Published:Updated:

“மகன், அப்பாவாகும் கதை!”

ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி
“மகன், அப்பாவாகும் கதை!”

‘‘ ‘இலக்கை அடைவதைவிட பயணம் சிறப்பாக அமைவதே மேல்’னு ‘மூடர்கூடம்’ படத்துல வர்ற முதல் வரி மாதிரிதான் வாழ்க்கை. இலக்கை நோக்கி ஓடும்போது இருக்கிற வாழ்க்கையை விட்டுடக் கூடாது இல்லையா? அதனாலதான் சினிமாவுக்குச் சின்ன பிரேக் விட்டுட்டு அம்மா, அக்கா, மனைவி, குழந்தை, நண்பர்கள்னு எல்லாருக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பெர்சனல் வாழ்க்கையை வாழ்ந்துட்டு, இப்போ திரும்பவும் சினிமாவுக்கு வந்துட்டேன். ‘மூடர்கூடம்’ லாபத்தை வைச்சு அடுத்த படம் தயாரிக்க ஆரம்பிச்சிருக்கேன். படம் ரிலீஸுக்கு ரெடி’’ எனக் கைகுலுக்குகிறார் இயக்குநர் நவீன். ‘மூடர்கூடம்’ முடித்தவர் அடுத்து படம் இயக்குவார் என நினைத்தால், தன் அசோசியேட் தனராம் சரவணன் இயக்கும் ‘கொளஞ்சி’ படத்தைத் தயாரிக்கிறார்.

‘‘ ‘கொளஞ்சி’ தலைப்பே வித்தியாசமா இருக்கு. என்ன கதை?’’

‘‘12 வயசு சேட்டைக்காரப் பையனுக்கும் கண்டிப்பான அப்பாவுக்குமான கதை. அந்தச் சின்னப் பையனின் பாயின்ட் ஆஃப் வியூலதான் கதை போகும். அந்தப் பையன்தான் கொளஞ்சி. படத்தின் இயக்குநர் தனராம் சரவணன், அவர் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை அடிப்படையா வெச்சு கதை பண்ணியிருக்கார். நமக்கு கல்யாணமாகி, குழந்தை பெத்துக்குற வரைக்கும் அப்பா நமக்கு ஒரு எதிரியாத்தான் தெரிவார். அறிவுரை சொன்னா பிடிக்காது. ஆனா, நாம அப்பாவாகும்போதுதான், அப்பா நமக்காக என்ன எல்லாம் பண்ணியிருக்கார்னு உணர முடியும். அதை உணரும் டிரான்சிஷன் பீரியடு இந்தப் படத்துல இருக்கு. எல்லா மனிதர்களும் தங்களை ரிலேட் பண்ணிக்கக்கூடிய கதை.’’

“மகன், அப்பாவாகும் கதை!”
“மகன், அப்பாவாகும் கதை!”

‘‘அப்பா கேரக்டர்னாலே சமுத்திரக்கனிதான் நினைவுக்கு வருகிறார்!’’

‘‘இதில் அப்பா கேரக்டர் ரொம்ப முக்கியம். ‘கனி அண்ணன் பண்ணினா நல்லா இருக்கும்’னு தனராம் சரவணன் நினைச்சார். ‘ஆனா, கனி அண்ணன் பயங்கர பிஸி, சம்பளமும் பெருசு. அவரை எப்படி ஃபிக்ஸ் பண்றதுனு யோசனை. சுப்ரமணியசிவா அண்ணன்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, ‘உன் அடுத்த படத்தை ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கோம்டா தம்பி’னார். ‘அப்பதான் அவர்கிட்ட `கொளஞ்சி’ கதையையும், கனி அண்ணன் பண்ணா நல்லா இருக்கும்’கிற விஷயத்தையும் சொன்னேன். அடுத்த 2 மணி நேரத்துல கனி அண்ணன்கிட்ட இருந்து அழைப்பு. ‘நான் நடிக்கணும்னு நீ முடிவு பண்ணிட்ட. நான் எப்ப இருந்து வரணும்னு சொல்லு’னு எல்லாத்தையும் அவரே பேசி முடிச்சிட்டார். படத்துல சங்கவி ரீ-என்ட்ரி ஆகுறாங்க. நோ மேக்கப். கிராமத்து அம்மா ரோல். பிரமாதமா நடிச்சிருக்காங்க.’'

“மகன், அப்பாவாகும் கதை!”
“மகன், அப்பாவாகும் கதை!”

‘‘ `கொளஞ்சி' கேரக்டர்ல நடிக்கிற பையனை எங்கே இருந்து கூட்டிட்டு வந்தீங்க?’’

‘‘பையன் பேர் கிருபாகரன். ராசிபுரம் அரசுப் பள்ளியில படிக்கிற ஒரு சாதாரண குடும்பத்துப் பையன். அந்த கொளஞ்சி கேரக்டருக்கு அவ்வளவு அழகா, யதார்த்தமாப் பொருந்தியிருக்கான். படத்துல அந்தப் பையனைச் சுற்றி அழகான நட்பு இருக்கும். அவனோட மாமா பையன் ராஜாஜியும் பெரியப்பா பொண்ணு நேனா சர்வாரும் காதலிப்பாங்க. இப்படி காதல், ரொமான்ஸ், காமெடினு படத்துல எல்லாமே இருக்கு. ஒன்றரை அடி மட்டுமே வளர்ந்த ஒரு பையன் இந்தப் படத்துல வர்றான். அது பெரிய சர்ப்ரைஸ் கேரக்டர். அவன் கேரக்டர் பேர் `அடிவாங்கி’. இன்னும் இந்தப் படத்தோட ஷூட்டிங்கே முடியலை. அதுக்குள்ள கனி அண்ணனின் ‘அப்பா’ படத்துல முக்கியமான ரோல்ல நடிக்கிறான். அவன் பேர் நஸாத். என் சித்தப்பா பையன்.'’

‘‘குடும்ப வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘‘ ‘மூடர்கூடம்’ ஷூட்டிங் சமயத்துல கல்யாணம். அந்தப் படம் ரிலீஸ் சமயத்துல என் மனைவி சிந்து  கர்ப்பம். ‘நல்ல கணவனா இருக்கணும். குழந்தை பிறந்ததும் அதன் மழலையை நாம மிஸ் பண்ணிடக் கூடாது. வேலையில இருந்து ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கணும்’னு நினைச்சேன். என் முதல் பொண்ணு சிவின். அவளோட ஒவ்வொரு அசைவையும் நான் பார்த்திருக்கேன். அவளுக்கு இப்ப ரெண்டு வயசு. அடுத்ததா ஒரு பையன் பிறந்திருக்கான். பேரு `சே’, ஒரு வயசு. வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு