Published:Updated:

“நான் குழந்தை மாதிரி!”

பா.ஜான்ஸன், படம்: கே.குணசீலன் ஓவியம்: பிரேம் டாவின்ஸி

பிரீமியம் ஸ்டோரி
“நான் குழந்தை மாதிரி!”

``நான் சான்ஸ் தேடி அலைஞ்ச காலங்கள்தான் என்னை முழு காமெடியனா மாத்திச்சு. ஒரு படத்துக்கு ஆடிஷன்னு போய் நிப்பேன். அவங்களும் `எங்க... நடிச்சுக்காட்டுங்க'னு சொல்வாங்க. நானும் `இந்த முறை சான்ஸ் வாங்கியே தீரணும்டா'னு வெறியோடு நடிப்பேன். நல்லா சிரிச்சுட்டு, `ஓ.கே நல்லாவே பண்றீங்க. நாங்க கூப்பிடுறோம்'னு சொல்லி அனுப்பிடுவாங்க. வெளியே வந்து பார்த்தா, அங்கே இருக்கும் பசங்க, `பாஸ்... இந்தப் படத்துக்கான ஷூட்டிங் எப்பவோ முடிச்சிட்டாங்க. இதுக்காகவா ஆடிஷனுக்கு வந்தீங்க?'னு கேட்டு சிரிக்கும்போதுதான் புரியும் இவ்ளோ நேரம் நம்மள வெச்சு காமெடி பண்ணியிருக்காங்கனு'' - டெரராகச் சிரிக்கிறார் யோகி பாபு.

`பன்னி மூஞ்சி வாயனாக' ட்ரெண்ட் ஆகி, `எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் லோன்லி டைகராக ரகளை செய்திருப்பார்.

``என்னோட அப்பா ராணுவ வீரர். நமக்கும் ராணுவத்துல சேரணும்னுதான் ஆசை. ஃபுட்பால் ப்ளேயர்ங்கிறதால ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல உள்ளே போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, கிடைக்கலை. ஒருநாள், என்னோட நண்பர் ஒருத்தர் கூட `லொள்ளு சபா' செட்டுக்குப் போயிருந்தேன். அப்போ நான் மொட்டை போட்டிருந்தேன். என்னோட உருவத்தை மொட்டை மண்டையோடு யோசிச்சுப்பாருங்க... கொடூரமா இருக்குல. `யார்ர்ரா இவன், ரொம்பப் பயங்கரமா இருக்கான்?'னு சாமிநாதன் சார், `இனிமே இப்படித்தான்' இயக்குநர் ஆனந்த் எல்லாரும் கொஞ்சம் விலகி நின்னாங்க.

“நான் குழந்தை மாதிரி!”

இயக்குநர் ராம் பாலா சார் மட்டும் கூப்பிட்டு விசாரிச்சார். ` `லொள்ளு சபாவு'ல நடிக்க விருப்பம் இருக்கா?'னு கேட்டார். முதல் மூணு மாசம் கூட்டத்தோடு கூட்டமா நின்னு தலையாட்டுற வேலைதான். அதுக்குப் பிறகு, சின்னச்சின்ன ரோல் கிடைச்சது. அமீர் சார் நடிச்ச `யோகி' படம் மூலமா சினிமா சான்ஸ் கிடைச்சது. சுந்தர்.சி சாருடைய `கலகலப்பு' படம்தான் எனக்குப் பெரிய பப்ளிசிட்டியைக் கொடுத்தது. `நம்ம காமெடியை மக்கள் ரசிக்கிறாங்க'னு நினைக்கும்போது, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

``உங்க காமெடியை மக்கள் நல்லா ரசிக்கிறாங்க. இதை எதிர்பார்த்தீங்களா?''

``சத்தியமா இல்லைங்க. நான் தெருவுல நடந்து போகும்போதும், புது ஆட்களைச் சந்திக்கும்போதும் எல்லாரும் என்னைப் பார்த்து லைட்டா பயப்படுவாங்க. நம்ம உருவம் அந்த மாதிரி. ஆனா, தினமும் கண்ணாடியில முகத்தைப் பார்த்து `ஊரே உன்னைப் பார்த்து பயப்புடுது. ஆனா, நீ எவ்ளோ பெரிய தமாசு மூஞ்சினு உனக்கு மட்டும்தான்டா தெரியும்'னு சொல்றது யாருக்கும் தெரியாது. படத்துல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த டெரர் லுக் போயி, காமெடி லுக் வந்துடுச்சு. யார் எல்லாம் என்னைப் பார்த்து பயந்தாங்களோ, இப்ப அவங்க எல்லாரும், `டேய், சரியான டம்மி மூஞ்சிடா நீ'னு சிரிச்சு பேசறாங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாபுனு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் குழந்தை மாதிரி சார்.''

“நான் குழந்தை மாதிரி!”

``உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கே. இதுக்குப் பின்னாடி நிச்சயம் ஒரு கதை இருக்குமே!''

``நான் பொறந்ததில் இருந்தே எனக்கு முடி இப்படித்தாங்க இருக்கு. ஒருமுறை சுந்தர்.சி சார் `தலைக்கு என்னடா போடுற?'னு கேட்டார். `ஷாம்புதான் சார்'னு சொன்னேன். `அதை எல்லாம் போட்டா முடி கொட்டிடும்டா. உன் ஹேர்ஸ்டைல்தான் உன்னுடைய ப்ளஸ். பத்திரமா பார்த்துக்கோ'னு சொன்னார். அதோட, `நீ இந்தி படம் எல்லாம் ட்ரை பண்ணுடா. நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்'னு சொன்னார். அவர் வாய்முகூர்த்தம், ஒரே வாரத்துல ஷாரூக் கான் நடிச்ச `சென்னை எக்ஸ்பிரஸ்' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது.''

``உங்களை வெச்சு வர்ற மீம்ஸ் எல்லாம் பார்ப்பீங்களா?''

``நானே ஃபேஸ்புக்ல இருக்கேன் தலைவா. ஆல் அப்டேட்ஸ் ஐ நோ. `காக்கா முட்டை'யில `ஐ'யம் வெயிட்டிங்', `எனக்கே விபூதி அடிக்கப் பாத்தல்ல'னு ரெண்டு டயலாக்கையும் வெச்சு நெறைய மீம்ஸ் பண்ணிட்டிருக்காங்க. நெட்டுக்குப் போகும்போது எல்லாம் `எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?'னு ஒரே ஆச்சர்யமா இருக்கும். நம்மளைவிட அவங்க ரொம்ப நல்லாவே காமெடி பண்றாங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு