Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 15

குறும்புக்காரன் டைரி - 15
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 15

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 15

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 15
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 15
குறும்புக்காரன் டைரி - 15

ந்தச் சமூகம் என்னைக்குத்தான் என்னை மாதிரி விஞ்ஞானியை மதிச்சு இருக்கு? அதுசரி, ஆனானப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனையே கிண்டல் பண்ணிய உலகம்தானே இது?

போன வாரம் எங்க சயின்ஸ் மிஸ், 'நெக்ஸ்ட் வீக் நம்ம ஸ்கூல்ல மாவட்ட அறிவியல் கண்காட்சி நடக்கப்போகுது. அதுக்கு, கலெக்டர் வர்றார். நம்ம க்ளாஸ் சார்பா யாரெல்லாம் புராஜெக்ட் பண்றீங்க?’னு கேட்டதும், எனக்குள்ளே இருக்கிற விஞ்ஞானி 'டொய்ங்’னு வெளியில வந்தான். முதல் ஆளா கையைத் தூக்கினேன். ரெண்டாவதா, என் ஃப்ரெண்டு ஜெகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னைக்கு லன்ச் ப்ரேக்ல, என்ன புராஜெக்ட் பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். கையில ஒரு ஆப்பிளோட வந்த ஜெகன், 'கிஷோர், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. உன் புராஜெக்ட்டுக்கும் சேர்த்து நானே ஐடியா சொல்றேன்’னான்.

'சொல்லு ஜெகன், என்ன ஹெல்ப்?’னு  ஆர்வமானேன்.

ஆப்பிளை என்கிட்டே கொடுத்து, 'நான் அங்கே போய் நிக்கிறேன். இதை, ஓங்கி என் தலையிலே போடு’னு சொன்னான். நான் ஒண்ணும் புரியாமல், 'ஏன்டா?’னு கேட்டேன்.

'தலையில ஆப்பிள் விழுந்துதானே நியூட்டனுக்கு ஐடியா வந்துச்சு. அதே ஃபார்முலாவை நானும் ட்ரை பண்றேன்’னு சொன்னான். செம கடுப்பாகிட்டேன். அவன் தலையிலே போடத்தான் நினைச்சேன். நட்பு என் நெஞ்சைக் கிள்ளவே, ஓங்கி தரையிலே போட்டேன். ஆப்பிள் சிதறுன இடத்துல எறும்புங்கதான் வந்துச்சு, ஐடியா வரலை.

அன்னைக்கு ஈவ்னிங், ரூம்ல படுத்து யோசிச்சுட்டு இருக்கும்போது, 'லைட்  போடாம என்னடா பண்றே சோம்பேறிக் கழுதை. உனக்கெல்லாம்... கை தட்டுனா தானா எல்லாரும் வேலை செய்யணுமா?’னு அம்மா வந்து திட்டின அந்த நொடி, தலைக்குள்ளே பல்பு எரிஞ்சது

குறும்புக்காரன் டைரி - 15

'அம்மா, நீ தெய்வம்’னு அவங்க கால்ல தொப்புனு விழுந்தேன். கிஷோர், விஞ்ஞானி ஆகிட்டான். கை தட்டினா லைட் எரியணும். அதுதான் என் கண்டுபிடிப்பு. வருங்காலத்துல, 'பிரபல விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்’ புத்தகத்துல இந்தச் சம்பவம் வரப்போகுது. (அப்படி புத்தகம் எழுதுறவங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்! அம்மா சொன்ன 'சோம்பேறிக் கழுதை’ங்கிற வார்த்தையை மட்டும் தூக்கிருங்க ப்ளீஸ்).

அடுத்து என்ன? கடகடனு வேலையை ஆரம்பிச்சாச்சு. கூகுள்ல சில பல புத்தகங்களை ரெஃபர் பண்ணி, புராஜெக்ட்டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். கடையில் சில எலெக்ட்ரானிக் அயிட்டம்ஸ் வாங்கிட்டு வரும்போது, 'யுரேகா... யுரேகா’னு கத்திக்கிட்டே ஓடிவந்தான் ஜெகன்.

'என்னடா, ஐடியா வந்துருச்சா?’னு கேட்க, 'அதுக்குத்தான் இந்த ஃபார்முலா. யுரேகானு கத்திக்கிட்டே ஓடித்தானே ஆர்க்கிமிடிஸ் என்கிற விஞ்ஞானிக்கு ஐடியா வந்துச்சு’னு சொன்னான்.

தலையிலே அடிச்சுக்கிட்டு, 'ஒர்க்-அவுட் ஆகாதுடா. இப்படி டிரெஸ்ஸோடு ஓடினா எப்படி?’னு கேட்டேன். முறைச்சுக்கிட்டே போனான்.

அறிவியல் கண்காட்சி நாள். வருங்கால விஞ்ஞானிகள் வரிசையில் நானும் கடையை விரிச்சிருந்தேன். 'கிஷோர், உனக்குத் தாடி வளர்ந்தா, கிரஹாம் பெல் மாதிரியே இருப்பே’னு சயின்ஸ் மிஸ் உசுப்பேத்திட்டுப் போனாங்க. (சீக்கிரம் தாடி வளர ஏதாவது கண்டுபுடிக்கணும்)

கண்காட்சிக்கு வந்தவங்க, என் புராஜெக்ட்டுக்குப் பக்கத்துல வரும்போது மட்டும் நல்லா கைதட்டினாங்க. அதுவேற உடம்பைப் புல்லரிக்க வெச்சுது. முதல் பரிசே கிடைச்சுட்ட ஃபீலிங்.

கலெக்டரும் வந்து பார்த்தார். கடைசி ரவுண்டுக்கு அஞ்சு புராஜெக்ட் தேர்வாச்சு. அதுல என்னோடதும் ஒண்ணு. பக்கத்து க்ளாஸ் நவீன் கண்டுபிடிப்பும் ஒண்ணு. அவன் ஒரு ஷூ கண்டுபுடிச்சிருந்தான். அதைக் காலில் மாட்டிக்கிட்டு நடந்தா, மொபைல் சார்ஜ் ஆகுமாம்.

மத்தவங்க கண்டுபிடிப்புகள் சுமார். 'டஃப்’ கொடுக்கிறது நவீன்தான். 'முதல் பரிசு அவனுக்கா எனக்கா?’னு கன்ஃபியூஷன் வந்துருச்சு. ஈவ்னிங் பரிசளிப்பு விழா. அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரையும் வரச் சொல்லியிருந்தேன். வழக்கமா பேசுறதெல்லாம் வளவளனு பேசிட்டு, கடைசியா மேட்டருக்கு வந்தாங்க.

'அண்ட் த ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கோஸ் டூ...’னு இழுக்க, எனக்கு இதயம் துடிக்கிறது தெளிவா கேட்க ஆரம்பிச்சது. 'நவீன்’னு சொன்னதும் அழுகையே வந்துருச்சு

குறும்புக்காரன் டைரி - 15

கலெக்டர் பேசினார், 'ஆக்சுவலி, கைதட்டுனா லைட் எரியும் கிஷோரின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு தரலாமா, ஷூ போட்டு நடந்தா சார்ஜ் ஆகும் நவீன் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு தர்றதானு குழப்பம். இதுல, கிஷோரின் கண்டுபிடிப்பு சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்குது. நவீனின் கண்டுபுடிப்பு வாக்கிங் மாதிரி நல்ல பழக்கத்தை ஊக்குவிக்குது. அதனால், நவீனுக்கு இந்தப் பரிசு. நவீன் மேடைக்கு வரவும்’னு சொன்னார்.

அப்புறம் மத்தவங்களையும் கூப்பிட்டு, பரிசைக் கொடுத்தாங்க. கையைக் குலுக்கி, முதுகில் தட்டிக் கொடுத்தார் கலெக்டர். 'சரி, தோல்விதான் வெற்றியின் முதல் படி’னு மனசுல சொல்லிக்கிட்டேன். கீழே இறங்கிய நவீனை, மேடையின் முதல் படியில் பிடிச்சு, கை குலுக்கி வாழ்த்தினேன்.

கடைசி வரைக்கும் ஐடியா எதுவும் வராம, பார்வையாளனாகவே இருந்த ஜெகன் என் பக்கத்துல வந்து, 'கிஷோர், நீ மட்டும் அன்னைக்கு சரியா ஒத்துழைப்புக் கொடுத்திருந்தா, நான் பெஸ்ட் ஐடியாவைச் சொல்லி இருப்பேன். உனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ¨ம், எனக்கு செகண்ட் பிரைஸ¨ம் கிடைச்சிருக்கும். சான்ஸை மிஸ் பண்ணிட்டே’னு சொன்னான்.

'என்னடா சொல்றே?’னு புரியாம கேட்டேன்.

'அந்த ஆப்பிளைத் தரையிலே போடாம என் தலையிலே போட்டிருந்தா...’ எனச் சொல்ல, கூட்டம்னுகூட பார்க்காம, 'ஆப்பிள் என்னடா ஆப்பிள்? பலாப்பழத்தையே போடுறேன்’னு கொலைவெறியோட துரத்த ஆரம்பிச்சேன்

(டைரி புரட்டுவோம்...)