல எதுவும் செய்யாமலேயே இந்தப் பெயர் வாங்கியிருக்காரே.அதுக்குத்தான்!”
- கி.ரவிக்குமார்

``தலைவரைக் கண்டாலே பயந்து நடுங்குறியே ஏன்?”
“தேர்தல் முடிஞ்சுது, மனுஷன் இனி நடைபயணத்துக்குக் கூப்பிடுவாரே!”
- வி.சகிதாமுருகன்

``எங்கள் கூட்டணி ஜெயிக்காது என்பது எங்களுக்கு முன்னரே தெரியும்.”
“மக்களுக்கும்தான்!”

``அரண்மனையில் புலவர்கள் வருகையே இல்லையே மந்திரி!”
“வர்ற புலவர்கள்கிட்ட எல்லாம் நீங்க கைமாத்து கேட்டா யாரு வருவாங்க?”

``க்ளைமாக்ஸை எங்கே வைக்கலாம்?”
“கன்டெய்னர்ல வைங்க ட்ரெண்டியா இருக்கும்!”
- வி.சகிதாமுருகன்

``சைலன்ட் மோடுனா என்னய்யா?''
``தேர்தல் தோல்விக்கு அப்புறம் நீங்க இருக்கிறீங்களே... இதுதான் தலைவரே!''
- விகடபாரதி
ஓவியம்: பிரேம் டாவின்ஸி


``ஒப்பன் பண்ணா...''
``மதியம் 12 மணிதானே?''
- அம்பைதேவா

``கருத்துக்கணிப்பில் அடிக்கடி ஜெயித்த எங்கள் கட்சியை, கொஞ்ச காலமாவது ஆட்சி அமைக்க அனுமதிக்கக் கூடாதா?’’
- எஸ்.மோகன்

``என்ன எதிர்பார்க்கிறீங்க சம்பந்தி?''
``ஒரு கன்டெய்னர்தான்!''
- அ.ரியாஸ்

``இனியும் பொறுக்க முடியாதா... பொங்கியெழுந்துவிடுவோமா மன்னா?''
``யோவ்... `வலி பொறுக்க முடியல'னு சொன்னேன்யா!''
- சு.அருண் பிரகாஷ்