பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

``நான் விளம்பரத்தில் நடித்தால் எப்படியிருக்கும் மந்திரி?''

``அடிடாஸ், நைக், பூமா கம்பெனிக்காரர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன் மன்னா!''

- அஜித்

ஜோக்ஸ்

``சட்டசபையில எதுக்குயா கேமரா வைக்கிறாங்க?''

``பெஞ்சைத் தட்டாம யாராவது இருக்காங்களான்னு கண்காணிக்கத்தான்!''

- தி.அசோகன்

ஜோக்ஸ்

``மன்னா, தங்கள் வாட்ஸ்அப்புக்கு என் பாடல்களை அனுப்பியுள்ளேன்.''

``நான் நெட் பேக் போடவில்லை புலவரே!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``தலைவர் ஹைடெக்கா மாறிட்டாரு.''

``எப்படிச் சொல்றே?''

``தப்பு பண்ண கட்சி நிர்வாகிகளை தன்னோட வாட்ஸ்அப் குரூப்ல இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறாரே!''

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ்

``மீம்ஸ் போடுறதை நிறுத்தச் சொல்லுய்யா!''

``அப்படீன்னா, நீங்க மீட்டிங் போடுறதை நிறுத்தணும் தலைவரே!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``படத்துக்கு ஏன் `இண்டிகேட்டர்'னு டைட்டில் வெச்சிருக்கீங்க?''

``ஏகப்பட்ட திருப்பங்கள் நிறைந்த கதை சார்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

``தலைவர் வீட்டுவாசல்ல கூட்டம் கும்முதே ஏன்?''

``அவர் தொடங்கப்போற புது சேனல்ல நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்காங்க.''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``யாரங்கே?''

``கேபிள் டி.வி சந்தா வசூலிக்க வந்தேன் மன்னா!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

 ``மன்னர் காட்டு வழியாக ஏன் ஓடிவர்றார்?’’

``ஊருக்குள்ள ஓடினா, ரொம்ப வைரலாகுதாம்!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``சுயம்வரத்தில் இளவரசர்களுக்கான பிரதான போட்டி என்ன?”

“புதுப்புது ஆப்களைப் பயன்படுத்தி இளவரசியின் போட்டோக்களை அழகழகாகக் காட்ட வேண்டும்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``மன்னா, எதிரி மன்னன் பத்து செகண்ட்ல உங்க கதையை முடிச்சுடுவேன்னு கொக்கரிக்கிறான்!’’

``இந்த வார ஆனந்த விகடனிலா...

அடுத்த வார ஆனந்த விகடனிலா?’’

- விகடபாரதி

ஜோக்ஸ்

``மன்னரைப் புகழ்ந்து பாடினீர்களே... பரிசு கொடுத்தாரா?’’

``இல்லை, சூப்பர் சிங்கருக்குப் போய்ப் பாடி, பரிசைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டார்!’’

- நா.செந்தமிழ் சீனிவாசன்