Published:Updated:

“அடுத்து தல, தளபதிதான்!”

“அடுத்து தல, தளபதிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்து தல, தளபதிதான்!”

பா.ஜான்ஸன்

“அடுத்து தல, தளபதிதான்!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
“அடுத்து தல, தளபதிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்து தல, தளபதிதான்!”
“அடுத்து தல, தளபதிதான்!”

`` `சென்னை 28 எங்க ஏரியா உள்ளே வராத', `செகண்ட் இன்னிங்ஸ்', `தி ஃபைனல்ஸ்'னு `சென்னை 28' பண்ணும்போதே மூணு பார்ட்டும் ப்ளான் பண்ணோம். அதைத் தொடர்ச்சியா பண்ணியிருந்தா ஹாரி பார்ட்டர் சீரிஸ் மாதிரி பசங்க வளர வளர, கூடவே படமும் வளர்ந்திருக்கும். ஆனா, எல்லாரும் அவங்க அவங்க வேலைகள்ல பிஸியாகிட்டாங்க. நானும் `மாஸ்' முடிச்சுட்டு வேற ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது. பசங்களும் `நாம ஏன் சார் `சென்னை 28 பார்ட்- 2 பண்ணக் கூடாது?'னு கேட்டாங்க. பெரிய ஹீரோக்கள்கூட சேர்ந்து பண்ணிட்டேன். பழையபடி நம்ம பசங்களோடு ஒரு படம்னு யோசிச்சதும் ஜாலியாகிட்டேன். இப்போ படம் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு. இன்னொரு விஷயம் என்னன்னா, படத்தை என்னோட `பிளாக் டிக்கெட்' கம்பெனி மூலமா நானே தயாரிக்கிறேன். முதல் தயாரிப்பே என்னோட முதல் படத்தின் இரண்டாம் பாகம். சூப்பர்ல!'' என ஜாலியும் கேலியுமாகப் பேசுகிறார் வெங்கட் பிரபு.

`` `சென்னை 28 பார்ட் 2'... கதை என்ன?''

``முதல் பார்ட்ல நீங்க பார்த்த கதையோட தொடர்ச்சியாத்தான் இது இருக்கும். அதுல இருந்த ஃப்ரெண்ட்ஷிப், லவ், சின்னச்சின்ன துரோகங்கள், பகைனு எல்லாமே இருக்கும். `அதுல 20 வயசுல இருந்த பசங்க எல்லாரும் இதுல 30 வயசுல இருக்காங்க'னு கதை ஆரம்பிக்கும். சிலருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும், சிலருக்கு ஆகியிருக்காது. நம்ம குரூப்லயே ஒரு நண்பனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னா, மத்த பசங்ககூட அவன் நேரம் செலவழிக்க என்னெல்லாம் பண்ணுவானோ, அந்த எபிசோடு அப்படியே இதுல இருக்கும். சண்டை வந்து பிரியுற ஒரு எமோஷன் பார்ட்டும் இருக்கும். ஆனா, நிச்சயமா கதை வேற, கதைக்களம் வேற. மத்தபடி முதல் பாகத்துல இல்லாத வைபவ், மஹத், ஜெமினிகணேசன் சார் பேரன் அபிநய் எல்லாரையும் புதுசா இணைச்சிருக்கோம். கும்பலா தியேட்டருக்குப் போய் என்ஜாய் பண்ற படமா இது இருக்கும்.''

“அடுத்து தல, தளபதிதான்!”

``எல்லாரையும் ரீயூனியன் செய்றது கஷ்டமா இருந்திருக்குமே?''

``நான் இதைத் தொடங்கலாம்னு முடிவுபண்ணதும் பசங்ககிட்ட எனக்கு மொத்தமா 60 நாட்கள் வேணும்னு சொல்லிட்டேன். அதேபோல அவங்க எல்லாம் வந்து சேர்ந்தாங்க. அவ்வளோ கோஆப்ரேட் பண்ணினாங்க. அப்போ எனக்குத் தோணினது `சென்னை 28' ஷூட்டிங் நாட்கள்தான். அப்போ கையில சுத்தமா காசு கிடையாது; கேரவன் கிடையாது. பசங்க ரோட்லயே சட்டையை மாத்திக் கிட்டாங்க. லேடீஸ் ரொம்பவே சிரமப்பட்டாங்க. ஆனா, இப்போ அவங்களுக்கு இந்த வசதிகளைக் கொடுக்கும் அளவுக்கு நான் ஒரு இடத்துக்கு வந்துட்டேன்கிற நினைப்பே சந்தோஷமா இருக்குது.''

