Published:Updated:

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - சினிமா விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி

ரு பெரிய மருத்துவ சதி பற்றிய ஆதாரத்தை டெலிவரி செய்யும் கூரியர் பாயின் கதை.

தடைசெய்யப்பட்ட `ஸ்டெம்செல்' ஆராய்ச்சிக்காக கருக்கலைப்பு செய்கிறார்கள் சில மருத்துவர்கள். அதைத் தெரிந்துகொண்ட வார்டுபாய் தம்பி ராமையா, ஆதாரங்கள் சிலவற்றை சமூகப் போராளி நாசருக்கு அனுப்புகிறார். டெலிவரி செய்யவேண்டிய பொறுப்பு ஜெய் வசம். ஆதாரங்கள் நாசர் கைக்குக் கிடைக்காமல் இருக்கப் போராடுகிற வில்லன்களை ஜெய் சமாளித்தாரா?

உடல், குரல் என எதுவுமே மாறாத ஜெய், `சொன்ன வேலையைச் சரியா செஞ்சிடுவேன் பாய்' எனப் பொறுப்பாகப் பாடி, ஆடி, ஓடி, தேடி, அடிக்கிறார். பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம் என்பதால், பழைய ஃபார்மில் சந்தானம். முதல் பாதியை, தனி ஆளாகக் கரைசேர்க்கிறார். கவுண்டமணியிடம் அடிவாங்க செந்தில் என்றால், சந்தானத்திடம் கவுன்ட்டர் வாங்குவதற்காகவே வி.டி.வி கணேஷ். இந்த சந்தானத்தை ரசிகர்கள் எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பது, அரங்கம் அதிரும் சிரிப்பில் தெரிகிறது. கொஞ்சம் கவனிங்க ப்ரோ!

விளம்பரங்களில் கலக்கிய யாமி கெளதமை, பாடல்களுக்காகவே சேர்த்திருக்கிறார்கள். வெல்கம் பேபி!

முக்கியமான பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரேம் சாய். சொல்லவருவதைக் குறைந்த ஷாட்களிலேயே சொல்லிவிடும் திறமை... வாவ்! இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பறக் கிறது திரைக்கதை. காரணங்கள் மறந்து, ஆக்‌ஷனையும் சேஸிங்கையும் ரசிக்க முடிந்தால், செம அனுபவம். வில்லன் அஷுதோஷ் ராணாவுக்காகக் குரல்கொடுத்தவருக்கு இந்த பொக்கே போய் சேரக்கடவது!

கதையை ஆரம்பிக்கவே 45 நிமிடங்கள். ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் சுபம் என்றால், எப்படி பாஸ் விஷயம் ரசிகனுக்குள் ஏறும்? வில்லன் நெட்வொர்க் மொத்தத்தையும் ஹிஸ்டரி வாத்தியார்போல வார்த்தைகளிலேயே சொல் வதற்கு சினிமா எதற்கு? அந்தச் ‘சத்து மாத்திரை'தான் ஆதாரம் என்றால், ஜெய் வீட்டிலே ஒன்று இருக்கிறதே! பிறகு ஏன் ஜெய் அதை எடுக்க உயிரைப் பணயம்வைத்து ஓடுகிறார்? லெட்டர் எழுதும் தம்பி ராமையா, நாசருக்கு ஒரு போன் செய்யலாமே என யாராவது டிஸ்கஷனில் சொல்லியிருந் தால், இயக்குநர் வேறு கதையை யோசித்திருப்பார்.

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - சினிமா விமர்சனம்

1:50 மணி நேரமே படம். எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றிகள் பல. டைட்டில் கார்டில் பார்த்த `பாடகர் கார்த்திக்கின் இசை’ என்பது மட்டுமே மனதில் நிற்கிறது.

வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய விஷயத்தை, கூரியரில் அனுப்பியிருக் கிறார்கள்!

- விகடன் விமர்சனக் குழு