Published:Updated:

ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்
ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி
ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

`ஆண் பாவம்' படத்தை மிக்ஸியில் அடித்த மாதிரி செம கலாட்டாவான `ராஜா மந்திரி'!

 அண்ணன் காளி வெங்கட்டையும், தம்பி கலையரசனையும் `என் ராசா... என் மந்திரி...' எனக் கொஞ்சுகிறார்கள் அவர்களது பெற்றோர்.

35 வயதாகியும் திருமணம் நடக்காத காளி வெங்கட்டுக்கு ஒருவழியாக ஒரு சம்பந்தம் ஓ.கே ஆக, குறுக்கே வருகிறது கலையரசனின் காதல். அந்தக் குட்டி ட்விஸ்ட் எப்படி முடிகிறது என்பதுதான் கதை.

ராஜாவையும் மந்திரியையும் வைத்து ஜாலி தர்பார். சிரித்த நொடியே மறக்கவைக்கும் ஒன்லைனர் சீஸனில், இயல்பாக நகைச்சுவையை இழைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் உஷா கிருஷ்ணன். 35 வயது `இளம்’ பேச்சுலராக பச்சக் எனப் பொருந்துகிறார் காளி வெங்கட். `இந்தக் கல்யாணமும் நடக்கலைன்னா, நான் செத்துடுவேன்டா' என்ற ஒற்றை வசனத்தில் சிரிக்க மறந்து, அழவைக்கிறார். அராத்து பிரதர் கலையரசனுக்கு `மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு ரசிக்கவைக்கும் கதாபாத்திரம். வைஷாலி, ஷாலின் ஜெயா என இரண்டு கதாநாயகிகளும் அழகு.

காளி-கலை காம்போவைத் தாண்டி ரசிக்கவைக்கிறார் பாலசரவணன்.

இயல்பான உடல்மொழியால் சீனுக்கு சீன் ஸ்கோர்செய்கிறார். குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும், எல்லா நடிகர்களுமே கிராமத்துச் சாயலோடு இருப்பது இதம். பக்கத்து வீட்டு சித்தப்பூ கதாபாத்திரம், எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார் என்பதைத் தவிர படத்தில் நெகட்டிவ் விஷயங்களே இல்லை.

கதை எந்தக் காலத்தில் நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு `பழைய' வாடை. காலேஜ் அட்மிஷனுக்கு போஸ்ட்கார்டு வருவது, மொபைல் என்ற `எங்கும் நிறை பரபிரம்மனுக்கு’ திரைக்கதையில் எந்த இடமும் இல்லை எனப் பல நெருடல்கள். இடைவேளையில் கலையரசனுக்குக் கிடைக்கும் அந்த ஷாக்கை, இரண்டாம் பாதி முழுக்கத் தீர்க்காமலே போய்ய்ய்ய்....கொண்டிருப்பது போர்.

ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

`எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே...' மட்டும் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஈர்க்கிறது.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் அசல் கிராமத்தின் வாசனை.

சின்ன ராஜ்ஜியம் என்றாலும், நல்லாட்சி தருகிறார்கள் ராஜா- மந்திரி!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு