Published:Updated:

"அஜித்கூட நடிக்கிறேன்!”

"அஜித்கூட நடிக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"அஜித்கூட நடிக்கிறேன்!”

கார்க்கிபவா, படங்கள்: கே.ராஜசேகரன்

"அஜித்கூட நடிக்கிறேன்!”

கார்க்கிபவா, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
"அஜித்கூட நடிக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"அஜித்கூட நடிக்கிறேன்!”
"அஜித்கூட நடிக்கிறேன்!”

``சினிமாவுக்கு நடிக்க வர்ற எல்லோருக்குமே அஜித் சார்கூட நடிக்கணும்கிறது ஒரு பெரிய கனவா இருக்கும். எனக்கு அந்தக் கனவு பத்து வருஷம் கழிச்சு நனவாகப்போகுது. யெஸ்... அஜித்கூட நடிக்கிறேன்” - செம குஷியாகப் பேசுகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்கள். தமிழில் அஜித் என உற்சாக ஹைஃபை தருகிறார்.

``மாஸ் பட ஹீரோயின் நீங்க. என்ன திடீர்னு `கவலை வேண்டாம்'னு கதை சம்பந்தமான படத்துல நடிக்கிறீங்க?''

`` `கவலை வேண்டாம்' படக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வெளிநாட்டுல படிக்கப்போன திவ்யா, இந்தியாவுக்குத் திரும்பி வர்றா. அவள் ஏன் வர்றாங்கிறதுதான் படத்துல இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம். இது ரொம்ப லவ்லியான காமெடிப் படம். நம்ம எல்லோருக்குமே கனெக்ட் ஆகுற மாதிரி, டைரக்டர் டீகே ஒரு ஸ்பெஷல் கதையை எழுதியிருக்கார்.”

``ஜீவாவுடன் முதல் படம்...”

``ஜீவா ரொம்ப ஸ்பான்டேனியஸா பெர்ஃபார்ம் பண்றார். திறமையான நடிகர். ஒரே வேவ்லெங்த்ல இருக்கிறவங்ககூட நடிக்கிறது எப்பவுமே ஈஸி. பாபி சிம்ஹா, ஆர்.ஜே பாலாஜி, மந்த்ரா, சுனைனானு படத்துல பெரிய டீம். நான் சந்திச்சதுலேயே ஃபன்னியான ஜாலியான ஒரு மனிதர் டைரக்டர் டீகே. அதே சமயம் எல்லா கேரக்டர்களுக்கும் சரியான அளவு எமோஷன்ஸ் வெச்சிருக்கார்.”

``படத்துல நீங்க காமெடி பண்ணியிருக்கீங்களா?”

“ஆமா... காமெடி எனக்குப் பிடிச்ச ஜானர். இதுல ஆர்.ஜே பாலாஜிகூட சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கேன். நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.”

"அஜித்கூட நடிக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `தோ லஃப்சான் கி கஹானி' இந்திப் படத்துல நீங்க நடிச்ச லிப்லாக் காட்சி சர்ச்சையானதே?''

``என்னடா... இன்னும் இந்தக் கேள்வியைக் கேட்கலையேனு நினைச்சேன். (சிரிக்கிறார்). அந்தப் படம் பார்த்தவங்க அதோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுப்பாங்க. அந்தக் கதைப்படி நான் பார்வையற்ற ஒரு பெண். கண் தெரியாத ஒருவர் தன் காதலைத் தொட்டுத்தானே வெளிப்படுத்த முடியும்? அதுக்கு அந்த முத்தம் அவசியம்னு தோணுச்சு. எந்த சென்சேஷனுக் காகவும் அதைப் பண்ணலை.”

 

``சினிமாவில் பத்து வருடங்கள் கம்ப்ளீட் பண்ணிடீங்க... காஜலோட ட்ரீம் ரோல் என்ன?”

``ஆக்‌ஷன் படம் ஒண்ணு பண்ணணும். சீக்கிரமே அந்த ஆசை நிறைவேறும்னு நம்புறேன்.”

"அஜித்கூட நடிக்கிறேன்!”

``பத்து வருஷ கரியர்ல உங்க மனதுக்கு நெருக்கமான ஒரு படம், ஒரு மனிதர்?”

“ஒரே ஒரு படம், ஒரு மனிதர்னு சொல்றது ரொம்பக் கஷ்டம். எஸ்.எஸ்.ராஜமெளலி சார் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். நான் ரொம்ப என்ஜாய் பண்ண படம்... `துப்பாக்கி'.”

``தமிழில் உங்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருந்தும், தமிழுக்கு அடிக்கடி பிரேக் விடுறீங்களே?”

“இதே கம்ப்ளைன்ட்தான் தெலுங்குலயும் சொல்றாங்க. இந்தியில நடிக்கப்போனா ரெண்டு பேரும் சொல்றாங்க. தமிழ், தெலுங்கு, இந்தினு பேலன்ஸாத்தான் படங்கள் பண்றேன். தொடர்ந்து ரெண்டு பெரிய படம் பண்ணாலே எட்டு மாசம் ஆகிடுது. அப்ப பிரேக் விழுந்த மாதிரி ஃபீல் ஆகுது. இந்த வருஷம் தெலுங்குல ரெண்டு படம், இந்தியில ஒரு படம் பண்ணேன். அக்டோபர்ல `கவலை வேண்டாம்' வருது. அடுத்து அஜித் சார் படம். எனக்கு எல்லா மொழிகளும் ஒண்ணுதான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism