என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

சென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க!

இர.ப்ரீத்தி

##~##

ர்வா என்கிற சர்வானந்த். 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் அதிகம் பேசாமலேயே அழாகாக ஸ்கோர் பண்ணிய இளைஞர்.

 ''எல்லாப் பாராட்டுகளும் டைரக்டர் சரவணனுக்குப் போக வேண்டியது. என்னுடைய இத்தனை வருஷ உழைப்புக்குக் கிடைச்ச முதல் வெற்றிதான் 'எங்கேயும் எப்போதும்’. 17 வயசுல பி.காம்., படிப்பைப் பாதியிலயே விட்டுட்டு சினிமா ஆசையில் ஓடி வந்தேன். நிறையத் தோல்விகள். நிறைய சோர்வுகளுக்குப் பின்னாடி இப்போ ஒரு பெரிய ஆறுதல் கிடைச்சிருக்கு!''

''ஆந்திர மண்ணில் பிறந்தாலும், நல்லா தமிழ் பேசுறீங்களே?''

''ஒரு வருஷமா தமிழ்நாட்டில் இருந்துட்டு தமிழ் பேசலைன்னா, சென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்களே! (சிரிக்கிறார்). ஆரம்பத்தில் தமிழ் வசனங்களைப் புரிஞ்சுக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதனாலயே, சரவணன் எனக்கு அதிகமா டயலாக்ஸ் கொடுக்கலை. ஆந்திராவிலேயே இப்போ அடிக்கடி 'அஞ்சு ரூபா இருக்கா?’னு சொல்லிக் கிண்டல் அடிக்கிற அளவுக்குப் பாப்புலர் நான். ரொம்ப

சென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க!

சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பு எதிர்பாராமக் கிடைச்சது.  சென்னைக்கு 'எந்திரன்’ படம் பார்க்க வந்தேன். அப்படியே வாய்ப்புக்காக சரவணனைப் போய்ப் பார்த்தேன். 'ஒரு படம் பண்ணப்போறேன். விமலும் ஜெய்யும் ஹீரோ.  உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தர்றேன்’னு சொல்லி அனுப்பிட்டார். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. திடீர்னு, 'விமலுக்கு கால்ஷீட் பிரச்னை. நீ நடிக்கிறியா?’னு கேட்டார். சந்தோஷமா ஓடி வந்தேன்!''

''உங்க பயோடேட்டா..?''

''பிறந்து வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத் பக்கம். பக்கா பிஸினஸ் ஃபேமிலி. நான் வீட்டுக்குக் கடைக்குட்டி. குடும்பத்தில் யாரும் நிழலுக்குக்கூட சினிமா பக்கம் ஒதுங்கினது இல்லை. எனக்காக எல்லாத்தை யும் பொறுத்துக்கிட்டாங்க. மும்பை போய் சான்ஸுக்குக் கஷ்டப்பட்டப்போ, 'எதுக்கு இவ்வளவு கஷ்டம்... எல்லாத்தையும் விட்டுட்டு வா’னு ஒரு வார்த்தை சொல்லலை. 'எங்கேயும் எப்போதும்’ ரிலீஸ் ஆனதும் அப்பா சென்னைக்கு வந்து படம் பார்த்தார். படம் முடிஞ்சு எல்லோ ரும் எழுந்து நின்னு கை தட்டும்போது,  சந்தோஷத்தில் அழுது என்னைக் கட்டிப் பிடிச்சார். எட்டிப் பிடிக்க வேண்டிய உயரம் நிறைய இருக்கு. ஆனாலும், இந்த மாதிரி தருணத்துக்காக ஆயிரம் முறை தோத்து ஜெயிக்கலாம்!''

''அனன்யா - அஞ்சலி ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்களா?''

''ஹய்யோ... ரெண்டு பேருமே ஃபெர்பெக்ட். ஷார்ப்பா நடிப்பாங்க. அவங்க முன்னாடி அதிகமா டேக் வாங்கக் கூடாதுனு ரொம்பக் கவனமா இருந்தேன். கோயம்பேடு பக்கம் நான், அனன்யா சம்பந்தப்பட்ட ஸீன்ஸ் எடுக்கும்போது, சும்மா ரெண்டு பேரை ஓரமா டான்ஸ் ஆடவிட்டார் சரவணன். ஷூட்டிங்னு மொத்தக் கூட்டமும் அந்தப் பக்கம் வேடிக்கை பார்க்க, இந்தப் பக்கம் எங்க போர்ஷனை அழகா ஷூட் பண்ணினார்.''

''இப்படி 'சாக்லேட் பாய்’ கதாபாத்திரங்கள் பண்ணி செட்டிலாகிடுவீங்களா..?''

சென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க!

''சான்ஸே இல்லை. நிறைய வாய்ப்புகள் வருது. எல்லாமே வித்தியாசமான கதா பாத்திரங்கள்தான். தமிழ்நாட்டில் கதை தான் ஹீரோ. ஹீரோவுக்காக கதைங்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. அதுதான் இங்கே பெரிய வரம். கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பேனர், கதையோட நிச்சயம் வருவேன்.''

''பெண் ரசிகைகள் ஜாஸ்தியா இருப்பாங்களே..?''

''உண்மையைச் சொல்லவா..? எனக்கு ஆந்திராவைவிட சென்னையில்தான் பெண் ரசிகைகள் ஜாஸ்தியா இருக்காங்க. தியேட்டருக்கோ ஷாப்பிங் மாலுக்கோ போனா, 'ஹே... சர்வா’னு அன்பா சுத்திக் கிறாங்க. சந்தோஷமா இருக்கு. உடனே, லவ் பத்திக் கேட்காதீங்க. இப்போதைக்கு நேரமே கிடையாது!''