Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 14

குறும்புக்காரன் டைரி - 14
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 14

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 14

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 14
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 14
குறும்புக்காரன் டைரி - 14

க்சுவலி, திருவள்ளுவர் 1330 குறள்களையும் வேற வேறயா எழுதினதால, ஜாலியா எழுதிட்டார். ஒரே ஒரு குறளை 200 தடவை இம்போசிஷன் எழுதச் சொன்னா, செம காண்டாகி இருப்பார். இம்போசிஷன் எழுதுறதுகூட கஷ்டம் இல்லை. பக்கத்துல ஒருத்தன் உட்கார்ந்து 'ஹிஹிஹி’னு நக்கலாச் சிரிக்கிறதுதான் கடுப்பா இருக்கும். வேற யாரு? என் அண்ணன் லோகேஷ்தான்.

என்னை அசிங்கப்படுத்துறதுக்குனே... எனக்கு முன்னாடி பிறந்த மாதிரி, நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் கலாய்க்கிறான். எல்லாம் பிரவீண் பயலால் வந்தது.

பல பஞ்சாயத்துகள், ரகளைகளோடு எட்டாம் வகுப்பை வெற்றிகரமா முடிச்சு, ஒன்பதாம் வகுப்பு வந்துட்டேன். புது சப்ஜெக்ட், புது மிஸ், புது க்ளாஸ்ரூம்னு ஒரு வாரம் செம ஜாலியா போயிட்டிருந்தது. அப்போதான், பிரவீண் எங்க ஸ்கூல்ல வந்து சேர்ந்தான். பார்க்க ரொம்ப அமைதியா, அப்புராணியா இருந்தான். ஆரம்பத்துல அவனைப் பெருசா கண்டுக்கல. ஒரு நாள், 'யாராச்சும் ஆபீஸ் ரூமுக்குப்போய் சாக்பீஸ் வாங்கிட்டு வாங்க’னு  க்ளாஸ் மிஸ் சொன்னாங்க.

எனக்கு முன்னாடியே துள்ளி எழுந்த பிரவீண், நிஞ்சா ஹட்டோரி மாதிரி தாவிக்கிட்டு ஓடினதும்,               'டேய் கிஷோர், இத்தனை நாளா சாக்பீஸ் வாங்க நீதானே போவே? அந்த பிரவீண் உன்னை ஓவர்டேக் பண்றான். இது சரியில்லை, நீ நம்ம கேங் லீடர். உன்னை ஒருத்தன் முந்த விடலாமா?’னு ஜெகன் கேட்டான்.

'இதென்னடா திடீர்னு கேங்க்,டான்னு பேசுறே. நேத்து வரைக்கும் அப்படி இல்லையே’ என்றேன்.

'அதெல்லாம் எட்டாம் வகுப்புல. இப்போ, ஒன்பதாங் கிளாஸ் வந்துட்டோம். கெத்து வேணாமா?’னு காலரைத்  தூக்கிவிட்டுக்கிட்டான்

குறும்புக்காரன் டைரி - 14

அவனோட இன்னும் ரெண்டு பேர் சேர,  புதுசா வந்த பிரவீணை, ராகிங் செய்ற முடிவுக்கு வந்தோம். பிரவீணும் பார்க்க சாதுவா இருக்கான். அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்கிற தைரியத்துல உற்சாகம் ரெண்டு மடங்கு ஆச்சு.

லன்ச் பிரேக்ல, பிரவீண் நடந்து வரும்போது நிறுத்தினோம். ஜெகன் ஒரு நோட்டை கீழே போட்டு, 'டேய், நோட்டை எடுத்துக்குடுடா’னு அதட்டினான். அவனும் எதுவும் பேசாம எடுத்துக் குடுத்துட்டுப் போனான். ஜெகன் எங்களப் பார்த்து, 'பாத்தியா கிஷோர், எப்படி ராகிங் பண்ணேன்’னு காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டான்.

அவனை முறைச்சுக்கிட்டே, 'டேய், இதெல்லாமா ராகிங்? டானுக்கு உண்டான மரியாதையே போச்சு. அவனைப் பெருசா கலாய்க்கணும்’னேன்.

'அப்படினா, கூட்றா மந்திரலோச்சனியை’னு ஆவேசப்பட்டான் ஜெகன்.

'அது யாருடா மந்திரலோச்சனி?’

'அந்தக் காலத்துல மன்னர்கள் கூட்டம்போட்டுத் தீட்டுவாங்களே.’

'அடத்தூ... அது, மந்திராலோசனைக் கூட்டம்டா’னு  ஜெகன் மேல வெறியோடு பாய்ஞ்ச நண்பர்களைத் தடுத்தேன்.

ஜெகன் சொன்ன மாதிரி, பிரவீணைக் கவிழ்க்க மந்திராலோசனை அவசியம்னு தோணுச்சு. ஒரு ஐடியாவும் சிக்கிச்சு. பிரவீணுக்குத் தமிழ் சரியா வராது. டா, தா ரெண்டையும் மாத்திச் சொல்லுவான். 'எது’ங்கிறதுக்கு, 'எடு’னு சொல்லுவான். இதைவெச்சு கவிழ்க்க முடிவு பண்ணிணோம்.

ஒவ்வொரு வாரமும் பொது அறிவை வளர்க்க, 'ஜூரோ ஹவர்ஸ்’ க்ளாஸ் நடக்கும். அப்போ, யார் வேணும்னாலும் யாரையும் கேள்வி கேட்கலாம். அந்த வாரம், பிரவீணுக்காகவே சில கேள்விகளை ரெடி பண்ணிட்டு வந்தேன்.

என்னோட முறை வந்ததும் பிரவீண்கிட்ட கேட்க ஆரம்பிச்சேன், 'சிங்கம் எங்கே வாழும்?

குறும்புக்காரன் டைரி - 14

பிரவீண் சட்டுனு சொன்னான், 'காத்துல.’

'அனுமன் கையில் என்ன இருக்கும்?’

'கடை.’

'ஜூஸ் கொடுத்தா என்ன பண்ணுவே?’

'குதிப்பேன்.’

மொத்த க்ளாஸ¨ம் விழுந்துவிழுந்து சிரிச்சது. எங்க ப்ளான் புரிஞ்சு டென்ஷன் ஆன மிஸ், 'அவனைக் கிண்டல் பண்றீங்களா? இனிமே, பிரவீண்தான் உங்க க்ளாஸ் லீடர்’னு சொல்லிட்டாங்க.

ஒரே செகண்டுல மொத்த கதையும் மாறிருச்சு. கட் பண்ணினா, க்ளாஸ்ல பிரவீண் ராஜ்ஜியம்தான். அவனும் நமக்கு ஈக்குவலா வெச்சு செஞ்சான்.

'மிஸ், கிஷோர் க்ளாஸ்ல பேசித்தே இருந்தான்.’

'மிஸ், கிஷோர் இன்னிக்கு லன்ச் முடிச்சு லேத்தா வந்தான்.’

'மிஸ், கிஷோர் சயின்ஸ் புக் எடுட்டுட்டு வரல மிஸ்’னு கொஞ்சம்கூட கேப் விடாம எல்லா மிஸ்கிட்டேயும் கோத்துவிட்டான்.

தமிழ் மிஸ், நேத்து பிரவீணை போர்டுல திருக்குறள் எழுதச் சொல்ல, நான் என்னையும் அறியாம 'டுப்பார்க்கு டுப்பாய’னு சிரிக்க, மிஸ்ஸ¨க்கு கேட்டுருச்சு. 'கிஷோர், மறுபடியுமா? நாளைக்கு 'துப்பார்க்கு துப்பாய’ குறளை 200 தடவை எழுதிட்டு வா’னு சொல்லிட்டாங்க. எனக்கு சீரியல்ல வர்ற சோக பேக்ரவுண்டு காதுல கேட்டுச்சு.

'டுப்பார்க்கு டுப்பாய’ ச்சீ... 'துப்பார்க்கு துப்பாய’ இன்னும் 30 தடவை பாக்கி இருக்கு. நான் போய் முடிக்கிறேன்

(டைரி புரட்டுவோம்...)