லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

``தமிழக அரசியலை ரெண்டா பிரிக்கலாம்யா!''

``எப்படி தலைவரே?''

``மீம்ஸுக்கு முன்... மீம்ஸுக்குப் பின்!''

- அம்பை தேவா


ஜோக்ஸ்

``தலைவர்கிட்ட மனு கொடுத்தியே என்ன சொன்னார்?''

`` `10 செகண்ட்ல வாசிக்கிற மாதிரி இருக்குமா?'னு கேட்டார்.''

- அம்பை தேவா


ஜோக்ஸ்

``தலைவரோட வாட்ஸ்அப் குரூப்ல எல்லாரும் ஆர்வமா ஜாயின் பண்றங்களே ஏன்?''

`` `எல்லாருக்கும் அட்மின் பதவி'னு சொல்லியிருக்காரே!''

- அம்பை தேவா


ஜோக்ஸ்

``உன் மாமா நடந்து போகும்போதுகூட ஹெல்மெட் போட்டுக்கிட்டுப் போறாரே!''

``அவர் இப்போ போறது சென்னை விமான நிலையத்துக்கு!''

- வாசுதேவன்


ஜோக்ஸ்

``புலவரே நான் உம்மைப் புகழ்ந்து பாடட்டுமா?''

``ஐயய்யோ, மன்னா என்ன சொல்கிறீர்?!''

``கஜானா காலி... அதான்!''

- யமுனா ரெங்கநாதன்

ஜோக்ஸ்

``நாய் கடிச்ச உடனே ஓடி வரவேண்டியதுதானே?''

``அங்கே 4G கிடைச்சது டாக்டர்!''

- கோ.பகவான்

ஜோக்ஸ்

``எங்க `கிராண்மா' அமெரிக்காவுல இருந்தவங்க!''

`` `ஒரு வில்லேஜ்ல ஒரு போக்கிமான்...'னு அவங்க ஸ்டோரி சொல்றதுல இருந்தே, அது நல்லா தெரியுதே!''

- சொக்கம்பட்டி தேவதாசன்

ஜோக்ஸ்

``இதை இப்படியே விடக் கூடாது!''

``ஆம் மன்னா... குறைந்தது ஒரு மீம்ஸாவது போட்டணுப்ப வேண்டும்!''

- கோ.பகவான்

ஜோக்ஸ்: கோ.பகவான்

ஜோக்ஸ்

``உங்க கல்யாணத்துல கேமராமேனையே வைக்கலையா?’’

``எல்லாரையும் செல்ஃபி எடுத்துட்டு இருந்தாரே அவர்தான் கேமராமேன்!’’

ஜோக்ஸ்

 ``FB, வாட்ஸ்அப், ட்விட்டர் இதில் ஏதாவதில் இருக்கிறாயா?’’

``அப்படி என்றால்?’’

``மன்னா, இளவரசிக்கு ஏற்ற இளவரசர் கிடைத்துவிட்டார்!’’

ஜோக்ஸ்

``ஆபரேஷனுக்கு நேரமாகிடுச்சே, அந்த பேஷன்ட் இன்னும் என்ன பண்றார்?’’

``செல்ஃபி எடுத்து, `ஐ யம் இன் தியேட்டர்’னு ஃபேஸ்புக்ல அப்லோட் பண்றார் டாக்டர்!’’

ஜோக்ஸ்

 ``தலைவர் தன் வீட்டுச் சுவர்ல `நோட்டீஸ் ஒட்டாதீர்’னு எழுதுறதுக்குப் பதிலா வேற ஏதோ எழுதியிருக்காரே!’’

`` `நோட்டீஸ் அனுப்பாதீர்’னு சரியாத்தான் எழுதியிருக்கார்!