Published:Updated:

“பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 “பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”
“பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி
 “பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

‘‘ ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன்.  ‘துப்பாக்கி’, அதன் இந்தி ரீமேக் என அடுத்தடுத்து அவருடன் வேலை செய்து நிறையக் கத்துக்கிட்டேன். ‘சீக்கிரம், சேஃபா படம் பண்ணுங்க. சினிமாவின் எல்லா டிபார்ட்மென்ட்லயும் கவனம் செலுத்துங்க. வேகமாகக் கத்துக்கிறவங்களுக்கு, ஒரு படம் ரெண்டு படம் போதும். வாய்ப்பு வந்தா யோசிக்காமக் கிளம்பிடுங்க’ என்பார் முருகதாஸ் சார். இதோ நான் ‘சைனா’ பண்ணி முடிச்சுட்டேன்’’ - நம்பிக்கையுடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தனா. `மந்திரிகுமாரி', `பொன்முடி', `கலையரசி' உள்பட 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன்.

 “பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

‘‘ ‘சைனா’, தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கே. என்ன கதை?’’

‘‘சென்னை பர்மா பஜார்ல நாலுக்கு நாலு சைஸில் கடை வெச்சிருக்கிறவன்தான் என் ஹீரோ. தினமும் வர்ற வருமானத்தை வீட்ல கொடுக்கலைன்னா அம்மா-அப்பாவை எப்படி எதிர்கொள்றதுனு யோசிக்கிற நிலைமையில் உள்ள ஆள். அப்படிப்பட்டவனுக்கு ஒரு விஷயம் கிடைக்குது. நல்லவன்தான்... ஆனா, தன்னைத் தேடி வரும் விஷயத்தை ஏத்துக்காம விடுற அளவுக்கு நல்லவன் இல்லை. அப்படி தேடி வர்ற அந்தப் பொருளை அவன் ஏத்துக்கிறான். அது என்ன பொருள், அது அவனை எப்படி பாதிக்குது? அதுக்குப் பிறகு அவனோட வாழ்க்கை என்ன ஆகுது? இதுதான் ‘சைனா’.’’

‘‘கலையரசன், ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை நிரூபித்தவர். இதில் எப்படி பெர்ஃபார்ம் பண்ணியிருக்கார்?’’

‘‘இது வடசென்னை ஏரியாவில் நடக்கும் த்ரில்லர். இதுக்கு கலைதான் சரியான சாய்ஸ். அவர் உள்பட எல்லா கதாபாத்திரங்களுக்குமே ஒரு ஆரம்பம், ஒரு முடிவு இருக்கும்.  `சூது கவ்வும்' படத்தில் இன்ஸ்பெக்டரா நடிச்ச யோக் ஜேபி, இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.  ரீத்து வர்மா, ஹீரோயின். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டேனியலுக்கு படத்தில் செம கேரக்டர். இப்படி கதைக்கான கதாபாத்திரங்கள் தான் எங்கள் பலம்.’’

 “பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

‘‘ ‘சைனா’வில் வேற என்ன சிறப்பு?’’

‘‘ ‘சைனா’ மாதிரி பட்ஜெட் படத்தை சென்னையின் லைவ் லொக்கேஷன்ஸ்ல எடுக்கிறது பெரிய சவால். ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஆனா, அதற்கு எல்லாம் ஈடுகொடுத்து ஒரு ஷாட்கூட செட்டில் எடுக்காம எல்லாத்தையும் லைவாவே எடுத்திருக்கோம். அதுக்கு மிகப் பெரிய  உறுதுணை, இந்தப் படத்தின் கேமராமேன் அபிநந்தன். எல்.வி.பிரசாத் இன்ஸ்டிட்யூட்டின் கோல்டு மெடலிஸ்ட். கே.வி.ஆனந்த் சாரின் அடுத்த படத்துக்கு அபிதான் கேமரா. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘மதுபானக்கடை’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்த வேத் சங்கர் இசை. ‘மாரி-2’, செல்வராகவன் சாரின் படம் என நல்ல லைன்அப்பில் உள்ள பிரசன்னா எடிட்டிங்னு எங்கள் டீம்தான் படத்தின் ஸ்பெஷல்.’’

 “பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ!”

‘‘இன்னைக்கு நிறைய வசதிவாய்ப்புகள் இருந்தும் படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்ப்பதில் நிறையப் பிரச்னைகள் இருக்கே?’’

‘‘ஆமாம். ஒரு படம்கிறது பத்து கல்யாணம் பண்ற மாதிரி. இவ்வளவு போராட்டமும் ஒரு வாரம் ஓட்டவைக்கிறதுக்காகத்தான். அந்த ஒரு வாரம்கூட, நம்ம பண்ற பப்ளிசிட்டி ரீச் எப்படி இருக்குங்கிறதைப் பொறுத்துதான். ‘உறியடி’ செம படம். பெரிய தியேட்டர்ல என்னோடு வெறும் 40 பேர்தான் இருந்தாங்க. ஆனா, அடுத்தடுத்த நாட்களில் நல்ல டாக். என் நண்பர்கள் படம் பார்க்கணும்னு தேடினாங்க. ஆனா, படத்தைக் காணோம். இன்னைக்கு இதுதான் பிரச்னை. ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆனா, டக்குனு சின்னப் படங்களைத் தூக்கிடுறாங்க. பெரிய படங்களுக்குப் பண்ற அளவுக்குச் சின்னப் படங்களுக்கு பப்ளிசிட்டி பண்ண முடியாது. சின்னப் படம், தனக்குத்தானே பப்ளிசிட்டி பண்ணிக்கவேண்டிய நிலை. அது நல்லா இருக்கு, இல்லைனு டாக் பரவுறதுக்குள்ள அதை காணாமல் போகச்செய்றதுதான் இங்கே பிரச்னை. முதல்ல அதை சரிபண்ணணும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு