Published:Updated:

"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”
பிரீமியம் ஸ்டோரி
"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

ம.கா.செந்தில்குமார், படம்: மீ.நிவேதன்

"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

ம.கா.செந்தில்குமார், படம்: மீ.நிவேதன்

Published:Updated:
"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”
பிரீமியம் ஸ்டோரி
"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”
"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

‘‘`இன்னொரு முகமும் நீங்கதான்’னு ட்ரெய்லர்லயே சொல்லீட்டீங்கன்னா, படத்துல எப்படி சஸ்பென்ஸ் இருக்கும்?’னு பலர் கேட்டாங்க. ஆனா, படத்துல இது சஸ்பென்ஸ் கிடையாது. அதைத் தாண்டிய பல ஆச்சர்யங்கள் ‘இருமுகன்’ல இருக்கு’’ - அறிமுகநாயகன்போல மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் சீயான் விக்ரம். முதல்முறையாக இரு வேடங்கள், நயன்தாராவுடன் ரொமான்ஸ்... என ‘இருமுகன்’ படத்துக்கு இப்போதே ஏக எதிர்பார்ப்பு.

‘‘எனக்கு டபுள் ஆக்‌ஷன் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. நான் ‘வி.ஐ.பி’-யில் அப்பாஸுக்கு டப்பிங் பேசின காலத்திலேயே `பண்ணினா, இப்படி அப்பாஸ், பிரபுதேவா கேரக்டர் மாதிரி டபுள் ஆக்‌ஷன் பண்ணணும்'னு ஆசைப்பட்டேன். நிறையப் பேர் டபுள் ஆக்‌ஷன் சப்ஜெக்ட்டோடு வந்தாங்க. ஆனா, நான் நினைச்சது மாதிரி இல்லை. ‘இருமுகன்’ படத்துலதான் அப்படி அமைஞ்சிருக்கு. இதுல அந்த இரண்டு கேரக்டர்கள், ட்வின்ஸ் கிடையாது; அப்பா-மகன் கிடையாது; அண்ணன்-தம்பி கிடையாது. ரெண்டு பேரும் வேற யார் யாரோ. அதுதான் இதுல எனக்கான சவால். நான் ஏற்கெனவே ‘அந்நியன்’, ‘ஐ’ படங்கள்ல நிறைய கேரக்டர்கள் பண்ணியிருந்தாலும், அவை எல்லாமே ஒரே ஆள்தான். அதனால, அவர்கள் ஒரே ஃப்ரேமில் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்துல ஒரே ஃப்ரேமில் இரு வேறு ஆளாக இருப்பது பெரிய சவால். படத்துல வர்ற ‘லவ்’ங்கிற அந்த நெகட்டிவ் கேரக்டர் ஃப்ரேம்ல வந்து நின்னாலே அப்படி ஈர்க்கும்.’’

‘‘பெண் தன்மையுடன் வர்ற அந்த நெகட்டிவ் கேரக்டர் `லவ்’ ஆணா அல்லது திருங்கையா?’’

‘‘ அது ஒரு ஸ்டைல். அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் வேற மாதிரி இருக்கும். அவனுக்கு எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கணும். அழகுன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த கேரக்டருக்கு என ஒரு மேனரிசம் இருக்கும். அவன் தன்னை வெளிப்படுத்திக்கிறது அப்படி இருக்கும். மற்றதை நீங்க படத்துல பாருங்க.’’

``நயன்தாராவுடன் முதல் படம். ஏன் இவ்ளோ லேட்?''

‘‘நயன்தாரா, சீனியர் ஹீரோயின். காசுக்காக கமிட் ஆனோம், வந்தோம், போனோம்னு ஏனோதானோனு இருக்கிறது அவங்களுக்குப் பிடிக்காது. கதையில், கேரக்டரில், படத்தில் அவ்வளவு ஆர்வமா பங்கு எடுத்துப்பாங்க. அதுல என்ன எல்லாம் பண்ண முடியும், எது ஸ்கேல்னு ரொம்பக் கவனமா இருக்கிற ஆக்ட்ரஸ். இருக்கிற ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் உயிர் கொடுக்கிறவங்க. ஏன் இவ்ளோ லேட்னு எனக்கும் தெரியலை. ஆனா, இதுல எங்க காம்பினேஷன். எல்லாருக்கும் பிடிக்கும்.''

``ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்கள்... எப்படித் தேர்வு செய்றீங்க?''

‘‘நான் ஸ்கூல்ல இருந்தே அப்படித்தான். ஸ்கூல் நாடகம்னாலே நான்தான் ஹீரோ. அப்ப ஜூலியஸ் சீஸர் பண்ணச் சொல்வாங்க. ‘அது போரிங். நான் புரூட்டஸ் பண்றேன்’ என்பேன். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டரையும் அப்ப தேடுவேன். வித்தியாசமான கேரக்டரா இருக்கணும். ஆனா, அதுல நான் இருக்கக் கூடாதுனு தேடுவேன். எனக்கு எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே அந்த எண்ணம் இருந்திருக்கு.

‘சேது’ படம் மூலம் ஓர் அங்கீகாரம் கிடைச்சப் பிறகு பணம் இரண்டாம்பட்சமாகிடுச்சு. பி.சி.சார், ‘தன்னைக் கொடுமைப்படுத்திக்கொள்வது விக்ரமுக்கு ரொம்பப் பிடிக்கும்’ (அவர் வாய்ஸிலேயே பேசுகிறார்) என்பார். இப்ப நினைச்சுப்பார்த்தா, `நானே நினைச்சாலும் இப்ப திரும்பவும் ‘ஐ’ பண்ண முடியாது’னு தோணுது. அதனால அப்படியான கேரக்டர் வரும்போது பிடிச்சுக்கணும்.’’

‘‘ `பி.சி’னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது.  ‘ஐ’ படத்துக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்கலைனு வருத்தப்பட்டாரே?’’

‘‘பி.சி சார்தான் என் குரு. இதை அவர் கேட்டார்னா, ‘அவன் யாருடா குரு?’ம்பார். ‘மீரா’ படம் பண்றதுக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல சிக்கி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். இனிமேல் நடிக்க முடியாதுனு நினைச்சு, அசிஸ்டன்ட் கேமராமேனா ஜாயின் பண்ணலாம்னு பி.சி சார்கிட்ட போய் நின்னேன். ‘நிறையப் பேர் இருக்காங்க’னு திருப்பி அனுப்பிட்டார். அப்படி குருவா பார்த்த மனிதரே ‘மீரா’வுல என்னை இயக்கினார். அவர்கிட்ட திரும்ப வொர்க் பண்ணணும்கிறதுதான் அப்ப என் கனவு. ‘ஐ’யில அது நடந்தது. என்ன ஒரு அழகுன்னா இப்பவும் என்னை அதே மாதிரியேதான் ட்ரீட் பண்றார். ‘ஏய் ஷட் அப்’னு திட்டுவார். இப்ப சமீபத்தில் ‘உங்களைப் பாக்கணும்னு தோணுது சார்’னேன். ‘சிவகார்த்தியேன் ஷூட்டிங்ல இருக்கேன். வா’னு சொன்னார். போனேன். ‘உட்கார்’னு சொல்லிட்டு லைட்டிங் பண்ணிட்டிருந்தார். அடுத்த ஐந்து நிமிஷத்தில் ‘ஏய்... நீ கிளம்பு. என்னால என் வேலையில கவனம் செலுத்த முடியலை. உனக்கு உட்கார சேர் இருக்கா, குடிக்க எதுவும் தேவையா?’ங்கிற யோசனையே ஓடிட்டிருக்கு’னு சொன்னார். யெஸ் மனிதர் அப்படியேதான் இருக்கார். என்னளவில் இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் என் குரு பி.சி சார்தான்.’’

"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

‘‘நீங்கள் நடித்த கேரக்டருக்கான மிகச் சிறந்த பாராட்டுன்னா எதைச் சொல்வீங்க?’’

‘‘நிறையப் பேர் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்காங்க. ஆனா, அந்த நடிகர் சொன்னது எனக்கு பெரிய ஷாக். அவர் எனக்குப் பிடித்த நல்ல நடிகர். ஃப்ரெண்டா, அண்ணனா நினைச்சு சொன்னார். அதனால் அவர் யார்னு சொல்ல மாட்டேன். ரொம்ப ஸ்வீட்டா சொன்னார். நான் அப்ப துபாய்ல இருந்தேன். ‘இப்பதான் படம் பார்த்தேன். இந்த ஆளுகிட்ட, ‘நீங்க இந்த சீனுக்காகக் கொஞ்சம் செத்துடுறீங்களா?’னு சொன்னா, `டப்பிங் முடிச்சுட்டுப் பண்ணலாமா?’னு கேட்பீங்களோனு... ‘ஐ’ பார்த்ததும் தோணுச்சு’னு சொன்னார். அதைக் கேட்டுட்டு ஐ வாஸ் ஷாக்டு. சினிமாவை அவ்வளவு நேசிக்கிற எனக்கு இதைவிட பெரிய விருதை யாராலும் தந்திட முடியாதுனு நினைக்கிறேன்.’’

‘‘இயக்குநர் பாலாவும் நீங்களும் சேர்ந்த ‘சேது’, ‘பிதாமகன்’ இரண்டும் செம க்ளாஸ் படங்கள். திரும்பவும் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கா?’’

