Published:Updated:

"ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”

   "ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”
News
"ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”

கார்க்கிபவா, படம்: தி.குமரகுருபரன்

   "ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”

``லைவ் ரிக்கார்டிங் எனக்குப் பழக்கம் இல்லை. தமிழ்ல சரளமாப் பேசணும். எல்லோருக்கும் புரியுற மாதிரி சுவாரஸ்யமாப் பேசணும். ஸ்கிரிப்ட் இல்லை. ரொம்ப நெர்வஸா இருந்தது'' - தொலைக்காட்சியில் முதல் நாள் ஷூட்டிங் அனுபவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் அர்விந்த் சுவாமி. `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' ஷூட்டிங்கில் போட்டியாளர்களை கேள்விகளால்
துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவரைப் பிடித்து ஹாட் ஸீட்டில் உட்காரவைத்துக் கேள்விகளை அடுக்கினேன்... எந்தவித லைஃப் லைன்களும் இல்லாமல் மின்னல் வேகத்தில் பதில்கள் பளிச்சிட்டன.

``டி.வி நிகழ்ச்சிக்கு எப்படி ஓ.கே சொன்னீர்கள்?''

``விஜய் டி.வி-யில இருந்து வந்து என்னை அப்ரோச் பண்ணாங்க. அமிதாப் சார் பண்ண ஷோவுக்கு அப்புறம் மற்ற எந்த கேம் ஷோவும் நான் பார்க்கலை. ஆனா, எனக்குப் பிடிச்ச விஷயங்கள் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'யில நிறைய இருக்கு. இது ஒரு க்விஸ் போட்டி, பணம்கிறதையும் தாண்டி, பலருடைய கனவுகளும் இதில் இருக்கு. இந்தப் பணம் அவங்க கனவை நனவாக்க உதுவுது. இது விளையாட ரொம்பத் தைரியம் வேணும். பேட்டிங் பண்றப்ப அவுட் ஆனா என்ன ஆகும்னு யோசிச்சா, பேட் ஒரு பக்கம் பால் ஒரு பக்கம் போகும். நம்ம ஃபோகஸ் நிகழ்ச்சியில மட்டும் இருக்கணும். ஆன்சர் தெரியுறதைவிட, தைரியமா விளையாடணும். அந்தத் தைரியத்தை நான் அவங்களுக்குக் கொடுக்கணும். இந்த சேலஞ்ச் எனக்குப் பிடிச்சது. உடனே
ஓ.கே சொல்லிட்டேன்.''

``எப்படிப் போகிறது ஷோ?''

``நிறையப் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குது. ரொம்ப தூரத்துல இருந்து எல்லாம் வர்றாங்க. அவங்க லைஃப் ஸ்டோரீஸ் கேட்க, புதுசா இருக்கு; இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. எனக்கு இது இன்ஸ்பைரிங்கான விஷயம். `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' எனக்கு ஒரு ஐ ஓப்பனர் மாதிரினு சொல்லலாம்.''

``வில்லனாக நடிக்கிறீர்கள். `டியர் டாட்' மாதிரியான படத்தில் வித்தியாசமான கேரக்டர் செய்கிறீர்கள். இப்போ டி.வி என்ட்ரி. இப்படி உங்களை தொடர்ச்சியாக உற்சாகமாக இயக்கும் அந்த சீக்ரெட் விஷயம் என்ன?''

``என்னால எந்த ஒரு விஷயம் செய்ய முடியாதுனு நினைக்கிறனோ, அதை செஞ்சு பார்க்கணும்னு விரும்புவேன். இந்த ஷோ பண்றதுக்கு முன்னாடி என்னால தமிழ் சரளமாப் பேச முடியாதுனு நினைச்சேன். லைவ் ஷோ பண்ண முடியுமானு டவுட் இருந்தது. இப்ப அதை செஞ்சு பார்க்கிறேன். ஒரு நடிகனாவும் மனுஷ னாகவுமே இந்தத் தேடல் இருக்கணும். அப்படி ஒரு விஷயம் பண்ணணும்னா உழைப்பு தேவை. அது பற்றி நிறைய யோசிக்கணும். அதை எல்லாம் சின்சியரா செய்றேன். முதல் எபிசோடுல கொஞ்சம் நெர்வஸ்னஸ் இருந்துச்சு. இப்ப பெட்டர். இந்த சினிசியாரிட்டி கடைசி எபிசோடு வரைக்கும் இருக்கணும்னு நினைக்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். வாழ்க்கையே இது மாதிரியான சவால்களாலதானே சுவாரஸ்ய மாகுது.''

``ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்தி ரத்தில் நடிக்க எப்படிச் சம்மதித்தீர்கள்?''

`` `டியர் டாட்' ஒரு சின்னப் படம். ஆனா, அது பேசின சப்ஜெக்ட் ரொம்ப தனித்தன்மை யானது. அது வணிகரீதியா வெற்றி அடையுறதுக்காக எடுத்த படம் இல்லை. அந்தக் கதை கேட்டப் பதான் நிஜத்துல அப்படி நம்ம ஊர்ல நிறையப் பேர் இருக்காங்கனு தெரிஞ்சிக்கிட்டேன். அவங்களால யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தேவை இல்லாத பயத்துலயே இந்தச் சமூகம் அவங்களை ஓரமா வெச்சிருக்கு. அது தேவை இல்லைன்னு நான் பெர்சனலா ஃபீல் பண்றேன்.''

   "ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”

``உங்கள் இமேஜ் பற்றி கவலைப்படவில்லையா?''

``ஒரு நடிகனா என்னோட தனிப்பட்ட விருப்பங்களை ஓரமா வெச்சிட்டுத்தான் கேரக்டரைப் பார்க்கணும். நான் ரொம்ப நல்லவன். என்னை மாதிரி ஒரு ஆள் எப்படி சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் பண்ண முடியும்னு யோசிக்கலாமா? அப்படித்தான் `டியர் டாட்'. ஒரு நடிகனா அந்த கேரக்டர் பண்றப்ப அவங்களோட பிரச்னைகளை நான் புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குது. அதை மட்டும்தான் நான் பார்த்தேன். அதைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைச்சது. என்னோட பெர்சனல் பார்வையை படத்துலயும் சொல்லலை; இந்தப் பேட்டியிலயும் சொல்லலை. நான் அவங்களைப் புரிஞ்சிக்க டிரை பண்ணேன். அதனால அந்தப் படம் பண்ணேன், தட்ஸ்ஆல்.''

``அழகான ஹீரோ என்ற இமேஜ், `தனி ஒருவனு'க்குப் பிறகு ஸ்மார்ட் வில்லனாக மாறியிருக்கிறதே?''

``அது ரொம்பப் பழைய எண்ணம்னுதான் சொல் வேன். ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது. நான் ஒரு நடிகன். என் கேரக்டர் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கானு பார்ப்பேன். `தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யூ அப்படி ஒரு கேரக்டர். அதை மக்களும் ஏத்துக்கிட்டாங்க. அவ்ளோதான். என்னை மக்கள் நல்லாவே ரிசீவ் பண்றாங்க. அவங்க என்னோட நடிப்பைதான் பார்க்கிறாங்க, வில்லனா பார்க்கலை.''

`` `தளபதி' படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என நிறையப் பேர் விரும்புகிறார்கள். ஒருவேளை அப்படிச் செய்தால், நீங்கள் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவீர்கள்... ரஜினியா மம்மூட்டியா?''

``நான் அதே அர்ஜுன் கேரக்டர் பண்ணணும்னுதான் ஆசைப்படுவேன்.''

``யாருக்கு வில்லனாக நடிக்க ஆசை?''

``அப்படி எல்லாம் நினைச்சதே இல்லை. என்கூட யார் நடிக்கிறாங்கங்கிறது எனக்கு முக்கியம் இல்லை. என் ரோல் பற்றிதான் நிறைய யோசிப்பேன்.''

