Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``எங்களைக் குஷிப்படுத்தும் போக்கிமானே...”

“ட்ரெண்டியா இருக்கான்யா நம்மப் பேச்சாளன்!”

வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``மன்னர் வீட்டில் இருக்கும்போதுகூட ஆயுதத்தைக் கையிலேயே வைத்திருக்கிறாரே?''

``யோவ்... அது ஆயுதம் இல்லைய்யா, செல்ஃபி ஸ்டிக்!''

- புதுவண்டி ரவீந்திரன்

ஜோக்ஸ்

``என் அறிக்கையை முழுவதுமாகப் படித்து ஷேர்செய்தால், 1GB நெட் பேக் இலவசம்.''

- பி.பாலாஜிகணேஷ்

ஜோக்ஸ்

``தலைவர் எப்படி எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்குப் போனார்?''

``போக்கிமான் கோ விளையாடிக்கிட்டே போயிட்டார்.''

- எம்.விக்னேஷ்

ஜோக்ஸ்

“எதிரியைத் தோற்கடித்துவிட்டேன்!”

“எத்தனை கிலோமீட்டர் வித்தியாசத்தில் மன்னா?”

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ்

``ஃப்ளெக்ஸைப் பார்த்து தலைவர் ஏன் புன்னகைக்கிறார்?”

“அன்பானவனே, அடங்காதவனே, அசராதவனேனுல ஃப்ளெக்ஸ் வெச்சிருக்காங்க!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

 ``மன்னா, அந்த வீரனை நம்பாதீர்கள்.’’

``ஏன் மந்திரி?’’

``அவர் ஈட்டியில் செல்போனைச் செருகி, பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான்.’’

- அம்பை தேவா

ஜோக்ஸ்

 ``எங்கள் தலைவரைத் தோற்கடித்ததால்தான் அவர் உங்களை கண்ணீர் சிந்தவைக்கிறார்!’’

``எப்பூடி?’’

``மெகா சீரியலுக்கு கதை, வசனம் எழுதித்தான்!’’

- விகடபாரதி

ஜோக்ஸ்

``தலைவர் `பிரிஸ்மா' ஆப்பில் எடுத்த போட்டோவை, அவரது ஆதார் கார்டில் சேர்க்குமாறு...''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

 `` `வந்துட்டேன்... திரும்ப வந்துட்டேன்'கிறதைக் கேட்டாலே ஏன் தலைவர் ஷாக் ஆகுறார்?''

``உள்ளாட்சித் தேர்தல்லயும் கூட்டணினு வந்திடுவாங்களோனுதான்!''

- விகடபாரதி

ஜோக்ஸ்

``மன்னா, போர்முரசு ஒலிக்குதே...’'

``அது காலர் ட்யூன் அமைச்சரே, போர் பயம் போக்க வெச்சிருக்கேன்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ்

``தலைவர் ஏன் செம காண்டாயிருக்கார்?''

``விழாவுக்குப் போன இடத்துல `இயக்கத்தின் சோட்டா மீம்ஸே வருக...'னு ஃப்ளெக்ஸ் வெச்சிருந்தாங்களாம்!''

- அம்பை தேவா