Published:Updated:

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

ம.கா.செந்தில்குமார்

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”
“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

‘‘18 வருஷங்களுக்கு மேல் அண்ணனுடன் உதவியாளராக இருந்தேன். ஏகப்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள்னு அந்தச் சமயத்துலயே பார்த்துட்டதால சினிமா மேல ஈர்ப்பு இருந்த அளவுக்கு பிரமிப்பு இல்லை. அண்ணனின் மரியாதையைக் கெடுக்காம நடந்துக்கணும், தவறான படங்கள் பண்ணிடக் கூடாது என்ற எண்ணம் உள்ளவன். அதனாலதான் இந்தத் தாமதம்’’ - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். பிரபல கதாசிரியர் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் சகோதரர். ‘ராசய்யா’, ‘நான்தான் பாலா’ படங்களை இயக்கியவர், தற்போது புதுமுகங்கள் நடிக்க ‘சூதுவாது’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

‘‘என் அண்ணன்கிட்ட கதையையும், அதை சினிமாவாக்குற நுட்பத்தை இயக்குநர் லியாகத் அலிகான்கிட்டயும் கத்துக்கிட்டேன். பிறகு, ‘ராசய்யா’ மூலம் இயக்குநரா அறிமுகம் ஆனேன். அது வெற்றிப்படம்தான். ஆனா, என்ன காரணமோ தெரியலை, அடுத்து உடனடியா நான் படம் பண்ணலை. பிறகு பண்ணினதுதான் `நான்தான் பாலா'. இப்ப `சூதுவாது'.''

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நீங்க ரொம்ப சீனியர். ‘சூதுவாது’ இன்னைக்கு உள்ள டிரெண்டுக்கு இருக்குமா?’’

‘‘அப்பவும் இப்பவும் கதைகள் ஒண்ணுதான். ஆனா, அதை எந்த ட்ரீட்மென்ட்ல தர்றோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் ‘சூதுவாது’ எளிமையான, நேட்டிவிட்டியான கதை. அதை உணர்வுபூர்வமா சொல்லி யிருக்கேன். படம் பார்க்கும்போது நீங்க அந்த கேரக்டர்களோடு டிராவல் பண்ற ஃபீல் கிடைக்கும். ரெண்டு குடும்பப் பெண்களின் பிரச்னை ஒரு புள்ளியில் இணையுது. அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு பிறந்ததா... இல்லையா என்பதே ‘சூதுவாது’.’’

‘‘ஏன் புதுமுகங்கள்?’’

‘‘என்கிட்ட இருக்கிற பணத்துல ஒரு நல்ல படம் பண்ணணும்கிற எண்ணம்தான் காரணம். தவிர, எந்தச் சாயலும் இல்லாம புதுசா இருக்கும்னா புதுமுகங்கள்தான் சரியாயிருக்கும்னு நினைச்சேன். ஹீரோ சந்தோஷ் சரவணன், சேலத்துப் பையன். இன்ஜினீயரிங் மாணவன். ஒரு திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் அவரைப் பிடிச்சேன். அனுபவம் உள்ள ஹீரோ பண்ணவேண்டிய கேரக்டரை, அவ்வளவு அழகா முதிர்ச்சியா பண்ணியிருக்கார். முதல் பாதி முழுக்க ரகளையா சுத்துறவர், ரெண்டாவது பாதியில கதறவெச்சிடுவார். அதேபோல `நண்டு' ஜெகன், காமெடி , குணச்சித்திரம் ரெண்டையும் அவ்வளவு அழகா இணைச்சிருக்கார். அவரை இணை கதாநாயகன் என்றே சொல்லலாம். ஹீரோயின் சுனுலட்சுமி. முட்டைக் கண்ணும் வெரைட்டியான எக்ஸ்பிரஷனுமா அற்புதமா நடிச்சிருக்காங்க.'’

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’

‘‘ஹீரோ-ஹீரோயின் புதுசா இருந்தாலும் சீனியர் டெக்னிக்கல் டீமை ஒருங்கிணைச்சிருக்கேன். இசையமைப்பாளர் தாஜ்நூர். அவரின் ரீ-ரிக்கார்டிங்ல படம் பேசும். கதையை உள்வாங்கிட்டு உணர்வுபூர்வமாவும் ஆழமாவும் அர்த்தமுள்ள இசையைத் தந்திருக்கார். கேமராமேன் எம்.ஏ.ராஜதுரை, ராஜீவ் மேனனின் உதவியாளர். எந்த லைட்டிங்கும் செட் பண்ணாம இயற்கை வெளிச்சத்துலயே முழுப் படத்தையும் ஷூட் பண்ணியிருக்கார். வசனம், ‘ஆச்சர்யா’ ரவி. அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப நாம என்ன பேசுவோமோ அதை யதார்த்தம் மீறாம எளிய வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கார். ‘தனி ஒருவன்’ல தனிச்சு தெரிஞ்ச கோபி கிருஷ்ணா எடிட்டர். ஆர்ட் டைரக்டர் வைரபாலன்னு மாஸ் டீம்.’'

“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது!”

‘‘இந்தப் படத்தை உங்க சினிமா நண்பர்களுக்கு காட்டிட்டீங்களா..?’’

‘‘சில நண்பர்கள் படம் பார்த்தாங்க. ‘எல்லாரும் பரபரனு ஏதோ எடுத்தோம் வித்தோம்னு ஓட்டிட்டு இருக்கிறப்ப, நிதானமான, அழுத்தமான ஒரு படம் தந்திருக்கீங்க. படம் ஒருமாதிரியான வலியைக் கொடுக்குது. எங்களோட இந்த உணர்வு தமிழ்நாடு பூரா அப்ளை ஆகும்’னு சொன்னாங்க. சந்தோஷமா இருந்தது.’’