பிரீமியம் ஸ்டோரி
ஜாலி பிரதர்ஸ்!

மிழ் சினிமாவில் அரிதாகப் பார்க்கக்கூடிய  பெண் இயக்குநர்களில் புதுவரவு உஷா கிருஷ்ணன். ‘மெட்ராஸ்’ கலையரசனும், காமெடியில் கலக்கும் காளிவெங்கட்டும் இணையும் ‘ராஜா மந்திரி’ படத்தின் இயக்குநர்.

``இதுல நீங்க நினைக்கிற ராஜா, மந்திரி யாரும் கிடையாது. கிராமத்துல அண்ணன்-தம்பிகளைக் கொஞ்சும்போது `என் ராஜா... என் மந்திரி’னு சொல்வாங்கல. அந்த மாதிரி இரண்டு பேரைப் பற்றிய படம். `ஆண்பாவம்’ பாண்டியன் - பாண்டியராஜன் மாதிரி ரொம்பவே ஜாலியான ரெண்டு சகோதரர்களின் கதை. அவங்ககூட இருக்கிற பத்து, பதினைந்து பேர். அவங்க வாழ்க்கைதான் படம்.”

``கலையரசன் - காளிவெங்கட்?”

“காளிவெங்கட்தான் அண்ணன்... அந்த கேரக்டர் என் அப்பாவை மனசுலவெச்சு உருவாக்கினது. எங்க அப்பாவுக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆச்சு. பல இடங்கள்ல அவரை வேணாம்னு சொன்னாங்களாம். அவர்கிட்ட `என்ன என்ன காரணத்தால ரிஜெக்ட் பண்ணாங்க?'னு நான் கேட்டிருக்கேன். அதை எல்லாம் மனசுலவெச்சுத்தான் எழுதினேன். நான் ஸ்கிரிப்ட் எழுதுறப்பவே அந்த கேரக்டர் கொஞ்சம் குள்ளமா இருக்கணும். 35 வயசாகியும் கல்யாணம் ஆகாத ஆளுக்கான தோற்றம் இருக்கணும். கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை இருக்கிறவர்னுதான் எழுதியிருந்தேன். பார்க்க இயல்பாவும் அதேசமயம் எப்பவும் பதற்றமாவும் இருக்கணும். இது எல்லாத்தையும் சேர்த்து பார்த்தப்ப காளிவெங்கட் சரியா பொருந்தினார்.

ஜாலி பிரதர்ஸ்!

கலையரசன், அதுக்கு அப்படியே எதிர்பக்கத்துல நிக்கிற ஆள். பார்க்கவே அராத்தா இருக்கணும். பார்த்த உடனே பிடிச்சுடணும். எப்பவும் எல்லோரையும் கலாய்க்கிற ஆளு. முகத்தைப் பார்த்த உடனே அந்த கேரக்டர் தெரியணும்னு நினைச்சேன். அதுக்கு கலையரசன் சரியா இருந்தார். காளிவெங்கட், கலையரசன் ரெண்டு பேரையும் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பார்த்து கதை சொல்லி ஓ.கே வாங்கி வெச்சிருந்தேன். அதுக்கு அப்புறம்தான் அவங்களுக்கு பேர் வாங்கித்தந்த `மெட்ராஸ்’, `முண்டாசுப்பட்டி’ படங்கள் எல்லாம் வந்தது.

இரண்டு கதாநாயகிகள். ஒருத்தவங்க வைஷாலி. காளிவெங்கட்டுக்கு ஜோடி. இன்னொருத்தவங்க ஷாலின் ஜெயா, கலையரசனுக்கு ஜோடி. கேரளாவுல குழந்தை நட்சத்திரமா பேரு வாங்கின நடிகை. படத்துல ரெண்டு பேருக்கும் முக்கியத்துவம் உண்டு.

ஜாலி பிரதர்ஸ்!
ஜாலி பிரதர்ஸ்!

“ஒரு பெண் இயக்குநரா தயாரிப்பாளர், ஹீரோக்களைச் சந்தித்து கதைசொல்வது எளிதான வேலையாக இருந்ததா?”

“30, 40 தயாரிப்பாளர்களைச் சந்திச்சு கதை சொல்லியிருக்கேன். நிறைய ஹீரோக்கள்கிட்டயும் சொன்னேன். அறிமுக இயக்குநர், டபுள் ஹீரோ சப்ஜெக்ட், பெண் இயக்குநர்னு, அவ்வளவு ஈஸியா படம் கமிட் ஆக முடியலை. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல கையில இந்த ஸ்கிரிப்டோடுதான் சுற்றினேன். அப்பவே என் மேல நம்பிக்கைவெச்சது ரெண்டு பேர். ஒருத்தர் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா சார். அவர்தான் `விடாம முயற்சி செய். நான் ஒளிப்பதிவு பண்றேன். கதை சொல்றப்ப சொல்லு’னு எனக்குத் தைரியம் சொன்னார். இந்தப் படத்தை கோ-புரொடியூஸும் பண்ணியிருக்கார். இன்னொருத்தர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். என் ஸ்கிரிப்டைப் படிச்சுட்டு ரொம்பப் பிடிச்சுபோய், `நான் இசையமைக்கிறேன்’னு அப்பவே சொன்னார். அவர் இசையமைத்த பாடல்கள்ல ஓர் உயிர் இருக்கும். இந்தப் படத்துக்கு அது தேவையான விஷயம். ரொம்ப அழகான இசையைத் தந்திருக்கார். படத்துக்கு இசையும் ஒளிப்பதிவும் பெரிய பலம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு