பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

ம.கா.செந்தில்குமார்

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

``‘கிடாரி’னா ஆணா... பெண்ணா...ஆடா?’னு கேட்கிறாங்க. இதுல எதுவுமே இல்லை. ‘கிடாரி’ என் கேரக்டர் பேர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை `கிடாரி'னா நான்தான்னு அர்த்தம்” - பிடறி முடி கோதிச் சிரிக்கிறார் சசிகுமார். `வெற்றிவேல்' வெளியான மூன்றே மாதங்களில் இதோ `கிடாரி' ரிலீஸுக்கு ரெடி!

“ `தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’. இப்போ, ‘கிடாரி’... இவ்வளவு வேகம் ஏன்?”

“ஓடியே ஆகவேண்டிய கட்டாயம். 61 நாட்களில் ‘கிடாரி’யை முடிச்சுட்டோம். ஆளையே கறுக்கிக் காயப்போடுற வெயில்ல, யூனிட்ல உள்ள அத்தனை பேரும் வியர்வை சொட்டச் சொட்டத்தான் நின்னோம். ஓவர்டைம் வேலைபார்க்கிற தினக்கூலிபோலத்தான் ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமா ஓடினோம். நாம ஒரு கதையை மனசுக்குள்ள உருவாக்குறப்ப, அதைவிட அசத்தலான கதையை ஒருத்தர் தேடிவந்து சொன்னா எப்படி இருக்கும்? பிரசாத் சொன்ன கதையைக் கேட்டதும், எனக்கு நடிக்கிற ஆசையைவிட டைரக்‌ஷன் பண்ற ஆசைதான் வந்தது. அப்படி ஒரு கதை. மண்ணும் மனசுமா நெறைஞ்சு நிற்கிற வாழ்க்கை.

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

ஒருநாள் தர்புகா சிவாவை, பிரசாத் அழைச்சுட்டு வந்தார். ‘ராஜதந்திரம்’ பார்த்திருந்ததால், ‘இவர் இதுல நடிக்கப்போறாரா?’னு கேட்டேன். ‘இல்லை சார், இவர் ஒரு சிடி கொடுக்கணும்னு சொன்னார். அழைச்சுட்டு வந்தேன்’னு சொன்னார். சிவா கொடுத்த சிடி-யில இருந்த முதல் பாட்டைக் கேட்ட உடனேயே ‘இவர்தான் நம்ம படத்துக்கு மியூஸிக்’னு முடிவுபண்ணிட்டேன். முதல் படம்னு சொல்லவே முடியாத அளவுக்கு வெரைட்டியில விளையாடியிருக்கார். புதுசா நிறைய சவுண்ட்ஸ் கொண்டுவந்திருக்கார். தமிழ் சினிமாவில் இவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு!”

“சசி படம்னாலே கேமராமேன் எஸ்.ஆர்.கதிர்தானா?”

“கதிர், என் படத்துல மட்டும் இல்லை... என் கம்பெனியில ஒரு ஆள். என் கஷ்டத்துல தோளோடு தோள் நின்ன துணை. பாதி பாரத்தை, வலியை தன் பக்கம் வாங்கிவெச்சுக்கிறவன். படத்துல  என்னை முன்னிறுத்திட்டு, கேமராவுக்குப் பின்னால எப்படி நிற்கிறானோ, அதே மாதிரி வாழ்க்கையிலும் எனக்குப் பின்னால நிற்கிறவன்!”

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

“ `வெற்றிவேல்’ நாயகி நிகிலா... இந்தப் படத்திலும் ஜோடி. அவ்வளவு பிடிக்குமா?”

“ஏன் பிடிக்கக் கூடாதா? ‘வெற்றிவேல்’ படத்தில் நிகிலாவுக்கு ரொம்பப் பாந்தமான பாத்திரம். ‘கிடாரி’ படத்துல அதுக்கு நேர்மாறு. அன்பும் அடாவடியுமா விளையாடுற ‘செம்பா’ங்கிற பாத்திரம். கோவில்பட்டி மண்ணுலேயே பொறந்து வளர்ந்தவ மாதிரி துறுதுறுனு வாழ்ந்து காட்டியிருக்காங்க. எஸ்.எம்.எஸ்-ல் சந்தோஷம், வருத்தம்னு பலவிதமான தன்மையைச் சொல்ல, ஸ்மைலி பொம்மைகளைப் பயன்படுத்துவோம் இல்லையா... அதுல உள்ள அத்தனை முகபாவங்களையும் நிமிஷத்துக்கு நிமிஷம் கொண்டுவந்து ஆச்சர்யப்படுத்துற ஆள் நிகிலா. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சா, தமிழ் சினிமாவில் நல்ல இடத்துக்கு வருவாங்க.''

“உங்க ஜோடியை நீங்க எப்பவுமே விட்டுக்கொடுக்க மாட்டீங்க. ஜோடி சேராத ஹீரோயின்களில் உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?”

“குறிப்பா ரெண்டு ஹீரோயின்ஸ் பற்றி விகடனில் சொல்லியே ஆகணும். முதல்ல ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’ படத்துல அந்தப் பெண்ணிண் தைரியத்தைப் பார்த்து மிரண்டுட்டேன். ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா, அடித்தட்டு வாழ்க்கை வாழுற பெண்ணா, அழுக்கும் அழுகையுமா கலங்கடிச்சுட்டாங்க. வளர்ந்துவர்ற நேரத்துல எந்த ஹீரோயினும் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. கதை மேல ஒரு ஹீரோயின் எவ்வளவு நம்பிக்கை வைக்கணும்கிறதுக்கு ஐஸ்வர்யா அற்புதமான உதாரணம்.

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

அடுத்து என் தங்கை அபிநயா. தமிழ்ல அவளுக்குச் சரியான வாய்ப்பு இல்லை. போராடிக்கிட்டே இருந்தா. இன்னைக்கு ஹாலிவுட் வரைக்கும் போயிட்டா. காட்டுச் செடி மாதிரி முட்டிமோதி முளைச்சு நிற்கிற அவளின் தன்னம்பிக்கை ரொம்பப் பெரிசு. உடல்ரீதியான ஒரு குறையைத் தடையாகவே நினைக்காமல், அவ ஓடுற வேகம் என்னைக் கைத்தட்ட வைக்குது. இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு தமிழ் சினிமா சரியான களத்தைக் கொடுக்காம புறந்தள்ளியதில் எனக்கு ரொம்ப வருத்தம். அவ இன்னும் பெரிய இடத்துக்கு வரணும்.”

“படத்தில் எழுத்தாளர்கள் கூட்டணியைவேறு இறக்கி விட்டிருக்கீங்களாமே?”

“ஆமா, எழுதிக் காட்டி தமிழ்ப் படைப்புலகை அசரடிச்ச மூன்று பேர் இந்தப் படத்துல வாழ்ந்துகாட்டி அசரடிச்சிருக்காங்க.

மு.ராமசாமி அய்யா, வேல ராமமூர்த்தி, வசுமித்ர மூன்று பேருக்கும் அப்படி நல்ல பாத்திரங்கள்.”

“திடீர்னு அஜித் படத்தில் வில்லனா பண்ணப்போறதா பெரிய டாக். எந்த அளவுக்கு உண்மை?”

“என்னது... நான் அஜித்துக்கு வில்லனா? என்னைக்குமே அவருக்கு நண்பனாத்தான் நான் இருப்பேன். சுயம்பா ஜெயிச்சு நிற்கிற அவரோட உயரம், கைதூக்கிவிட ஆள் இல்லாம போராடுற ஒவ்வொருத்தருக்குமான உத்வேகம். சினிமாவுல மட்டும் இல்லை, தனிப்பட்டவிதத்திலும் இந்த சசிகுமாருக்கு அஜித் குமாரை அவ்வளவு பிடிக்கும்!”

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

‘‘முறுக்கிய மீசையும் கோதிவிட்ட தலையுமா எப்பவும் கிராமத்தானாவே வர்றீங்க. ஏன் செம ரகளையா ஒரு சிட்டி சப்ஜெக்ட் பண்ணுவோம்னு நினைக்க மாட்டீங்களா?’’

``இந்த டிஜிட்டல் யுகத்துல, நாம சிட்டியில உள்ளவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கிறது பெரிய விஷயம் கிடையாது; தொடர்புகொள்ளவே முடியாத கடைக்கோடி கிராமத்து விவசாயியையும் சென்றடையுறதுதான் பெரிய விஷயம். அந்த மக்கள் மனசுக்குள்ள போறதுதான் சவால். அவங்க எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சிருக்கு. ‘சசிகுமாரு, சுந்தரபாண்டி, குட்டிப்புலினு சின்னவங்க முதல் பெரியவங்க வரை உரிமையா கூப்பிட்டுக் கொண்டாடுறாங்க. அதனால அவ்வளவு சீக்கிரம் நான் வேறுபட்டு எதையும் பண்ணிட முடியாது. தவிர, எல்லாரும் சிட்டி கதைகள் பண்ணிட்டிருக்கும்போது, ஃப்ரீயா இருக்கிற இந்த கிரவுண்ட்ல நான் விளையாடுறேன். ஆனா, சீக்கிரமே சிட்டி சப்ஜெக்ட்டும் பண்ணுவேன்!’’

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

“வன்முறை அநியாயத்துக்குப் பெருகிக்கிடக்குற சூழலில் நீங்களும் விடாமல் கத்தியைக் காட்டுறீங்களே... நியாயமா?”

“படத்துல காட்டுற வன்முறையைவிட நிஜத்துல நிறைய நடக்குது. காலையில பேப்பரைப் பிரிக்க முடியலை. சமீபத்தில் ஏழு வயசு சிறுமி சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை போட்டோவோட போடுறாங்க. பேப்பரும் டி.வி-யும் காட்டாத வன்முறையை சினிமா காட்டலை. சினிமாவுக்கு இருக்கும் சென்ஸார் சின்னத்திரைக்கு இல்லை. அதனால நடுங்கவைக்கிற காட்சிகள்கூட நடுவீட்டில் ஒளிபரப்பாகுது.

“ ‘ஸ்மைலி’ நிகிலா... ‘அம்மா’ ஐஸ்வர்யா... ‘தங்கை’ அபிநயா!” - சசி ஃபேவரிட்ஸ்

வன்முறையை குடும்ப சகிதமா பார்க்கிற அளவுக்கு எல்லாரும் பழகிட்ட பிறகும், சினிமாவைக் குற்றம் சொன்னால் எப்படி?

`சுப்ரமணியபுரம்’ தொடங்கி என்னோட எந்தப் படத்திலும் வன்முறை சரியானதுனு நான் வலியுறுத்தியதே இல்லை. வன்முறையைப் பரப்பணும்கிறதுக்காக நான் கத்தி, கம்பைக் காட்டலை. எல்லா தவறுகளுக்கும் சினிமா மேல பழியைப் போட்டு நாம தப்பிக்க நினைக்கக் கூடாது. சுவாதி கொலை, மனசை ரொம்பப் பாதிச்சது. ஒரு பொண்ணு காதலை ஏத்துக்கலைன்னா காதலிக்கிறவன் கொலை பண்றான். காதலுக்குச் சம்மதிச்சா பெத்தவங்க வெட்டிக் கொல்றாங்க. எங்கே சுத்தியும் பாதிக்கப்படுறது ஒரு பெண்தான். பெண் மீதான வன்முறைதான் ஓர் ஆணின் அதிகபட்ச அசிங்கம். நமக்கு எந்தவிதத்திலும் பெண் குறைவானவள் இல்லை. பொறுமையும் சகிப்புத்தன்மையும் சுமக்கிற பொறுப்புமா ஒரு பெண் நம்மைவிட பல மடங்கு உயர்வானவள். ஒரு பெண்ணைக் காயப்படுத்துற, அதை சகஜமா கடந்துபோற எந்தச் சமூகமும் சத்தியமா உருப்படாது!”