``உங்களுடைய குரல், முகம் இரண்டில் எது பெஸ்ட்?''

``நான் ரெண்டை பற்றியும் கவலைப்பட்டதே இல்லை. இந்த ஷூட்லகூட கேமராமேன்கூட அடிக்கடி விவாதம் வரும். `கொஞ்சம் டச்சப் பண்ணிக்கோங்க சார்'னு சொல்வார். நான் பண்ண மாட்டேன். பிரேக்ல மேக்கப் அசிஸ்டென்ட் கண்ணாடி எடுத்துட்டு வந்தா எனக்குக் கோபம் வரும். `நல்லாதான் இருக்கு போ'னு சொல்லிடுவேன். நான் அழகா இருக்கேனோ, என் குரல் நல்லா இருக்கானு நான் நினைச்சதே இல்லை.''

``இந்தக் காலத்தில் ஆண்-பெண் உறவு எப்படி மாறியிருக்கிறது என நினைக்கிறீர்கள்?''

``அப்படியேதான் இருக்கு. ஒண்ணும் மாறல. கொஞ்சம் ஓப்பனா இருக்காங்க. எப்பவுமே ஒரு காலகட்டத்துல இருந்த வேல்யுஸ் அடுத்த ஜெனரேஷன் மேல திணிக்கக் கூடாது. மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு, சமூகம் சொல்லுதுன்னு வேற ஒண்ணை செஞ்சாதான் தப்பு. எதுக்கு நடிக்கணும்? மத்தவங்களை ஹர்ட் பண்ணாம என்ன பண்ணாலும் தப்பு இல்லை. இன்றைய இளைஞர்கள் யாரையும் ஹர்ட் பண்றதா தெரியலை. ஓப்பனா இருக்காங்க. அது ஒண்ணும் தப்பு இல்லை.''

``விபத்தில் சில வருடங்கள் படுக்கையிலேயே இருந்தீர்கள். அதில் இருந்து மீண்டு மாரத்தான் எல்லாம் ஓடினீர்கள். எப்படிப் போகிறது ஓட்டம்?''

``நான் ஹாஃப் மாரத்தான்தான் ஓடினேன். 21 கி.மீ. இப்ப அதுக்குன்னு எதுவும் சிறப்புப் பயிற்சிகள் எடுக்கலை. ஃபிட்டா இருக்க உடற்பயிற்சிகள் பண்றேன். அதுபோதும் 21 கி.மீ ஈஸியா ஓடிடுவேன்.''

``உங்களின் பிள்ளைகள் ருத்ரா, ஆதிரா எப்படி இருக்கிறார்கள்?''

``நல்லா இருக்காங்க. வேகமா வளந்துட்டு வர்றாங்க. என் படம் எல்லாம் முன்னர் பார்த்தது இல்லை. நானும் காட்டலை. இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. வேலைக்குப் போயிட்டு வர்றேன்றதுதான் இதுவரைக்கும் தெரியும். இப்பதான் நான் என்ன எல்லாம் பண்றேன்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க.''

   "ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது!”

``அடுத்து என்ன படங்கள் பண்றீங்க?''

``ஜெயம் ரவிகூட `போகன்'. என்ன கேரக்டர் என்ன ரோல்னு எதுவும் இப்போ சொல்ல முடியாது. ஆனா, வெரி இன்ட்ரஸ்ட்டிங் கேரக்டர். தெலுங்குல `தனி ஒருவன்' ரீமேக், ராம்சரண் தேஜாவோடு நடிக்கிறேன்.''

``டைரக்‌ஷன் உங்களின் பல வருடக் கனவு. அதற்கான முயற்சிகள் எந்த அளவில் இருக்கின்றன?''

``சில ஸ்கிரிப்ட்ஸ் எழுதியிருக்கேன். அதைப் படமா எடுக்க, மும்பையில சில பேர் ஆர்வமா இருக் காங்க. அது சீக்கிரமே நடக்கும். ஆனா, அதுல நான் நடிக்க மாட்டேன். இயக்குநரா மட்டும்தான் இருப்பேன்.