Published:Updated:

புதுக்கதை இல்லை... பொதுக் கதை!

ம.கா.செந்தில்குமார்

புதுக்கதை இல்லை... பொதுக் கதை!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''வளசரவாக்கம் ஸ்ரீ, புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் ஊர்மிளா, கேரளா மிதுன் முரளி, பெங்களூரு மனிஷா யாதவ், குரோம்பேட்டை முத்துராமன், தர்மபுரி சின்னச்சாமி...'' - எஃப்.எம். நேயர் விருப்பம் போல் தன் பட கேரக்டர்களைப் பட்டியல் இடுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர்கள்தான் 'வழக்கு எண் 18/9’ஐ நடத்தும் புதுமுகங்கள்.

 ''செல்போன் ஸ்காண்டல் பத்தின கதைனு படம் ஆரம்பிச்ச சமயம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா, இப்போ அந்த ஸ்காண்டல்கள் இங்கே ரொம்ப சகஜமாகிடுச்சே?''

''இது புதுசு, சினிமா வரலாற்றில் முதன்முறைங் கிற எந்த பில்டப்பும் கொடுக்க விரும்பலை. இது புதுக் கதை இல்லை. பொதுக் கதை. அதைப் புதுக் கதையா சொல்லியிருக்கேனாங்கிறதைப் படம் பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணிக்குங்க. ஆனா, கதை, காட்சிகளை உண்மைக்குப் பக்கத்துல வெச்சிருக்கேன்!''

புதுக்கதை இல்லை... பொதுக் கதை!

'' 'சாமுராய்’ அனுபவத்துக்குப் பிறகு, உங்க படங்களுக்கு 'புதுமுகங்களே போதும்’னு முடிவு பண்ணிட்டீங்களா?''

'' 'நான் அப்பவே நினைச்சேன்... அவன் கெட்டவனாத்தான் இருப்பான்னு’ இப்படி ரசிகன் யூகிச்சிடுவானோனு நினைச்சுத்தான் இந்தப் படத்துக்கு ஸ்டார்களைத் தவிர்த்தேன். புதுப் பசங்க பிரமாதமா பண்ணி இருக்காங்க. இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல வர்ற முத்துராமன், லெதர் எக்ஸ்போர்ட் தொழில் பண்ணிட்டு இருப் பவர். நிஜ கூத்துக் கலைஞனான 15 வயசு சின்னச்சாமினு எல்லா கேரக்டர்களும் ஆர்வமா, அபாரமா உழைச்சிருக்காங்க.

புதுக்கதை இல்லை... பொதுக் கதை!

எனக்கு வர்ற பணியாரத்தை நான் சுட்டுட்டு இருக்கேன். திடீர்னு பிரியாணி செய்யணும்னு ஆசை வந்தால், அதுக்குத் தேவையான தேக்சா, பாசுமதி அரிசி, இளம் ஆட்டுக்கறினு அமைஞ்சா நானும் ஒரு நாள் பிரியாணி செய்வேன். அதுக்கு டாம் குரூஸ், சல்மான், ஷாரூக்னு கான் களிடம் கால்ஷீட் வாங்குறதுனாலும் வாங்கிட்டு வருவேன். ஆனா, கதை வேணும்ல! எனக்கும் மனசுல எண்ணம் இருக்கு. ஆனா, அது ஆசையாத்தான் இருக்கே தவிர, கதையாகலை. ஷங்கர் சார்கிட்ட வேலை பார்த்தது, 'சாமுராய்’னு சுமாரா ஒரு படம் பண்ணினதுனு அதுக்கான அனுபவங்களும் இருக்கு. ஆனா, படிப்படியாப் போவோம்னு இருக்கேன்!''

''படம் முழுக்க ஸ்டில் கேமராவிலேயே ஷூட் பண்ணி இருக்கீங்களாம்... ரிசல்ட் எப்படி இருக்கு?''

''விஜய் மில்டன் 'காதல்’ கேமராமேன். என் காதலன். அவர்கிட்ட கதை சொன்னப்ப, 'என்னப்பா இது... ரீ-டேக் போனா, நானும் டென்ஷனாகுறேன். 'ஃபிலிம் ரோல் சாப்பிடுறோமே’னு நடிக்கிறவங்களும் பயந்து டென்ஷனாகுறாங்க. இதுக்கு முடிவே கிடையாதா?’னு பேசிட்டு இருந்தப்ப, 'அதுக்கு ஒரு வழி இருக்கு. சினிமாவை ஸ்டில் கேமராவிலும் எடுக்கலாம்’னு அவர்தான் இந்த ஐடியா சொன்னார். ஸ்டில் கேமராவில் டெஸ்ட் ஷூட் முடிச்சு ஃபிலிம்ல மாத்தி தயாரிப்பாளர் லிங்குசாமியிடம் காட்டினோம். 'சூப்பர். ஃபிலிம்ல எடுத்த மாதிரியே பளிச்னு இருக்கே’னு ஆச்சர்யத்தோடு அனுமதிச்சார்.  

ஃபிலிம் ரோல் இல்லைங்கிறதால நிறைய டேக் எடுத்து நல்ல பெர்ஃபார்மன்ஸ் வாங்கி, நிறைய நேரம் எடுத்துக்கிட்டு பண்ணோம். ஆனா, விடிய விடிய உட்கார்ந்து வெட்டி ஒட்டுன எங்க எடிட்டர் கோபி கிருஷ்ணாதான் பாவம். படம் முடியறதுக்குள்ள மனுஷன் பாதி கிருஷ்ணாவாகிட்டார்!''

''வேற என்ன விசேஷம் படத்துல?''

புதுக்கதை இல்லை... பொதுக் கதை!

''ஒரு குற்ற வழக்கில் வெவ்வேறு குரூப்பைச் சேர்ந்த நான்கு பேர் விசாரிக்கப்படுகிறார்கள். வழக்கை இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் கோணத்தில் இருந்து கதை விரியும். அவர் நான்கு கேரக்டர்களை விசாரிக்கும்போது, அது கண்ணுக்கு முன் கதையாக அமையும் வகையில் திரைக்கதை அமைச்சிருக்கேன். ஒவ்வொரு கேரக்டரை யும் விசாரிப்பதும் ஒரு கதை. அதை மொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால், அதுவே படத்தின் கதை. அதை அப்படியே நேர்மையாகப் பதிவு பண்ணி இருக்கேன்.  

மியூஸிக் பிரசன்னா. யு.எஸ்ல. செட்டிலான சென்னை ஐ.ஐ.டி. மாணவர். ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய 'ஸ்மைல் பிங்கி’ டாக்குமென்டரியின் இசையமைப்பாளர். அழகாப் பண்ணிஇருக்கார். இதைத் தூக்கி அதுல போடுறது, அதைத் தூக்கி இதுல போடுறதுனு கிரியேடிவ்வா நான் பண்ணின அராஜகங்களை இலக்கியமாப் புரிஞ்சுக்கிட்ட லிங்கு, அவர் தம்பி சுபாஷ் இருவரால்தான் இவ்வளவும் சாத்தியமாச்சு!''