‘‘நாங்க அடிக்கடி பேசிட்டே இருப்போம். அப்ப படம் பண்றது பத்தியும் பேசுவோம். `சேது', `பிதாமகன்' படங்களைவிட பெருசா அமையும்போது நிச்சயம் பண்ணுவோம். ‘சேது’ படத்துல டாக்டரா வர்றவர் ஒரு ரெஸ்டாரன்ட் வெச்சிருக்கார். அந்தப் படத்துக்குப் பிறகு, நானும் பாலாவும் ஒருமுறை அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுட்டிருந்தோம். ‘இதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன பண்ணுவீங்க... இவருக்கு என்ன ரோல் கொடுப்பீங்க?’னு அவர் பாலாகிட்ட கேட்டார். அதுக்கு பாலா போறபோக்கில், ‘மிருகமாக்கிட வேண்டியதுதான்’னு சொன்னார். கடைசியில் ‘பிதாமகன்’ படத்துல என்னை மிருகமாத்தான் நடிக்கவெச்சார். இப்ப அதுக்கும்மேல ஏதாவது ஒண்ணு பண்ணணும். அவர் படம்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசுறதுதான் எனக்கான ஹோம்வொர்க். அப்படிப் பேசிப் பேசித்தான் `சேது', `பிதாமகன்' படங்கள் பண்ணினோம். அந்த மாதிரி ஸ்பெஷலான கதை இருந்துச்சுனா உடனே ஆரம்பிச்சுடுவோம்.’’

‘‘என்ன திடீர்னு `சாமி-பார்ட் 2' எடுக்கப்போறோம்னு அறிவிச்சிருக்கீங்க?''

‘‘இது திடீர் முடிவு இல்லை. `சாமி-2' பண்றது பற்றி அஞ்சு வருஷமா பேசிட்டிருக்கோம். ‘நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’னு ஹரி சார் வேறு ஒரு கதை சொன்னார். நான்தான் ‘சாமி-2 பண்ணுவோம்னு சொன்னேன். ஹரி தெளிவான திட்டமிடலோடு வாழுற மனிதர். குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே ஸ்கூல் ஸீட் வாங்கினவர். இப்ப காலேஜ் ஸீட்டே வாங்கியிருப் பார்னு நினைக்கிறேன். அப்படி அவருக்கு எல்லாமே ப்ளானிங்தான். சாமி 2 -க்கு அப்படி ஒரு பிரமாதமான லைன் பிடிச்சிருக்கார். எப்பவுமே நாம எதிர்பாராதது ஒண்ணு இருந்தாத்தானே அந்த சீக்வெல் வொர்க்அவுட் ஆகும். அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி ‘சாமி-2’ல இருக்கும். ஆமாம் இது நிச்சயம் வேற மாதிரியான படம்.’’

‘‘உங்க வீட்டு ஹீரோயின் என்ன சொல்றாங்க?’’

‘‘மேடம் சைக்காலஜிஸ்ட். அதிகம் பேச மாட்டாங்க. என் படங்களை ரொம்ப ரசிப்பாங்க. இப்பகூட `இருமுகன்' பட ட்ரெய்லரை அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டியிருப்பாங்கனு எனக்குத் தெரியும். ஆனா, ‘பிடிச்சிருந்துச்சா?’னு கேட்டா. ‘என்ன இப்ப, தியேட்டருக்கு வரட்டும் பார்க்கலாம்’னு சொல்வாங்க. எங்களுக்குள்ள எப்பவுமே அப்படித்தான். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தா சொல்ல மாட்டேன். ஒரு விஷயம் ரொம்பப் பிடிச்சிருந்தா சொல்லவே மாட்டேன். ஏன்னா, எப்பவுமே அவங்களை அப்பப்ப ஆச்சர்யப்படுத்திப் பார்க்கணும்னு ஆசைப் படுவேன்.’’

"அடுத்து ஹரி படம்... சீக்கிரமே பாலா படம்!”

‘‘உங்க படங்களைப் பற்றி பொண்ணு, பையன் என்ன சொல்றாங்க?’’

‘‘பையனுக்கு சினிமா இன்ட்ரஸ்ட் இருக்கிறதால அவன்கிட்ட சொல்வேன். அவ்வளவு ஏன், இதுல வர்ற அந்த நெகட்டிவ் லவ் கேரக்டரின் குணாதிசயங்கள்கூட அவன்கிட்ட பேசிப் பிடிச்சதுதான். அவன் சொன்னதைத்தான் பண்ணியிருக்கேன். அவர் இப்பதான் லண்டன் போய் ஆறு மாத சினிமா மேக்கிங் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தார். அடுத்து ரெண்டு வருட ஃபிலிம் மேக்கிங் கோர்ஸுக்காக அமெரிக்கா போறார். நல்லா பாடுவார், ஷாட்ஸ் எடுப்பார், போட்டோகிராஃபினு எல்லாமே பண்ணுவார். ‘உனக்கு எது பிடிக்குமோ அதைப் பண்ணு. ஹீரோவோட பையன்கிறதால நீ நடிகனாகத்தான் ஆகணும்னு அவசியம் இல்லை’னு சொல்லியிருக்கேன்.’’

‘‘மகளுக்கு விரைவில் திருமணம். எப்படி ஃபீல் பண்றீங்க?’’

‘‘ஒரு தகப்பனா ரொம்ப சந்தோஷமா நிறைவா இருக்கேன்.’’