Published:Updated:

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

Published:Updated:
“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”
“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

`‘நானும் ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா சாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாளா பேசிட்டிருந்தோம். ஆரம்பத்திலேயே பண்ணியிருந்தால் திரும்பவும் அது ஒரு லொள்ளு சபா மாதிரிதான் இருந்திருக்கும். ஏன்னா, நாங்க ஷூட்டிங்னு கிளம்பிட்டாலே, அப்படியே பேசிப் பேசி காமெடியா எடுத்துட்டே இருப்போம். ஆனால், இப்ப எங்க சினிமா அனுபவம் வேறு ஒரு மெச்சூரிட்டியைத் தந்திருக்கு. ‘நாம சேர்ந்தாலே காமெடி தன்னால வந்துடும். ஆனால், அதையும் மீறி ஒரு நல்ல கதை, அதில் எமோஷன்ஸ், சென்டிமென்ட்னு மக்களை என்டர்டெயின் பண்ணக்கூடியதா இருக்கணும்னு முடிவுபண்ணி, ‘தில்லுக்கு துட்டு’ படத்துடன் வர்றோம்’’ - நகைச்சுவை நடிகராக இருந்தபோது ஹீரோக்களைக் கலாய்த்த சந்தானம், ஹீரோவான பிறகு இந்தப் படத்தில் கலாய்ப்பது பேயை!

‘‘அது என்ன தலைப்பு, ‘தில்லுக்கு துட்டு’?’’

‘‘ ‘நண்பேன்டா’, ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’னு நம்ம பட டயலாக்குகள் ஏற்கெனவே படத் தலைப்புகளா வந்துட்டிருக்கிற மாதிரி, நம்ம வசனத்துல இருந்தே நம் படத் தலைப்பை பிடிப்போம்னு தேடினோம். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ‘அந்தப் பொண்ணைப் போய்த் தூக்கணும்னு சொன்னதும் ஏன்டா பயப்படுற?’னு உதயநிதி கேக்கிறப்ப, ‘யாருக்கு பயம்? தில்லுக்கு துட்டுனு நிக்கிறவன்டா நான்’னு சொல்வேன். நம்ம ஏரியாவுல சீட்டு ஆடும்போது ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டு ‘சரி வா, தில்லுக்கு துட்டு கட்டலாம்’னு கடைசியா கையில இருக்கிற மொத்தக் காசையும் கட்டி விளையாடுவாங்க. அந்தத் ‘தில்லுக்கு துட்டு’ங்கிற வார்த்தையில  இருக்கும் ஃபோர்ஸ் எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைக்கு அந்த ஃபோர்ஸ் தேவை. அதனால அதையே தலைப்பா வெச்சுட்டோம்.’’

‘‘இந்தப் பேய்ல அப்படி என்ன ஃபோர்ஸ் இருக்கு?’’

‘‘ராயபுர ஹவுஸிங் போர்டு பையனுக்கும், பூண்டு, வெங்காயம்கூட சேர்த்துக்காத சௌகார்பேட்டை மார்வாடிப் பொண்ணுக்குமான லவ்னு தொடங்கி, ஆரம்பத்துல ராம்பாலா சார் சொன்னது முழுக்க ஒரு காதல் கதை. அதுல காமெடி, கலாய், ஆக்‌ஷன்னு என்ன வேணும்னாலும் விளையாடலாம்னு எனக்குத் தோணுச்சு. ஆனா, தயாரிப்பாளர் முரளி சார் ‘நல்லா இருக்கு. அதுல அப்படியே ஒரு பேயையும் சேர்த்துக்கங்க’னு, ஏதோ ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கச் சொல்ற மாதிரி  சொன்னார்.  ‘பழைய டெம்ப்ளேட் பேய்ப் படங்களுக்குள் சிக்காமத் தப்பிக்கணும்னா, பேயையே கலாய்ச்சாத்தான் முடியும்’னு ஐடியா பிடிச்சோம். அந்தக் கலாயும் காதலும் மிக்ஸ் ஆனப்போ எல்லாமே சரியா இருந்தது. அதுதான் ‘தில்லுக்கு துட்டு’.’’

‘‘புது ஹீரோயின் என்ன சொல்றாங்க?’’

‘‘பார்த்தாலே ‘இது சேட்டுப் பொண்ணுனு தெரியணும்’னு தேடினோம். அப்ப சிக்கினவங்கதான் ஷனாயா. பாம்பே பொண்ணு. இந்தியில் ஏற்கெனவே ஒரு படம் பண்ணியிருக்காங்க. தமிழ்ல இதுதான் முதல் படம். வில்லனா.

“பேயையே கலாய்ச்சிருக்கோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஹே ராம்’, ‘பி கே’ படங்கள்ல நடிச்ச சவுரவ் சுக்லா சாரை அழைச்சுட்டு வந்திருக்கோம். நான் அடிக்கிற ஒவ்வொரு கவுன்ட்டருக்கும் அவர் கொடுக்கிற ரியாக்‌ஷன்ஸ் செம.’’

‘‘அதென்ன, பேய் படம்னாலே மொட்டை ராஜேந்திரன் இருக்கணும் என்பது விதியா?’’

‘‘எங்களுக்கும் அதான் பிரதர் ஆச்சர்யம். டெரர் வில்லனான ராஜேந்திரனை, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துல காமெடியனாக்கியது நாங்கதான். ‘வாப்பா தல-தளபதி’ங்கிற அவரோட மாடுலேஷனே அள்ளும். ‘ராஜா ராணி’ படத்துல ‘உங்க தலையில பேனே ஏறாது, படிப்பு எப்படி சார் ஏறும்?’கிற டயலாக் செமயா வொர்க்கவுட் ஆச்சு. அப்படி இதுல அவரோட `ஸ்கெட்ச் மணி' கேரக்டர் மாஸா இருக்கும். இதேபோல சில காம்பினேஷன்ஸை நம்மால் மிஸ் பண்ணவே முடியாது. அப்படி எனக்கும் சிங்கமுத்துக்குமான எபிசோட் ஹைலைட்டா இருக்கும். படத்துல அவருக்கு கவுன்சிலர் கேரக்டர். ‘ஒண்ணும் கவலைப்படாத குமாரு. மொத்தப் பசங்களையும் கூட்டிட்டு வந்துடுறேன்’ம்பார். ‘ஏன் ஸ்கூல் லீவா?’ம்பேன். ‘அதுல்லப்பா, உனக்கு ஒண்ணுன்னா உள்ளே பூந்து அடிக்க வேணாமா?’ம்பார். ‘என்ன சுண்ணாம்பா?’ம்பேன். ‘இப்படித்தான் என்னை மதிக்கவே மாட்டான்’னு சமாளிப்பார்.

அதேபோல `லொள்ளு சபா' மனோகரை ஒரு சீன்ல வரவெச்சுட்டோம். படத்துலயே நிறைய டேக் வாங்கினவர் அவர்தான். ராம்பாலா டென்ஷனாகி அவரைத் தனியா கூட்டிட்டுப் போய், ‘மனோகரு, நான் ரொம்பக் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்திருக்கேன். என்னை மறுபடியும் டி.வி-க்கு அனுப்பிடாத. தயவுசெஞ்சு நான் சொல்றமாதிரி நடி’னு கெஞ்சுவார். இப்படி எல்லா கேரக்டர்களுமே சினிமாத்தனம் இல்லாம ஜாலியா லைவா இருக்கும்.’’

‘‘ஆக்‌ஷன், டான்ஸ்னு டஃப் ஃபைட் கொடுக்கிறீங்களே?’’

‘‘ஒரு ஃபைட் சீக்வென்ஸ்ல ராம்பாலா சார், ‘இது என்ன குழந்தை ஃபைட்டா, இடுப்புக்கு கீழேயே எட்டி உதைச்சுட்டு இருக்கிற? கால் மூஞ்சிக்குப் போகவேணாமா?’னார். ‘காலைத் தூக்கிக் கழுத்துல வெச்சு அடிக்க நான் என்ன ஆக்‌ஷன் கிங் அர்ஜுனா?’ன்னேன். ‘எப்ப அப்படிப் பண்றியோ, அப்ப ஷூட்டிங் வெச்சுக்கலாம்’னு பிரேக் விட்டுட்டார். பிறகு, ஹரி மாஸ்டரோட டீம் பிராக்டீஸ் கொடுத்தாங்க. காமெடி பாடி லாங்வேஜே இருக்கக் கூடாதுனு மாஸா ஒரு ஸ்டைல் கொண்டுவந்து பண்ணினோம். அதேபோலதான் டான்ஸும். படம் ரிலீஸுக்குப் பிறகு ‘இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம் போல’ங்கிற எண்ணம் மட்டும் வரக் கூடாது. ‘நாம பண்றதை மேக்ஸிமம் பண்ணிடணும். அதுக்கு மேல கடவுள், மக்களோட செயல்’னு நினைச்சு என் உழைப்பைப் போட்டிருக்கேன். நான் மட்டுமின்றி அந்த த்ரில், ரொமான்ஸைக் கடத்துற மாதிரி கேமரா பண்ணியிருக்கிற தீபக், ஏற்கெனவே ஹிட் அடித்த மூணு பாடல்களைத் தந்த தமன்னு ‘இது நம்ம படம்’னு நினைச்சு வொர்க் பண்ணின எங்க டீமோட வொர்க் ரொம்பப் பெருசு.’’