Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

`` `ஜெனரேஷன் கேப்'னா என்ன அமைச்சரே?!''

``நீங்க `புள்ளி'மானைத் தேடுறீங்க, இளவரசர் போக்கிமானைத் தேடுறாரே... இதுதான் மன்னா!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``உன் கணவர் ஐ.டி ஊழியரா?''

``ஆமாம்... ஏன் கேட்கிற?''

``அந்த ஹோட்டல்ல சப்ளையர் சரி இல்லைங்கிறதை `சர்வர் எரர்'னு கம்ப்ளெயின்ட் பண்றாரே!

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ்

``நகர்வலத்துக்கு மன்னர், ராணியைக் கூட்டிட்டுப் போறாரே ஏன்?''

``மன்னர் மட்டும் போனா செல்ஃபிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்களாமே!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ்

``தலைவர் ஏன் கோபமா இருக்கிறார்?”

“ `எங்களின் வெளிநடப்பே!'னு எவனோ ஃப்ளெக்ஸ் வெச்சிட்டானாம்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ்

``எங்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால்...மாணவராக மட்டுமின்றி, படிக்கும்போதே அதே வகுப்பில் ஆசிரியராகவும் வேலை பார்க்கலாம்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ்

``தலைவருக்கு ஆசையைப் பார்!''

``என்ன சொல்றார்?''

`` `ஊரடங்கு உத்தரவு மாதிரி, மீம்ஸ் அடங்கு உத்தரவு போட முடியுமா?'னு கேட்கிறாரே.''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``ஜட்ஜுக்கு, பெர்ஃப்யூம் போடுற பழக்கம்.''

``அதுக்காக... வக்கீல் அவரை ` `மணம்' கோர்ட்டார் அவர்களே'னு கூப்பிடறதா?''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``கட்சியில் இருந்து ஒவ்வொருத்தரையா இழுக்கிறாங்க தலைவரே!''

 `` `படிப்படியாக் குறைப்போம்'னு சொன்னாங்களே...அது நம்ம கட்சி உறுப்பினர் எண்ணிக்கையைதானா?''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``நம் மன்னர் போர்க்களத்துக்கு வந்துட்டு, ஏன் மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கார்?''

``தப்பி ஓட எங்காவது வழி இருக்கான்னு கூகுள் மேப்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருக்கார்!''

- சு.அருண் பிரகாஷ்

ஜோக்ஸ்

``நீங்க எடுத்துக்கக் கூடாததை வரிசையா சொல்றேன் கவனமா கேளுங்க!''

``செல்ஃபியைத் தவிர வேற எது வேணா சொல்லுங்க டாக்டர்!''

-காமாட்சிபுரம் பிரபுமதி

ஜோக்ஸ்

``மனோபாலா இருந்தால் போரில் ஜெயித்துவிடலாமா... அவரே பார்க்கிறதுக்கு வீக்கான ஆள் மாதிரி இருப்பாரே!''

``சோதிக்காதீர்கள் மன்னா... நான் சொன்னது மனோபலம்!''

- சு.அருண்பிரகாஷ்

ஜோக்ஸ்

“மன்னர் ஏன் ஓடிக்கொண்டே செல்ஃபி எடுத்துப் பயிற்சி பெறுகிறார்?”

“போர்க்களத்தில் அவ்வபோது செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்களாம் நம் ராணியார்!”

  - எஸ்.வெங்கடசுப்ரமணியன்