பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

``தலைவர், தலைப்பாகையைக் கழற்றிட்டாரே... விவசாயிகள் கோரிக்கை நிறைவேறிடுச்சா?''

``வெயில் தாக்கம் குறைஞ்சிடுச்சாம்!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``நேரம் பற்றாக்குறையால், தலைவரைப் புகழ நினைப்பவர்கள் அதைப் பதிவுசெய்து வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

``நீங்க கொடுத்த பட்ஜெட்டை மீறி செலவு பண்றாங்கங்கிறது எல்லாம் சரி. அதுக்காக மனைவிக்கு எல்லாம் ரெட் கார்டு கொடுக்க முடியாது சார்!''

- மேகி

ஜோக்ஸ்

``அனைவருமே சகோதரர்கள் என்பதால், சட்டமன்றத்தை `சகோதர மன்றம்' என்றழைக்க வேண்டும் என...''

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

ஜோக்ஸ்

 “சொல்லுங்க, நீங்க யார்... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?”

 “காலையில உங்க டூ வீலர்ல என் வண்டியை இடிச்சுட்டுப் போயிட்டீங்க மேடம். நஷ்டஈடுதான் வேணும்.”

- யூஜி

ஜோக்ஸ்

``காமெடி ஸ்கிரிப்ட் சொன்னியே... புரொடியூசர் என்ன சொன்னார்?”

“சிரிச்சுட்டுப் போயிட்டார்.”

- உமா கௌரி

ஜோக்ஸ்

``சிக்னல்ல பார்த்து லவ் வந்தது கரெக்ட்தான். அதுக்காக `வீட்லயும் இப்படியே இரு'னு சொன்னா என்ன அர்த்தம்?”

- மேகி

ஜோக்ஸ்

``ஃப்ரெண்டு, ஹாஸ்பிட்டல்ல அடிபட்டிருக்கான்னு பிஸ்கட் பாக்கெட்டோட போனா...''

``என்னாச்சு?”

``பிஸ்கட் எல்லாம் வேணாம். நெட் கார்டு ஒரு மாசத்துக்குப் போடுங்கிறான்!’

- கிச்சா

ஜோக்ஸ்

``வாட்ஸ்அப் குரூப் அட்மினா இருக்கிறது தப்பாப்போச்சு.''

``ஏன்?''

``மெம்பர்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு போனஸ் கேட்கிறாங்க.''

- குமார்

ஜோக்ஸ்

``தீபிடிச்சுடுச்சுனு தீயணைப்பு அதிகாரியைசெல்போன்ல கூப்டா...

``என்னாச்சு?''

`` ‘நெருப்புடா’னு ரிங்டோன் வெச்சிருக்காரு!''

- ஸ்ரீஜா

ஜோக்ஸ்

``நீங்க இயக்குற படத்துல வில்லன் யார் சார்?''

``நேரத்துக்கு ஷூட்டிங் வராத ஹீரோதான்!”

- கேபிகே

ஜோக்ஸ்

‘`நான் லேட்டா வருவேன். டைனிங் டேபிள்ல டிபன் வெச்சுட்டு நீ தூங்கிடு.”

“நான் நாளைக்குக் காலையிலதான் வீட்டுக்கு வருவேன். நைட் நல்லா தூங்கிட்டு காலையில டிபனும் காபியும் ரெடி பண்ணி வைங்க.”

- சத்ரியன்

ஜோக்ஸ்

``எல்லாரும் கட்சியைவிட்டு போறேன்கிறாங்க தலைவரே!''

``ஏன்..?''

`` `வரும் முன் காப்போம்' திட்டமாம்!''

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ்

``நான் அரசியல்ல இருந்து விலகினா பொதுமக்கள் ரொம்ப வருத்தப்படுவாங்களா?''

``ஆமாம் தலைவரே, அவங்களுக்கு இருக்கிற ஒரே என்டர்டெய்ன்மென்ட் நீங்கதானே!''

- சி.சந்தோஷ்குமார்

ஜோக்ஸ்

`` `போர்... போர்'னு சத்தம் வருதே... என்ன அமைச்சரே?!''

``பயம் வேண்டாம் மன்னா, தங்களுடன் நகர்வலம் வருவதைத்தான் மகாராணி அப்படி கமென்ட் அடிக்கிறாங்க!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``தலைவரே... உங்களை அமைச்சரா அறிவிச்சிருக்காங்களாம்.''

`` `எந்தத் துறைக்கு?'னு கேளுய்யா.''

``அப்படியே, `எத்தனை மாசத்துக்கு?'னும் கேட்டுரவா?''

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ்

``தோல்விக்கான காரணங்களைப் பற்றி தலைவர் பேசுவார்.''

``அவர் பேசின பேச்சுதான் ஒரே காரணம்!''

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

``என்னப்பா இது?''

``கூட்டு சார்.''

``தலைவர் கண்ணுல காட்டிடாதே, இருக்குற கோபத்துல குதறி எடுத்துடுவார்!''

- தீ.அசோகன்

ஜோக்ஸ்

``நாமும் பணம் கொடுப்போம்னு எப்படிய்யா புரியவைக்கிறது?''

``அடுத்த எலெக்‌ஷன்ல கன்டெய்னர் சின்னத்தில் நில்லுங்க தலைவரே!''

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

``வக்கீல் நிறைய ஜோக்ஸ் படிப்பார்போல!''

``எப்படிச் சொல்ற?''

``ஜட்ஜை `எசமான்...'னு கூப்பிடுறாரே!''

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு