Published:Updated:

'வானத்தை போல' சட்டை, கல் உப்பு தண்டனை! - 80ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜி பிளாஷ்பேக்!

'வானத்தை போல' சட்டை, கல் உப்பு தண்டனை! - 80ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜி பிளாஷ்பேக்!

வெளிநாட்டுல வேலை பார்க்குற பசங்களைப் பார்த்து தேவையில்லாம பொறாமைப்பட்டோம். அவங்க போட்டுக்கிட்டு வர்ற செண்ட், புது கூலர்ஸ், கண்ணைப் பறிக்குற காஸ்ட்யூம் பார்த்து, 'ஆத்தீ! ஃபாரின் போகுறதுக்குலாம் யோகம் வேணும்!'னு தப்பாக நினைத்து ஏங்கிக் கிடந்தோம். 

Published:Updated:

'வானத்தை போல' சட்டை, கல் உப்பு தண்டனை! - 80ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜி பிளாஷ்பேக்!

வெளிநாட்டுல வேலை பார்க்குற பசங்களைப் பார்த்து தேவையில்லாம பொறாமைப்பட்டோம். அவங்க போட்டுக்கிட்டு வர்ற செண்ட், புது கூலர்ஸ், கண்ணைப் பறிக்குற காஸ்ட்யூம் பார்த்து, 'ஆத்தீ! ஃபாரின் போகுறதுக்குலாம் யோகம் வேணும்!'னு தப்பாக நினைத்து ஏங்கிக் கிடந்தோம். 

'வானத்தை போல' சட்டை, கல் உப்பு தண்டனை! - 80ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜி பிளாஷ்பேக்!

80 கள்ல பிறந்த 80ஸ் கிட்ஸ்,  `ஆனா ஊனான்னா அந்தக் காலம் போல வருமா ?' என்று சொல்லி வெறுப்பேத்துறதையே வழக்கமா வெச்சிருக்காங்க. உண்மையிலேயே அந்தக் காலமும் கொடுமைதான்னு 80ஸ் கிட்ஸ்கள்ல ஒருத்தனான நான் சொன்னாத்தானே சரியா இருக்கும். வாங்க சொல்றேன்...

* அப்பல்லாம் வீட்டுல டாய்லெட் கட்டியிருக்குறதே ஆடம்பரம்னு நினைச்சிருந்த காலம். எல்லாத்துக்கும் ஓரஞ்சாரமா `ஒதுங்க வேண்டியிருக்கும்'. வாடகை வீடுகள் பூராவும் `லைன் லைனா' ஜன்னல் இல்லாம கன்னத்தோடு கன்னம் வெச்சு தைச்சது கணக்கா பத்து வீடும் ஒண்ணா இருக்கும். பத்து வீட்டுக்கும் சேர்த்து பதினொண்ணாவதா ஒரு பொதுக்கழிப்பறையும் இருக்கும்.  அதுல போறதும் ஜெயிலுக்குள்ள போறதும் ஒண்ணுதான். அவசர ஆத்திரத்துக்கு கம்மாய்க்கரைக்கு ஓடுனதை நினைச்சாலே இப்பவும் சிரிப்பா இருக்கு. 

* காலைல எந்திரிச்சதும் பால் வாங்கிட்டுவர அம்மா 'லோட்டா'வால மண்டையில தட்டி விரட்டு விடுவாங்க. 6 மணிக்குள்ள போயி வரிசையில நின்னா அந்தப் பால்பண்ணை பரமசிவம் மாட்டோட மடியைப் பிடிச்சு பீய்ச்சி அதை அளந்து  தர்றதுக்குள்ள சூரியன் நடுமண்டைல சுள்ளுனு போட்டுத் தாக்க ஆரம்பிச்சிருக்கும். `அரை லிட்டர் பால் வாங்க அரைநாளாடா?' என்ற வசவும் கிடைச்சிருக்கும். 

* இப்பல்லாம் வீட்டு வாசல்லயே ஸ்கூல் போற பசங்களுக்கு சாதா ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன், பஸ்ஸுனு எல்லாமே வந்துருது. ஆனா, அப்பல்லாம் அப்படி இல்லை. தலையில பைக்கூட்டை மாட்டிக்கிட்டு கிட்டத்தட்ட 3 கி.மீ நடந்தே ஸ்கூலுக்குப் போவோம். ஸ்கூல் போய் சேர்றதுக்குள்ள நாக்கு தள்ளிடும்!

* இப்பல்லாம் ஸ்கூல்ல வாத்தியார் அடிக்கிறதுலாம் வன்கொடுமை லிஸ்ட்ல கொண்டு வந்துட்டாங்க. பெரும்பாலும் யாரும் அடிக்கிறது இல்லை. ஆனா, அப்ப அப்படி இல்லை. தினுசு தினுசா அடி பின்னி எடுக்குற வாத்தியார்கள் இருந்தாங்க. தலை முடியைப்பிடிச்சு மாவாட்டுவாரு ஒருத்தர், பிட்டத்துல தடம் பதியிற அளவுக்கு பிரம்பால வெளுப்பாரு ஒருத்தர், வரிசையா நிப்பாட்டி முட்டிக்கீழே பியானோ கிபோர்டு வாசிக்கிற மாதிரி டான்ஸ் ஆடுவார் ஒருத்தர்,  `கண்ணையும் காதையும் விட்டுட்டு எங்கே வேணும்னாலும் அடிங்க'னு அப்பா சொன்னதுக்காகவே அது ரெண்டையும் விட்டுட்டு பிரிச்சு எடுக்குற வாத்தியார், கல் உப்பை வாங்கிட்டு வரச்சொல்லி அதுல முட்டி போடச் சொல்லுற வாத்தி என நம்மளை வெச்சு செய்வாங்க. என்னா அடி!

* ஸ்கூல் விட்டு வந்ததும் இப்பல்லாம் போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், சுட்டி டி.வினு பல பொழுதுபோக்கு சேனல்கள் இருக்கு. ஆனா, அப்பல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்துச்சு. அதுவும் சாயங்காலம் 6 மணிக்கு மேலதான் மண்டல ஒளிபரப்பே ஆரம்பிப்பாங்க. அதுவரைக்கும் டி.வியில 'ஏக் காவுன் மே... ஏக் கிஸான் ரக தாத்தா' தான்! போரடிக்குதேனு இந்தி நாடகம்லாம் பார்த்த கொடூர நாள்கள் அவை. பொறாமை பிடிச்ச பயலுங்க வீட்டு ஆன்டனாவை திருகி வெச்சு படம் தெரியாம பண்ணி பழி வாங்குன நாள்கள் அவை.

* பாதி பேர் வீட்டுல ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி தான். எம்.ஜி.ஆரின் பழைய படம்போல ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் படத்தையும் அப்பல்லாம் கறுப்பு வெள்ளையிலதான் பார்த்தோம். இன்னிக்கு போரடிச்சா சேனல் மாத்த ரிமோட் இருக்கு. அப்பலாம் எந்திருச்சு போய் டி.வி ட்யூனரை திருப்பினாலே திரையில புள்ளி அடிக்க ஆரம்பிச்சிடும். அல்லது கையோட வந்துடும். அப்பா வேற டி.விக்கு  அஞ்சறைப்பெட்டி மாதிரி கவர்லாம் செஞ்சு பூட்டுப் போட்டு வெச்சிருப்பார். 'ஒளியும் ஒலியும்', 'ஞாயிற்றுக்கிழமை' படம்  இவை ரெண்டும் இல்லாட்டினா செத்திருப்போம். எதைப் பார்க்குறதுனு தெரியாம வயலும் வாழ்வும்லாம் பார்த்திருக்கோம்.  அவ்வ்வ்.

* கிரைண்டர் என்ற வஸ்துவே ஏரியாவுக்கு ஒரு வீட்டுலதான் இருக்கும். `டேய்! போயி மாவாட்டிட்டு வாடா!'னு அம்மா துரத்தி விட்ருவாங்க. 5 ரூபாயை கொடுத்துட்டு கியூல நின்னு மாவை ஆட்டிட்டு 2 மணிநேரம் கால் கடுக்க நின்னு வாங்கிட்டு வருவோம். 

* வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்கள்லாம் பிடிக்காத ஐட்டமா வாங்கிட்டு வருவாங்க. `ஒழுங்கா படிக்கிறாங்களா பிள்ளைங்க..? வாய்ப்பாடு சொல்வானா?' என்றெல்லாம்  பெத்தவங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாங்க. `எத்தனாவது ரேங்க்' ? எனக் கேட்டு உயிரை எடுத்ததெல்லாம் நாங்க சந்திச்ச  ஆகப்பெரும் வன்முறை ப்ரோ!

* இப்பல்லாம் மனசுக்குப் பிடிச்ச மாதிரி அழகழகான டிஸைனர் ரெடிமேட் ஆடைகள் கடைகள்ல வந்துருச்சு. அந்தக்காலத்துல எல்லாம் டெய்லர் கடைங்கதான். மீட்டர் கணக்கில ஒரே துணியை எடுத்து டெய்லர் கிட்ட அளவு கொடுத்து தைச்சுப் போட்டுட்டு  திரிஞ்சோம். அப்பாவும் பிள்ளைங்களும்கூட ஒரே துணியில டிரெஸ் போட்ட கொடுமையான காலம் அது. டெய்லர்களும் இஷ்டம் போல லூஸ் விட்டு தைச்சு 'வானத்தைப்போல' அண்ணன் விஜயகாந்த் போல எங்களை மாத்தி வெச்சாங்க. 

* ஒரு பொண்ணு சிரிச்சதுனு கிட்டத்தட்ட மூணு வருஷமா ஃபாலோ பண்ணி காலத்தை வீணாக்கினோம். கடைசிவரை காதலைச் சொல்லாம அந்தப்பொண்ணு அதுக்குப் பிறக்கப்போற பாப்பாவுக்கு ஸ்வெட்டர் பின்னிக்கிட்டு இருக்கும்போது சொல்லி அதை அலறவிட்ருப்போம். சைட் அடிச்சாலே பொண்ணோட அண்ணன் தம்பிங்க நம்ம கைய வெட்டுற அளவுக்கு கொடூரமா திரிஞ்சானுங்க. இப்பல்லாம் காபி ஷாப்ல காபியைக் குடிச்சுக்கிட்டே லவ்வைச் சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா, அன்னிக்கு க்ரீட்டிங் கார்டு, லவ் லெட்டர் கொடுக்குறதுனு பல சாகசங்கள் பண்ணி அடி வாங்கியிருக்கோம். `லவ் யூ'வுக்கே  முதுகுல டின்னு கட்டிவிட்ட அனுபவம்லாம் கண்ணு முன்னாடி இப்பவும் வந்து போகுது. அது ஒரு துன்பியல் காலம்!

* எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ்-டூ தேர்வு முடிவுகளைத் தெரிஞ்சுக்க தினத்தந்தி ஆபிஸ் முன்னாடி தண்ணி குடிச்சோம். வெளியூர்க்கு தகவல் சொல்ல தந்தி அடிச்சு பலபேரை அனாவசியமா பதற வெச்சோம். டெலிபோன் பேசுறதுக்காக போஸ்ட் ஆபிஸ் போய் ட்ரங்க் கால்க்காக வெயிட் பண்ணி கண்ணு பூத்துக் கிடந்தோம். 

* வெளிநாட்டுல வேலை பார்க்குற பசங்களைப் பார்த்து தேவையில்லாம பொறாமைப்பட்டோம். அவங்க போட்டுக்கிட்டு வர்ற சென்ட், புது கூலர்ஸ், கண்ணைப் பறிக்குற காஸ்ட்யூம் பார்த்து, 'ஆத்தீ! ஃபாரின் போகுறதுக்குலாம் யோகம் வேணும்!'னு தப்பாக நினைத்து ஏங்கிக் கிடந்தோம். 

* இப்ப மாதிரி விமர்சனங்கள் பார்த்துட்டு அப்ப படம் பார்க்க முடியாது. தியேட்டருக்கு தெருவே கிளம்பிப்போய் மொக்கைப் படத்தை பார்த்துட்டு திரும்பி வருவோம். ஆன்லைன் டிக்கெட் இல்லாத அந்தக் காலத்துல எல்லாருடைய ஷோல்டர்ல ஏறிப்போய் கௌண்டர்ல கைய நீட்டி டிக்கெட் வாங்குவோம் 80ஸ் கிட்ஸ்!