Published:Updated:

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

பா.ஜான்ஸன், பா.விஜயலட்சுமி

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

பா.ஜான்ஸன், பா.விஜயலட்சுமி

Published:Updated:
“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”
“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

``ஐஸ்வர்யா லண்டன்ல ஃபேஷன் ஸ்டைலிங் படிச்சிட்டிருந்தப்போ, அவங்களுக்கு நடிக்கிற ஆர்வம் இருக்குனு எனக்குத் தெரியாது; ஏன்... அவங்களுக்கேகூட தெரியாது. முதல் பட வாய்ப்பு வந்தப்போ `ஓ.கே ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்'னு சொன்னாங்க. உடனே, ஆர்வமா ஒரு ஆக்ட்டிங் கோர்ஸ் படிச்சாங்க. ஆனா, டைம் கம்மியா இருந்ததால, உடனே ஷூட்டிங் போயிட்டாங்க. சினிமானு வரும்போது படம் யாரை ஃபோக்கஸ் பண்ணுதுனு ஒண்ணு இருக்கு. அந்த விதத்தில் அவங்க நடிச்ச முதல் படம் ஐஸ்வர்யாவை சரியா பிரசென்ட் பண்ணலைங்கிறதுல எனக்கு வருத்தம் இருந்தது.

`உங்களுக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுங்க. உங்களுக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன்'னு என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் சொல்லி யிருக்கேன். அந்த விதத்தில் இப்போ ஒரு அப்பாவா மகளுக்கு நான் செய்யவிரும்பிய விஷயம்தான் இந்தப் படம்'' எனப் பொறுப்பான அப்பா அர்ஜுன் பேச, அந்த அன்பை ரசிக்கிறார் ஐஸ்வர்யா. புதுமுகம் சந்தன், ஐஸ்வர்யா நடிப்பில் `காதலின் பொன்வீதியில்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன்.

``இதுவரை நிறைய ஆக்‌ஷன் படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குள் நிறையக் காதல் கதைகள் இருக்கு. நான் காதல் படங்கள்ல நடிச்சா, அது செட் ஆகாதுங்கிற யோசனையில அதை எல்லாம் படமா பண்ணலை. ஒரு அவுட் அண்ட் அவுட் லவ் ஸ்டோரிதான் `காதலின் பொன்வீதியில்'.''

``அப்பா ஒரு லவ் ஸ்டோரி எடுக்கிறார் என்பதுதானே ஸ்பெஷல். அதான் இந்தக் கதைக்கு நான் ஓ.கே சொன்னேன். லவ் ஸ்டோரின்னாலும் படத்துக்குள்ள அப்பாவுக்கு மிகவும் பிடிச்ச நாட்டுப்பற்று விஷயங்களும் இருக்கும்'' என்கிறார் ஐஸ்வர்யா.

``அப்பா அர்ஜுனுக்கும் டைரக்டர் அர்ஜுனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. செட்ல அப்பா செம புரொஃபஷனல். ஆனா, வீட்டுக்கு வந்தா செம கலாட்டாவான ஒரு ஃப்ரெண்ட். எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். அம்மா கிளாசிக்கல் டான்ஸர். அவங்களைப் பார்த்துதான் எனக்கும் டான்ஸ் ஆர்வம் வந்து `கதக்' கத்துக்கிட்டேன்'' என ஐஸ்வர்யா சொல்ல, ``அப்போ அப்பாகிட்ட இருந்து நீங்க எதுவும் கத்துக்கலையா?'' என அர்ஜுன் கேட்க, ``உங்ககிட்ட இருந்துதான் நடிப்பு கத்துக்கிட்டேன்பா'' என அப்பாவைச் செல்லமாகக் தட்டியவர், ``ஆனா, அப்பா மாதிரி என்னால ஆக்‌ஷன் பண்ண முடியாது. அதுல அவர்தான் எப்பவுமே ஆக்‌ஷன் கிங்'' எனச் சிரிக்கிறார் ஐஸ்.

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

``மீண்டும் அர்ஜுனை எப்போது ஸ்கிரீனில் பார்க்கலாம்?''

``அருண்வைத்தியநாதன் இயக்கும் `நிபுணன்' படத்தில் நடிக்கிறேன். என் ஸ்டார்ட்டிங் பீரியட்ல ஒரே நாள்ல ஏழு படங்களுக்கு ஷூட்டிங் போய் நடிச்சிருக்கேன். ஒரு ஷூட் முடிச்சுட்டு வந்ததும் அடுத்த பட ஷூட் போறதுக்கு வண்டி ரெடியா இருக்கும். அது எனக்குப் பிடிச்சு செஞ்சதால கஷ்டமாவே இல்லை. அப்படி எல்லாம் அனுபவம் இருக்கிறதால நடிப்பு + இயக்கம் டூயல் ரோல் எனக்கு சிரமமாவே தெரியலை.''

``இப்பவும் செம ஃபிட்டாக இருக்கீங்களே... ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன?''

``எக்ஸர்சைஸ். அதுக்கு ஒருநாளும் பிரேக் விட்டது இல்லை. முதல் விஷயம் சினிமாவுக்காக நான் இதைப் பண்ணலை. எனக்காகப் பண்றேன். திடீர்னு ஒருநாள் கண்ணாடியில இடுப்புப் பக்கம் லேசா சதை தெரிஞ்சதுனா, பகீர்னு ஆகிடும். மறுபடி அதுக்காக ஓடி, வொர்க்அட் பண்ணி அதைக் குறைச்சாத்தான் நிம்மதியா இருக்கும். நான் என்னை எப்பவுமே வீக்கான ஆளா பார்க்க விரும்ப மாட்டேன்.

`உடம்பை நல்லா வெச்சுக்கிறதை உங்க வாழ்க்கையின் ஒரு பகுதியா ஆக்குங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடலுக்காகச் செலவு செஞ்சா, மீதம் இருக்கும் 23 மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்.'

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

ஸ்வர்யாவைவிட என் இன்னொரு மகள் அஞ்சனா, ஃபிட்னெஸ் விஷயத்துல அப்படியே என்னைப்போல. இப்போ அவங்க நியூயார்க்ல ஃபேஷன் மார்க்கெட்டிங் படிக்கிறாங்க. அவங்கதான் இந்தப் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் சஜஸ்ட் பண்றாங்க. என் போட்டோஷூட், சாங்ஸ்னு எல்லாத்திலும் அவங்க நிறைய உதவி பண்ணுவாங்க.''

``ஒரு சீனியரா, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் எப்படிப் பார்க்கிறீங்க?''

``முன்னாடி எல்லாம் ஒரு மாசத்துக்கு ஒரு படம் பண்ணுவேன். மூணு புரொடியூஸருக்கு பத்துப் பத்து நாட்கள்னு கொடுத்தா முடிஞ்சது. ஆனா, இப்போ அப்படி இல்லை. ஷூட்டிங்கே 70 நாட்களாவது போகணும். ஷூட் போறதுக்கு முன்னாடி ப்ளான் பண்ணிக்கிறதுனு நிறைய விஷயங்கள் செய்யவேண்டியிருக்கு.

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

ஒவ்வொரு காலத்திலும் ஒரு தொழிநுட்பம் மாறிட்டிருக்கு. ஆனா, எமோஷன்ஸ்ல எந்த மாற்றமும் இல்லை. நிறையப் புது இயக்குநர்கள் வந்து, கதை சொல்லும் விதங்கள் எல்லாம் மாத்தியிருக்காங்க. சினிமா பார்க்கும் ஏரியா இப்போ குளோபல் ஆகியிருக்கு. ஒவ்வொரு ரசிகனையும் யோசிச்சு, கதை எழுதவேண்டியிருக்கு. இத்தனை மாற்றம் அடைஞ்சிருக்கும் சினிமாவில், நான் இன்னும் இருப்பதே எனக்கு ஆச்சர்யம்தான். ஒரு பேஷனும் இல்லாம சினிமாவுக்கு வந்தவன் நான். ஆனா, இப்போ சினிமாவுல எனக்கு இது 36-வது வருஷம். இப்போ சினிமா மீது ரொம்பவே பேஷனோடு இருக்கேன்.''

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

``இது மீம்ஸ்களின் காலம். உங்களுடைய `முதல்வன்' படத்தில் இருந்தும், `கிரி' படத்தில் இருந்தும் நிறைய மீம்ஸ்கள் வருகின்றனவே... கவனிக்கிறீர்களா?''

``தினம் தினம் நான் நடிச்ச படங்கள்ல இருந்தே ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருது. படத்துல செம சீரியஸா வர சீனைக்கூட சூப்பர் காமெடியா மாத்திடுறாங்க. எனக்கு ஆக்‌ஷன் எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அதேபோல காமெடியும் ரொம்பப் பிடிக்கும். `ஜெய்ஹிந்த்' படத்தில் கவுண்டமணி வர்ற எல்லா சீனுக்கும் நானே காமெடி எழுதினேன். வடிவேலும் நானும் பண்ணின காமெடி சீன்ல எல்லாம் ரெண்டு பேரும் பேசிப்போம்... `இதை நீ பேசு, நான் ரியாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறேன்'னு. அப்படிப் பண்ணதுதான் அந்த பேக்கரி காமெடி.''

“அப்பாதான் எப்பவும் ஆக்‌ஷன் கிங்!”

``நீங்க ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சினிமாவில் நடிக்க வந்தீங்க. ஆனால், உங்கள் மகளின் இரண்டாவது படத்தில் நீங்களே இயக்கித் தயாரிக்கிறீங்க. அது அவங்களுக்கு `அப்பா இருக்கார். அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார்'னு ஓவர் கான்ஃபிடன்ஸ் கொடுத்திடாதா?''

``சினிமா பின்னணி மட்டுமே ஒருத்தருக்கு எல்லாமும் கொடுத்திடாது. குடும்பத்துல இருக்கிறவங்க முதல்ல உங்களை நம்பணும். அதுதான் முக்கியம். நான் முதல்ல படம் இயக்குறேன்னு சொன்னப்போ, சுற்றி இருக்கிறவங்க எல்லாரும் என்னைத் திட்டினாங்க. `நடிச்சிட்டிருக்க... அது நல்லா போயிட்டிருக்கு. எதுக்கு தேவை இல்லாம டைரக்டர் ஆகணும்னு சொல்ற?'னு கோபப்பட்டாங்க. ஆனா, என் அம்மா `உனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குல.

நீ பண்ணு, நான் சப்போர்ட் பண்றேன்'னு சொல்லி, வீட்டை வித்து எனக்கு பணம் கொடுத்தாங்க. அந்த நம்பிக்கைதான் பலம். அதே நம்பிக்கையைத்தான் என் பொண்ணுங்களுக்கும் நான் கொடுத்திருக்கேன். அதை அவங்க சரியா பயன்படுத்துவாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு'' என்கிற அர்ஜுனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறார் ஐஸ்வர்யா!