Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``பொது தேர்தலுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?''

``கன்டெய்னருக்கும் டிப்பர் லாரிக்கும் உள்ள வித்யாசம்தான்!'

- எஸ்.கோபாலன்

ஜோக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஹிலாரி, நம்ம தலைவருக்கு போன் பண்ணாங்களாமே... எதுக்கு?''

“ `ட்ரம்பைத் தோற்கடிக்க, ராஜதந்திரம் ஏதாவது தந்து உதவ முடியுமா?'னு கேட்டாங்களாம்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``வீட்டில் விசேஷத்துக்கு முன்னாடி தலைவர் என்ன அலம்பல் பண்றார்?'' ``விருந்தினர் முதல் லிஸ்ட்டை நாளைக்கு ரிலீஸ் பண்றாராம்!''

- எஸ்.ராமன்

ஜோக்ஸ்

``தலைவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்காங்க.'' 

``ஃபேஸ்புக்லயா, ட்விட்டர்லயா?''

``சி.பி.ஐ-ல!''

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ்

``தலைவரோட அலப்பறை தாங்க முடியலை.''

``என்ன பண்ணினார்?''

`` `நடிகை அனுஷ்கா வந்து யோகா சொல்லிக்கொடுத்தாதான் யோகா கத்துக்குவேன்'கிறார்.''

- க.சரவணகுமார்

ஜோக்ஸ்

``உங்ககிட்ட கடன் வாங்கியவரைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்படுறீங்க?''

``வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'னு மெசேஜ் அனுப்பியிருக்கார்!''

- சி.கார்த்திகேயன்

ஜோக்ஸ்

``தலைவரை ட்விட்டர்கள் எல்லோரும் பேட்டி எடுக்கிற மாதிரி, டி.வி-யில் ஒரு புரோகிராம்.''

``நிகழ்ச்சி பேரு?''

``கலாய்க்கப்போவது யாரு?''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

‘`வருகிற உள்ளாட்சித் தேர்தல்ல, நம்ம கட்சி ஒரு இடத்துலகூடத் தோற்கக் கூடாது. அதுக்கு என்னய்யா பண்ணலாம்?''

‘`போட்டியிடாம இருந்துடுவோம் தலைவரே!''

- க.சரவணகுமார்

ஜோக்ஸ்

``கட்சிகளைக் குறைக்கிறதுல தலைவருக்கு பெரும்பங்கு இருக்கு.''

``எப்படிச் சொல்றே?''

``அடிக்கடி கூட்டணி அமைக்கிறாரே!''

- தீ.அசோகன்

ஜோக்ஸ்

``என்ன... தலைவர் வீட்ல சண்டையா?''

`` `இன்னோர் ஓட்டு யாரு போட்டது?'னு வீட்டுக்காரம்மா ஒரே ரகளை!''

- என்.கண்ணன்

ஜோக்ஸ்

 ‘`அதென்ன புதுசா செல்ஃபி யோகா?''

“கையை நீட்டி, விரலைப் பார்த்துச் சிரிக்கணும்!''

- கி.ரவிக்குமார்