Published:Updated:

“உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”
   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

```விக்டர்' ரொம்ப பெரிய ரீச். அதனால அடுத்த ஸ்கிரிப்ட் சரியா அமையணும்னு காத்திருந்தேன். நிறையக் கதைகள் சொன்னாங்க. ஆனா, எதுவுமே என்னைப் பெருசா ஈர்க்கவில்லை. ‘ஈரம்’ அறிவழகன் சார் சொன்ன ‘குற்றம் 23’ ஒன்லைன் ரொம்பப் பிடிச்சிருந்தது. சப்ஜெக்ட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது. உடனே களத்துல இறங்கிட்டேன்” - வில்லன் விக்டராக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அலறவிட்ட அருண் விஜய், ‘குற்றம் 23’ படம் மூலம் போலீஸாக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்.

“ ‘குற்றம் 23’னு டைட்டிலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?”

“இது மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் கதை. தமிழ் சினிமாவுல இது மாதிரி சில படங்கள் வந்திருந்தாலும் நாங்க எடுத்துக்கிட்ட விஷயம் வேற. ராஜேஷ்குமார் சார் நாவலைத் தழுவி அறிவழகன் சார் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கார். க்ரைம் சப்ஜெக்ட் என்பதால், டைட்டில் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு நினைச்சோம். முதல்ல ‘குற்றம்’னு ஒரு டைட்டிலையும், ‘23’னு ஒரு டைட்டிலையும் செலெக்ட் பண்ணி வெச்சிருந்தோம். அப்புறம் ரெண்டையும் சேர்த்து ‘குற்றம் 23’னு வெச்சுட்டோம். 23 என்பது, கதையில வரும் ஒரு சம்பவம். இதுல இன்னொரு சர்ப்ரைஸ் என்னன்னா, இது என்னுடைய 23-வது படம்.”

   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

“படத்துல நீங்க டெரர் போலீஸாமே?”

“யெஸ். எல்லா நடிகர்களுக்குமே போலீஸா நடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது. கெளதம் சாருக்கு எப்படி ஒரு ஸ்டைல் இருக்கோ, அதேபோல அறிவழகன் சாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு. அந்த விதத்துல இந்த காப் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அதேபோல, தம்பி ராமையா அண்ணன், ஹீரோயினா மகிமா, வில்லனா வம்சி நடிச்சிருக்காங்க.”

“ ‘குற்றம் 23’ படம் மூலமாக தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கீங்க. தயாரிப்பாளர் அனுபவம் எப்படியிருக்கு?”

“நிறையப் பேர் `எதுக்கு திடீர்னு தயாரிக்கணும்? இது தேவை இல்லாத ரிஸ்க்'னு சொன்னாங்க. ரொம்ப யோசிச்சுதான் தயாரிக்கலாம்னு முடிவுபண்ணினேன். இங்கே ஒரு தயாரிப்பாளரா நல்ல நல்ல படம் எடுத்துடுவோம். ஆனா, அதை சரியான நேரத்துல ரிலீஸ் செஞ்சு, சக்சஸ் பண்ணணும். அதுதான் பெரிய சவால். நிறைய இளைஞர்கள் சினிமாவுக்கு வர்றாங்க. ரொம்ப டேலன்ட்டடா இருக்காங்க. அவங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு தர முடியலைனாலும், ஏதோ சின்ன அளவுல ஒரு வாய்ப்பு தரணும்னு நினைச்சேன். அதான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கோம். நல்ல படங்கள் பண்ணணும்கிற கனவோட இருக்கோம்.”

   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

“நீங்க சினிமாவுக்கு வந்து 20 வருடம் ஆகிடுச்சு. எல்லா துறைகளிலுமே வெற்றி-தோல்விகள் சகஜம்தான். நீங்க உங்க தோல்விகளை எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

“ஒரு படம் சரியா போகலைன்னா ஆயிரம் காரணங்கள் சொல்வாங்க. `சரியான டைமுக்கு ரிலீஸ் ஆகலை, ஸ்கிரிப்ட் இன்னமும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம், அது... இது'னு எக்கச்சக்க பாயின்ட்டுகளை அடுக்குவாங்க. அப்ப, நான் யார் மேலயும் பழியைத் தூக்கிப் போட மாட்டேன். நான்தான் எங்கேயோ தப்பு பண்ணியிருக்கேன்னு அதை ஏத்துப்பேன்.

   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

‘உழைப்புக்கான பலன் நிச்சயமா கிடைக்கும். எக்காரணத்தைக்கொண்டும் உழைப்பதை நிறுத்திடக் கூடாது’னு அப்பா அடிக்கடி  சொல்வார். தோல்வியை ஏத்துக்கிட்டாத்தான் அடுத்த கட்டத்துக்குப் போகவே முடியும். ஒருமுறை செஞ்ச தவறை அடுத்தமுறை பண்ணக் கூடாது. இந்த வொர்க் பத்தலைபோல... இன்னம் கொஞ்சம் வேணும்னு தொடர் ஓட்டப் பந்தயம்போலதான் ஓடிட்டே இருக்கேன்.

   “உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்!”

மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தா, ஜிம்முக்குப் போய் வொர்க்அவுட் பண்ணுவேன். புதுசா ஏதாவது கத்துப்பேன்; தெரிஞ்சுப்பேன். மறுபடியும் என்னைப் புதுசா செதுக்கிக்கத் திரும்பத் திரும்ப ஏதோ ஒரு விஷயத்தைத் தேடுவேன். அப்படித் தேடும்போதுதான் பாட்டரி சார்ஜ் ஆன மாதிரி இருக்கும். உழைக்கிறதை மட்டும் நான் எப்பவும் நிறுத்தவே மாட்டேன்.”