Published:Updated:

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்

தையையும் லாஜிக்கையும் தூக்கிக் கடாசிவிட்டு் ஒற்றை வரி கலாய் கமென்ட்களை மட்டுமே நம்பி எடுக்கப் பட்டிருக்கும் இன்னொரு காமெடி சினிமா. டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும்,  அவர்களின் ‘மனதைரியத்தை’ப் பாராட்டியே ஆகணும்!

`கதை'னு ஒண்ணு எழுதறதுக்கு நமக்கே சங்கடமா இருந்தாலும், ஏதோ இருக்கிறதைச் சொல்லிடுவோம். 500 கோடி ரூபாயை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை, எம்.எல்.ஏ ரோபோ சங்கரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் அமைச்சர் ஒருவர். ரோபோ சங்கரோ, விபத்தில் சிக்கி தன் 10 வயதுக்குப் போய் சின்னப்புள்ளத் தனமாக நடந்துகொள்கிறார். இவரின் நம்பிக்கைக்கு உரிய விஷ்ணு விஷால், தன் காதலி நிக்கி கல்ராணிக்கு போலீஸ் வேலை வாங்கித்தரக் கேட்டு 10 லட்சத்தைத் தந்திருக்கிறார். ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப்பட்டு புஷ்பாவை டூப்ளிகேட் திருமணம் செய்யும் சூரி, புஷ்பாவிடம் இருந்து தன்னை எம்.எல்.ஏ காப்பாற்றுவார் எனக் காத்திருக்கிறார். 500 கோடி ரூபாய் ரகசியம் அறிய அமைச்சரின் மச்சான் அடியாட்களுடன் சுற்றிவருகிறார். இப்படி ரோபோ சங்கருக்காக `ஐ'யம் வெயிட்டிங்' என்பவர்களது வாழ்க்கை காமெடிகள்தான் கதை.

`நானும் சிவகார்த்திகேயன் மாதிரி ஆகணும்' என்ற அன்புக்கட்டளை யுடன் படத்தைத் தயாரித்திருக்கிறார் விஷ்ணு விஷால். ஓப்பனிங் சாங்கில் இருந்து எண்டு கார்டு வரை இன்னொரு `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஃபீல்தான். டிஸ்டிங்ஷன் இல்லை  என்றாலும் பாஸாகிவிடுகிறார் விஷ்ணு. #askpushpapurushan என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு, சூரியைக் களம் இறக்கியது வீண்போகவில்லை. `புஷ்பா புருஷன்' சூரியைப் பார்த்தாலே வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர். அவருக்கு பார்ட்னர்ஷிப்பாக ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸ் அடிக்கிறார் ரோபோ சங்கர்.

`ஏ.சி-யில படம் பார்க்கிறவங்க எனக்குத் தேவை இல்லை. பி.சி-யில பார்த்தா போதும்' என முடிவுசெய்து இயக்குநர் எழில் எடுத்திருக்கும் நான்காவது படம் இது. காமெடி, டபுள் மீனிங் வசனங்கள், கலர்ஃபுல் ஃப்ரேம்கள், அயிட்டம் பாடல்கள்... என ஒரு வெற்றிச் சூத்திரத்தைப் பிடித்துவிட்டார். ஆனால், `துள்ளாத மனமும் துள்ளும்' எழிலா இது?

திடீர் திடீரெனச் சிரிப்பது, அடுத்த நொடியே நெளிவது என ரசிகனுக்குக் குழப்பமான நிலைமை. இரண்டாம் பாதியில் வரும் அந்தக் `காலையில ஆறு மணி' ஜோக்குக்குப் பிறகு முடிந்துபோன படத்தை, தரதரவென அரை மணி நேரம் இழுத்துச் சென்றது வேஸ்ட். இந்தக் கதையில் லாஜிக் பார்த்தால், சமோசா விற்பவரே அடிக்க வரலாம் என்பதால் விட்டுவிடலாம். ஆனால், என்னதான் பாஸ் சொல்லவர்றீங்க?

`பேயா அலையலாம்... ஆனால் பேயான அப்புறம் அலையக் கூடாது'. 100 ஒன்லைனருக்குச் சிரித்தாலும் இப்படி ஏதாவது ஒன்று இரண்டுதான் மெமரியில் சேவ் ஆகின்றன.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்

`குத்தீட்டிக் கண்ணால...', `பப்பரமிட்டாய்...' இரண்டு பாடல்களை மட்டும் ரசிக்கிறது தியேட்டர். ஒளிப்பதிவில் எல்லாமே ஓவர் கலர்ஸ்.

`வேலைன்னு வந்துட்டா வெள்ளைக் காரன்' என்பது படத்தின் தலைப்பு. ஆனால், என்ன வேலை? சொல்லுங்க எழில்... சொல்லுங்க!

- விகடன் விமர்சனக் குழு