``படத்தோட டீஸர்ல ஆன்லைன் விமர்சகர்களை பயங்கரமா கலாய்ச்சிருக்கீங்களே?''

``கலாய்க்கிறதுனு இல்லை, படத்துல அப்படி ஒரு சீக்குவன்ஸ் இருக்கு. சரி, இதையே டீஸரா பண்ணலாம்கிற ஐடியாதான். சோஷியல் மீடியாவுல இருக்கிற எல்லாருக்குமே இந்த ஆன்லைன் ரெவியூவர்ஸைத் தெரியும். நமக்குப் பிடிக்குதோ, இல்லையோ ஒரு செல்போன் கேமரால ரெவ்யூ பண்ண ஆரம்பிக்கிறாங்க. சில படங்களை மோசமாக் கழுவி ஊத்துறாங்க. அவங்க சொல்றதை வேதவாக்கா எடுத்துக்கிற ஆடியன்ஸும் இருக்காங்க. அவங்க, ஆடியன்ஸை நிறையவே இன்ஃபுளூயன்ஸ் பண்றாங்க. அவங்களை நான் தப்பு சொல்லலை. அது அவங்களுடைய உரிமை. ஆனா, மக்கள் படத்தைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே அதைப் பண்ணிடுறாங்கங்கிறதுதான் பிரச்னையா இருக்கு.''

“அடுத்து தல, தளபதிதான்!”

`` `சென்னை 28 பார்ட் 2' போலவே எல்லாரும் எதிர்பார்க்கிறது `மங்காத்தா பார்ட் 2'. எப்போ?''

``ரசிகர்களைப் போலவே எனக்கும் `மங்காத்தா பார்ட் 2' பண்ணணும்னு ஆசை இருக்கு ப்ரோ. அது `மங்காத்தா 2'-வா, இல்லை டோட்டலா வேற கதையானு தெரியலை.

எனக்கு விஜய் சார்கூட ஒரு படம் பண்ணணும்கிறதும் ரொம்ப நாள் விருப்பம். எனக்கு அவரை வெச்சு ஜாலியா கேஷுவலா ஒரு படம் பண்ணணும்... நடக்கும்.''

“அடுத்து தல, தளபதிதான்!”

``ஆனா, அடுத்து சிம்புவோடு கூட்டணி சேர்ந்திருக்கீங்களே?''

``ஆமாம்... `பில்லா 2018-ல நீங்க நான் யுவன் ரெடியா?'னு ட்விட்டர்ல சிம்புகிட்ட கேட்டேன். உடனே `பொறந்ததில் இருந்தே ரெடி'னு சிம்பு சொன்னார். சிம்பு எனக்கு ரொம்பப் பிடிச்ச நண்பர், சகோதரர் மாதிரி. அவரோடு சேர்ந்து ஒரு படம் பண்ண எனக்கு ஆசை. `பில்லா 2018'னு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. அடுத்த வருஷம் ஆரம்பிப்போம்னு நினைக்கிறேன். தலைப்புகூட மாறலாம். ஆனா, அது எங்களுடைய வெர்ஷன் பில்லாவா இருக்கும்'' சிரிக்கிறார்.

“அடுத்து தல, தளபதிதான்!”

``உங்களின் உதவி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் `கபாலி' படம் பார்த்தீங்களா?''

``மகிழ்ச்சி. ஸ்பெஷலா டிஷர்ட் எல்லாம் ஆர்டர் பண்ணிப் போட்டுக்கிட்டு, படத்துக்குப் போய் செமயாக் கொண்டாடினோம். `கபாலி' எங்க டீமுக்கு செம ஸ்பெஷலான படம். நான் தலைவரோட ஃபேன். அதோட சேர்த்து என்னோட அசிஸ்டன்ட் பா.ரஞ்சித் படம் அது. `கபாலி' பற்றி நிறையப் பேர் நெகட்டிவான விஷயங்கள் சொல்லிட்டிருந்தாங்க. எனக்கு ரஞ்சித்தை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுனு பயமா இருந்துச்சு. `மெட்ராஸ்' மூலமா கவனம் குவிச்சப்போ, எனக்கு சந்தோஷமா இருந்தது. `அதுவே தலைவர் படம் மூலமா அதைவிட பெரிய அடையாளம் தான் அவனுக்குக் கிடைக்கணும். ஏன் இவ்ளோ நெகட்டிவா பேசறாங்க?'னு தோணுச்சு. தலைவரே படத்துல ஒரு நண்டு கதை சொல்லியிருப்பார். அது உண்மையிலேயே நமக்கு நல்லா பொருந்துதுனு நினைக்கிறேன்.''