Published:Updated:

‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’

 ‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’
பிரீமியம் ஸ்டோரி
‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’

ம.கா.செந்தில்குமார், படம்: வினோத்.டிகே

‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’

ம.கா.செந்தில்குமார், படம்: வினோத்.டிகே

Published:Updated:
 ‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’
பிரீமியம் ஸ்டோரி
‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’
 ‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’

‘``நல்ல பேர் சேர்த்துவைக்கணும்'னு சொல்வாங்களே... அதுபோல நான் நிறையப் பேர்களைச் சேர்த்து வெச்சிருக்கேன். வீட்ல என்னை `சுரேஷ்'னு கூப்பிடுவாங்க. ரெக்கார்ட்ல சோமசுந்தரம். சினிமாவுக்கு, குரு சோமசுந்தரம்.

`ஒருத்தனுக்கு எதுக்கு இத்தனை பேர்?'னு இப்போ தோணுது. இது பரவாயில்லை, `ஒருத்தனுக்கு எதுக்கு பேர்?'னு ஒருநாள் தோணுச்சு. அப்போதான், நான் வீட்டைவிட்டு கொல்கத்தாவுக்கு ஓடிப்போனேன். அன்னியோடு `சுரேஷ்'ங்கிற பேர் என்னைவிட்டுப் போயிடுச்சு.

கொல்கத்தா மேல எனக்குப் பெரிய ஈர்ப்பு இருந்தது. எல்லா இடத்துலயும் பழைமை நிறைஞ்சு இருக்கிற ரொம்ப ஆர்ட்டிஸ்டிக் ஊர். தாகூரோட ஊர்... சத்யஜித் ரேவோட மண். இப்படி நிறையக் காரணங்கள். அதனால வீட்டைவிட்டு ஓடிப்போகணும்னு முடிவுபண்ணதும், நான் மார்க் பண்ணது கொல்கத்தா. சொற்பப் பணத்தோட ஓடிப்போயிட்டேன். எல்லாம் செலவான பிறகு, மிச்சமான 500 ரூபாயை ஒரு பாலித்தீன் கவர்ல சுருட்டி அர்ணாக்கயித்துல கட்டிக்கிட்டு, தெருத் தெருவாத் திரிஞ்சேன். அங்கங்க யாசக உணவு, கிடைச்ச இடத்துல தூக்கம்னு நாலு நாள் போனது. `இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கிறதுக்கு காசு எதுக்குடா?'னு தோணுச்சு. உடனே முடிஞ்சுவெச்சிருந்த ரூபாயை ராமகிருஷ்ணப் பரமஹம்சரோட பிரார்த்தனை உண்டியல்ல போட்டுட்டேன். அன்னிக்கு ராத்திரி ஒரு மடத்துத் திண்ணையில தூங்கிட்டு இருந்தப்போ, நடுராத்திரி ஒரு சாமியார் வந்து என்னை எழுப்பி சம்பந்தமே  இல்லாம, ‘ஹரித்துவார் போறேன். வர்றியா?’னார். ‘வர்றேன் சாமி’னு உடனே கிளம்பிட்டேன். நேபாளம் பக்கமாப் போயி, சாமியாராகிடலாம்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். என்னவோ ஒரு நினைப்பு. மறுநாளே பாதி வழியில அந்தச் சாமியார்கிட்ட இருந்து பிச்சுக்கிட்டு ஊருக்கு வண்டி ஏறிட்டேன். நமக்கு `சோமசுந்தரானந்தா'னு நாலாவது பேரு ஜஸ்ட் மிஸ்டு’’ - செமத்தியாகச் சிரிக்கிறார் சோமு. ‘ஆரண்ய காண்டம்’ ‘ஜிகர்தண்டா’ என கிடைக்கிற கேப்பில் பின்னியெடுத்தவர், இப்போ ‘ஜோக்கர்' படத்தில் ஹீரோ.

‘`நடிப்பு, எனக்குப் பிடிச்ச விஷயம், அவ்வளவுதான். மத்தபடி அது மேல பெரிய வெறி எல்லாம் இல்லை. சினிமா வாய்ப்பு எல்லாம் தேடினதே இல்லை. தியாகராஜன் குமாரராஜாதான் எப்படியோ என்னைப் பிடிச்சுப்போய் ‘ஆரண்ய காண்டம்’ல நடிக்க அழைச்சுட்டுவந்தார். ஆரம்பத்துல கொஞ்சம் கொடுமையா இருந்தது. ஒவ்வொரு தடவையும் குறைஞ்சது 15 டேக்குக்கு மேல போகும். எனக்கு அவமானமா இருக்கும்; அழுகை எல்லாம் வரும். ‘ஏன் அவமானமா ஃபீல் பண்றீங்க... நடிக்கத்தானே இவ்வளவு வருஷத்தைச் செலவு பண்ணீங்க?’னு குமாரராஜா சொல்வார். நான் இப்படி வந்ததுக்கு அவர்தான் முக்கியக் காரணம்.

அப்புறம் ‘ஜிகர்தண்டா’ என்னைப் பரவலா கொண்டுபோய்ச் சேர்த்தது. பொதுவா, நான் ஸ்கிரிப்ட் கேட்டுட்டுத்தான் நடிப்பேன். அது எவ்வளவு சின்ன ரோலா இருந்தாலும் மொத்த ஸ்கிரிப்ட்டும் தெரியணும். அப்போதான் என்னால முழுமையா அதுல இருக்க முடியும். அப்படி நான் ஸ்கிரிப்ட் கேட்டே பல வாய்ப்புகளை இழந்திருக்கேன். அதுக்காக நான் வருத்தப்பட்டது இல்லை. அப்படி ராஜுமுருகன் என்னைப் பார்க்க வந்தப்பவும் ஸ்கிரிப்ட் கேட்டேன்.

அவர் சிரிச்சுட்டே மொத்தக் கதையையும் சொல்லிட்டு, அறுபது வயசுல வர்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கக் கூப்பிட்டார். ‘ஏங்க... நான் யூத்துங்க! ஏன் என்னை எல்லாரும் கிழவனாவே காட்டணும்னு நினைக்கிறீங்க?’னு காமெடியாச் சொன்னேன். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது. அவர் என்ன கேரக்டர்ல நடிக்கச் சொன்னாலும் நடிச்சிருப்பேன். ஒரு பிட்டைப் போடுவோம்னு நினைச்சு, ‘அந்த லீட் ரோல் ரொம்ப நல்லாருக்கு. அதை என்னால நல்லா பண்ண முடியும்னு தோணுது. அதுக்கு வேணும்னா என்னை ரிகர்ஸ் பண்ணிப்பாருங் களேன்’னேன். ‘நிச்சயமா யோசிக்கிறேன்’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.

மறுநாளே போன் பண்ணி ‘நீங்க லீட் ரோலே பண்ணலாம். ரிகர்ஸ் பண்ணிப் பாப்போம் வாங்க'னார். ஒரு வாரத்துல ‘நீங்கதான் ஹீரோ’னார். ஆனா, ரெண்டு மாசமா நான் நம்பவே இல்லை. அவரை எப்போ பார்த்தாலும் ‘கன்ஃபார்ம் தானா?’ம்பேன். ஒருநாள் அவர் கடுப்பாகி, டேபிள் மேலே இருந்த பிரின்ட்டர் மெஷினைத் தூக்கிக் கையில குடுத்து, ‘கன்ஃபார்ம்தாங்க. என்ன குடுத்தா நம்புவீங்க?’னார். அப்படி ஆரம்பிச்சதுதான் ‘ஜோக்கர்’.

 ‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க!’

நடிப்பு, ஒரு கிராஃப்ட். பத்து வருஷமா தொடர்ந்து இதை ஒரு பயிற்சியா பண்ணிட்டிருக்கேன். ‘ஜோக்கர்’ல அந்த கிராஃப்ட்டுக்கான ஒரு  அர்த்தத்தைப் பண்ணியிருக்கிறதா நம்புறேன். இதுல `மன்னர் மன்னர்'கிற கேரக்டருக்கு லைவ், ஃப்ளாஷ்பேக்னு ரெண்டுவிதமான தோற்றங்கள். ஒருத்தன் வாட்டர் கம்பெனியில் வேலைபார்க்கிற எளிமையான மனுஷன். இன்னொருத்தன் கிழிஞ்ச கோட்டு போட்டுக்கிட்டு கொடை வண்டியில போற வித்தியாசமான மனுஷன். ரெண்டுலயும் முழுக்க வெவ்வேறுவிதமான உடல் மொழி, பாவனைகள் வேணும். வாட்டர் கம்பெனி ஆளுக்கு, ரொமான்ஸ் இருக்கணும்... அது நமக்கு வரவே வராது. கோட்டு பார்ட்டிக்கு அரசியல் வரணும்... அதுவும் கஷ்டம். அதனாலேயே இந்தப் படம் சவாலா இருந்தது.

படத்துல எனக்கு ஒரு பன்ச் டயலாக் இருக்கு. கோபம் வந்தா ‘பகத் சிங்கை அவுத்துவிட்ருவேன் பார்த்துக்க…’ம்பேன். கரெக்ட்டா இந்த டயலாக் சொல்லி முடிக்கும்போது ‘டிங்ங்’னு ரெண்டு கண்ணையும் சிமிட்டணும். இப்பிடி குட்டிக் குட்டியா படம் முழுக்க நுணுக்கமா நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு வசனமோ... காட்சியோ, ஏதாவது ஒரு யோசனையைக் கிளறிவிட்டுட்டே இருக்கும். அப்புறம் கேமராமேன் செழியன், மு.ராமசாமி அய்யா, பவா செல்லதுரைனு கூட நடிச்சவங்க எல்லாரும் மனசுக்குப் பிடிச்ச மனுஷங்க.

 `ஜோக்கர்'ல நான் நடிச்ச டைம், லைஃப்ல எப்பவும் நினைச்சு சந்தோஷப்படுற நாட்களா நிச்சயமா இருக்கும்.

ஹீரோவாத்தான் பண்ணணும்னு எல்லாம் கிடையாது. பிடிச்சதைப் பண்ணணும். மனைவி ருத்ரா, மகள் பர்வதவர்த்தினி, மகன் பார்த்திபன்னு குடும்பத்தோடு திருவண்ணாமலையில தங்கி இருக்கிற வீட்டுக்கு 1,500 ரூபாய்தான் வாடகை. இயற்கை விவசாயம் பண்ற விருப்பத்துலதான் அங்கே போனோம். தேவைக்கு அதிகமான எந்தச் செலவும் எனக்குக் கிடையாது.  நிறைய நிம்மதி வேணும்; நல்ல விஷயங்கள் பண்ணணும். அவ்வளவுதான்!”