பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

``யாரங்கே?’’

``டெசிபலைக் குறையுங்கள் மன்னா, எதிரி அணுக்கத்தில் வந்துவிட்டான்!’’

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``புறமுதுகிட்டு ஓடும் மன்னர் எதிரி மன்னரிடம் என்னவோ சொல்லிவிட்டு ஓடுகிறாரே, என்ன சொன்னார்?’’

`` `எனக்கு இன்னொரு போர் இருக்கு’னு சொன்னார்!’’

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ்

``புலவர் ட்ரெண்டியா பாட ஆரம்பிச்சுட்டார்னு எதை வெச்சு சொல்றே?’’

``பக்கம் பக்கமா பாடுறதை விட்டுட்டு, பத்து செகண்டுல பாடி முடிச்சுடுறாரே!’’

- வி.சகிதா முருகன்

ஜோக்ஸ்

`` `ஆண்ராய்டு போன் வேணும்’னு மன்னர் கேட்கிறாரே, ஏன்?’’

``வாட்ஸ்அப்ல வார் நடத்தப்போறாராம்!’’

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``நம்ம தலைவர் பேப்பர் எல்லாம் படிச்சு ரொம்ப கெட்டுப்போயிட்டார்’’

``ஏன்?’’

``இரட்டைக் குழந்தைகளைக் காட்டி பேர் வைக்கச் சொன்னா, `எல் நினோ, லா நினோ’னு பேர் வைச்சுட்டார்!’’

- எம்.ஜி.பரத்

ஜோக்ஸ்

``என்ன, உங்க தலைவர் சென்னைக்கு வந்தா, பேசவே மாட்டேங்கிறார்!’’

``நான்தான் சொன்னேனே, `அவருக்கு டெல்லியிலதான் வாய்ஸ் அதிகம்'னு’’

- அ.ராதா

ஜோக்ஸ்

``எலெக்‌ஷன் தோல்வியில் இருந்து பாடம் படித்துக்கொண்டிருக்கும் எங்கள் தலைவருக்கு, கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி அதிகாரிகளை வன்மையாக் கண்டிக்கிறேன்.’’

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

 ``ஒரு ஸீட்டுகூட ஜெயிக்கலையே `வெற்றிக் கூட்டணி'னு எப்படிச் சொல்றீங்க?’’

``வெற்றிகரமா 30-வது நாளா கூட்டணி உடையாமப் பார்த்துக்கிறோமே!’’

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

`` `கூட்டு’னா, தேர்தலுக்கு முன்னாடி தலைவருக்கு பாயசம் மாதிரி!’’

``இப்போ?’’

``பாய்சன் மாதிரி!’’

- தீ.அசோகன்

ஜோக்ஸ்

``இன்னும் கொஞ்சம் நாள் சட்டையில கறை படாமல் தைரியமா இருக்கலாம்.’’

``எப்படிச் சொல்றீங்க?’’

``விற்கிற விலைவாசியில எவனும் தக்காளியை என் மேல வீச மாட்டான்!’’

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

``தன் வீட்டுக் கல்யாணத்துல தலைவர் ஏதோ கோரிக்கை வைக்கிறாரே என்ன அது?’’

``மொய்ப் பணத்தை மறு எண்ணிக்கை பண்ணணுமாம்!’’

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

 ``கட்சிப் பொதுக்குழுவை உடனே கூட்டணும்.’’

``எதுக்கு தலைவரே?’’

``கட்சியில யாராவது இருக்காங்களான்னு பார்க்கத்தான்யா!’’

- வி.சகிதா முருகன்

ஜோக்ஸ்

``கல்யாணப் பத்திரிகையில `பின்குறிப்பு’னு போட்டிருக்கே, என்ன அது?’’

`` `ஐந்நூறு ரூபாய்க்கு மேல மொய் எழுதினா, மணமக்கள்கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்’னு போட்டிருக்கு!’’

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்

 ``நீங்க சொல்ற கதையைப் படமா எடுத்தா ஓடுமா?’’

``ஷ்யூரா ரெண்டரை மணி நேரம் ஓடும் எசமான்!’’

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``நம் மன்னர் `ரன்வே சரியில்லை'னு சொல்றாரே. ஏர்போர்ட்டுக்கு எப்ப போனார்?’’

``புறமுதுகிட்டு ஓடிவர்ற பாதை குண்டும் குழியுமா இருக்குங்கிறதைத்தான் இப்படிச் சொல்றார்!’’

- சு.அருண் பிரகாஷ்

ஜோக்ஸ்

``மன்னா, நம் படைக்கு `பறக்கும் படை' எனப் பொருத்தமாகத்தான் பேர் வைத்துள்ளீர்கள்!’’

``எப்படிச் சொல்கிறீர் தளபதியாரே?’’

``எதிரியைக் கண்டதும் பறந்துவிட்டார்களே!’’

- சு.அருண் பிரகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு